Thursday, October 03, 2013

Sri Shirdi Sai Chavadi uthsavam

http://www.youtube.com/watch?v=PV91k5AyvHU


ஸ்ரீ சாய் சத் சரிதம் -37அத்யாயம் -சாவடி தரிசனம் 

ஸ்ரீ சாய் ஒரு இரவில் மசூதியில் உறங்குவார்.மறு இரவில் சாவடியில் உறங்குவார்.
மசூதியில் இருந்து சாவ டிக்கு செல்வதை ஒரு உத்சவமாக ஷிர்டி பக்தர்கள் செய்வார்கள்.

ஷீரடியில் தினம் உற்சவமே 
பேரொளி நயன வைபவமே
தெய்வீக  ஆனந்த தரிசனமே 
மெய் சிலிர்ப்பதொரு அனுபவமே.

ஒரு இரவினிலே சாவடிதன்னிலே 
மறு இரவினிலே மசூதி தன்னிலே 
நித்திரை செய்ய ஷீரடி சாயி 
நித்தியம் நடந்ததே திரு பவனி 

டோலக்கு ஜால்ரா ஒலியுடன் வேதியர் 
ஹரி நாமங்களை ஜெபிப்பாரே 
தாள மிருதங்க ஒலியுடன் பக்தர்கள் 
சாயி நாமங்களை பஜிப்பாரே 

பள பளபள வென் ரு பல்லக்கு மிளிர 
தகு தகு டகுவென்று சியாமா நடக்க 
படபடபடவென்று வாண  வேடிக்கை 
சுடரொளி சுவர்க்கத்தை காட்டிடுமே 

இருபுறமும் வெண் சாமரம் வீசி 
நாற்புறமும் பல அடியவர் சூழ 
பொன்னொளி வதனம் சூரிய ஒளி போல் 
மின்னிட சாயி நடப்பாரே 

மனதில் இத் திரு காட்சியை ரசித்து 
தினமும் சாயியை வணங்குவோம்

Thursday, October 06, 2011

வெற்றித்திருநாள்

அழைத்ததும் உடனே  துர்கையாய் வந்து
கொலுவில் அமர்ந்தது சாய் அன்னைதான்
மன பயம் நீக்கி அக ஒளி தந்திட
கொலுவில் அமர்ந்தது சாய் அன்னைதான்

அழைத்ததுமுடனே லக்ஷ்மயாய் வந்து
கொலுவில் அம்ர்ந்தஹ்டு சாய் அன்னைதான்
வறுமையை  நீக்கி செல்வம் அளித்திட
கொலுவில் அமர்ந்தவள் சாய் அன்னைதான்

அழைத்ததுமுடனே சரஸ்வதியாய் வந்து
கொலுவில் அமர்ந்தது சாய் அன்னைதான்
அஞ்ஞானம் நீக்கி மெய்ஞானம் தந்திட
கொலுவில் அமர்ந்தவள் சாய் அன்னைதான்

நிரந்தரமாய்  என்றும் என்னுள்ளே தங்கிட
வரம் எனக்கருள்வாள் சாய் அன்னைதான்
நன்றியுடன்  தினம் பக்தியை இழைத்து
பணிந்தால் கரைபவள் சாய் அன்னைதான்

சாய் சரணம் தாயே சரணம்

Wednesday, October 05, 2011

sri sai navamani maalaa -navarathri bhajan -9

 
தெவிட்டாத தேனமுதாய் அருளமுதம் தந்தாய்


செவிக்கினிது இறை நாமம் நிறை என்று சொன்னாய்மணமுள்ள மலர்களே கீர்த்தனைகள் என்றாய்

வணங்கித் தினம் துதித்தே பாடிடவும் சொன்னாய்மணிமாலை கோர்த்திடல் போல் இறை நாமம் என்றாய்

எண்ணிடுக சிதறாமல் அவன் நாமம் என்றாய் தடுத்து ஆளும்  வல்லோன்அவனென்று சொன்னாய்

உடும்பெனவே பற்றிடுக பாதங்களை என்றாய்பலமுறைதான் அர்ச்சிக்க அவன் நாமம் என்றாய்

பலம் தந்து காத்திடுவான் அவனென்று சொன்னாய்தரை மீது உடல் பதித்தே வணங்கிடவே சொன்னாய்

வரை இல்லை அவன் கருணை நிச்சயம்தான் என்றாய்கண்ணனிடம் கோபியர் போல் நட்பாகு என்றாய்

எண்ணங்களே புனிதமாகும் அறிவாய் நீ என்றாய்சேவை செய் சேவகனாய் மனம் குளிரும் என்றாய்

தேவை ஏதுமில்லை என உணர்வாய் நீ என்றாய்ஆத்மா நிவேதனமே முக்தி என்று சொன்னாய்

உத்தமர்கள் செல்லும் வழி இதுவென்று சொன்னாய்Shirdi sai saraswathi-navarathri bhajan -8

சாய் சரஸ்வதி கருணை புரிந்ததால்
தமிழ் பாடல் நான் எழுத விழைந்தேனம்மா
சரணம் சரணம் சாய் சரணம்

பிழை பொறுத்து அருள் கொடுத்து ஆசி அளித்ததால்
இசை கோர்த்து நான் பாட விழைந்தேனம்மா

குறையாத சொல் வளமும்
இசை போட்டு பாடிடவும்
உன்னருளைப் பெற்றிடவும்
விழைந்தேனம்மா
கதி நீயே என வேண்டி உன் பாத கமலத்தில்
வீழ்ந்தே கிடந்திட அருள்வாயம்மா

Tuesday, October 04, 2011

சாய் சரஸ்வதி -Navarathri Bhajan -7

சாய் சரஸ்வதி
நான் முகன் நாவினில் நடமிடும் தேவி சரஸ்வதி

மும்முக தத்தாத்ரேய அவதாரம் சாயீ சரஸ்வதிஒரு மனத்துடன் உனை நினைத்ததும் தாயே

இரு கரங்களால் எனை அணைத்திடும் சாயி

.

.ஜெய் ஜகதீஸ்வரி தாயே சரஸ்வதி

ஓம் ஜகதீஸ்வரி சாயீ சரஸ்வதிவெண் தாமரையின் மேல் வீற்றிருந் தெங்ளைக்

காத்திடும் ஞான தேவி நீயே

த்வாரக மாயியில் வீற்றிருந்தெங்களுக்(கு)

கறிவுரை தந்திடும் சாயி நீயே.ஜெய் ஜகதீஸ்வரி தாயே சரஸ்வதிஓம் ஜகதீஸ்வரி சாயி சரஸ்வதிகரங்களில் வீணை இருத்தி எந்நேரமும்

கானம் இசைத்திடும் தாயே சரஸ்வதி.

பக்தர்கள் நாம உச்சாடனம் செய்கையில்

நர்த்தனம் ஆடிடும் சாயி சரஸ்வதி.ஜெய் ஜகதீஸ்வரி தாயே சரஸ்வதிஓம் ஜகதீஸ்வரி சாய் சரஸ்வதிஞானமும் கல்வியும் கேள்வியும் பெருகிட

ஆசியளித்திடு தாயே சரஸ்வதி -நாங்கள்

நாளும் உந்தன் தாள் பணிந்திடவே

வாழ்த்தி அருளிடு சாயி சரஸ்வதி.ஜெய் ஜகதீஸ்வரி தாயே சரஸ்வதிஓம் ஜகதீஸ்வரி சாய் சரஸ்வதி

ASHTA LAKSHMI SAI- NAVARATHRI BHAJAN -6

மங்களம் தந்திடும் ஆதி லக்ஷ்மியாய்
 தான்ய வளம் தரும் தான்ய லக்ஷ்மியாய்
சாயியை தரிசித்தால் மங்கலமே
பவபயம் நீக்கிடும் தைர்ய லக்ஷ்மி
துர்கதி நாசினி கஜலக்ஷ்மியாய்
சாயியை தரிசித்தால் மங்கலமே
சந்தானம் நல்கிடும் சந்தான லக்ஷ்மி
நற்கதி தந்திடும் விஜயலக்ஷ்மியாய்
சாயியை தரிசித்தால் மங்கலமே
ஞானம் தந்திடும் வித்யா லக்ஷ்மி
செல்வம் தந்திடும் தனல்க்ஷ்மியாய்
சாயியை தரிசித்தால் மங்கலமே
சரணம் .............................

Monday, October 03, 2011

Sri Sai Mahalakshmi -navarathri Bhajan -5

சீரடி வாசினியே
அற்புதங்கள் செய்பவளே
சமாதி மந்திரில் கொலுவிருப்பவளே
சரணம் .............
அஷ்ட ஐஸ்வர்யம் தரும், தேவி மகா லக்ஷ்மி
சீலமாய் வாழ சீரருள் புரிபவள் 
சரணம்..............
குணமுடன் வாழக் குறைகளை களைபவள்
வளமுடன்  வாழ வருதுயர் அழிப்பவள்
சரணம்.........
கருமங்கள் நீங்க ஆசியைத் தருபவள்
குரு வாய்  தேவி மகா லக்ஷ்மிSaturday, October 01, 2011

Shirdi Sai mahakali - navarathri Bhajan - 4             மகா காலி மகா துர்கே
சீரடி சாய் அனந்த தாயீ
பக்தருக்கருளும் பரமேஸ்வரி
சீரடி சாய் பிரேம மாய்
துஷ்டரை நசிக்கும் துர்கா தேவி 
சீரடி சாய் கருணை மாய்
பரிவுடன் வரம் தரும் பவானி தேவி

Sri Sai jagadhamba -navarathri bhajan -3

 சாய் மாதா        ஜெயா துர்கா
     சாய் மாதா  ஜகதம்பா
 சாய் மாதா விஸ்வ  ரூபிணி
கொலுவிருந்து அருளம்மா
சாய் மாதா ஜெயா துர்கா
கரம் காட்டி அருளம்ம்மா
பரமேஸ்வரி ஜெயதுர்கா
சாஈச்வரி  அருளம்மா  

Thursday, September 29, 2011