Thursday, December 16, 2010

ஸ்ரீ சாய் துதி பாடல்கள் - 9


நவக்ரஹ நாயகன் சாய்

அற்றைத்  திங்கள் முழுமதி ஒளி ஒன்று
இத்தரை  சாயியாய் இறங்கியதே !
கொவ்வைச் செவ்வாய் வழி அவர் உதிர்த்தவை
மணிகள் மாணிக்க மொழிகளே !
அதியற் புத நாயகர் விழிகளைத் திறந்ததில்
கிடைத்தவை ஆயிரம் வரங்களே !
ஒவ்வொரு வியாழனும் தரிசனம் செய்திடில்
கிட்டிடும் ஆசிகள் கோடிகளே
விடிவெள்ளியைப் போல வந்தவர் தந்தவை
விதியையும் வெல்லும் பேரருளே!
ஈசநீ  எங்கள் அம்மையும் அப்பரும்
என்றெண்ணி அனுதினம் வணங்குவமே!
ஞாயிறு ஒளி போல் எங்கள் வாழ்வும்
சுடர் விட உன் பதம் பணிவோமே !
தீரா குறைகளை தீர்ப்பவன் நீ என
ஓராயிரம் உன் நாமம் சொல்வோம் !
எமக்கே துணை நீயே என்றும் இருந்திடில்
பயமில்லை பயமில்லை பயம்  என்றுமில்லை

ராஜாதி ராஜா யோகிராஜ குரு நீ !
ரவி சந்திர மங்கல புத
குரு வெள்ளி சனி பாம்பிரெண்டும்
சுபமே செய்திட
நவக்ரஹ பலன்களையும்
நீயே தரும் குரு நீ !

சமஸ்த சத்குரு சாயி நாத பிரபு நீ !
ராஜாதி ராஜா யோகிராஜ குரு நீ !
Monday, December 13, 2010

ஸ்ரீ சாயி துதி பாடல்கள் - 8

ஓடக்காரர் சாய்

மனமென்னும் தோணி ஏறி
சினமென்னும் துடுப்பிட்டு
பேராசைச் சரக்கேற்றி
ஆணவமாய்க் கடலாடும்
வாழ்க்கைப் பயணமதில்
துன்பப் புயல் தாக்கி
துயரப் பாறையிலே
மோதிடும் வேளை

ஏலே ஏலே ஏலேலேலேலோ
ஐலசாஐலசா
வந்திடுவான் சாயீசா சாயீசா

கருணை எனும் தோணியிலே

அன்பென்னும் துடுப்பிட்டு
ஆசி எனும் சரக்கிட்டு
வந்திடுவான் ஓடக்காரன்
காத்திடுவான் சாய் ராமன் .

ஏலே ஏலே ஏலேலேலேலோ
ஐலசா ஐலசா
வந்திடுவான் சாயீசா சாயீசா

வாழ்வெனு மாயச் சுழலிலே சிக்கி
வாழ்வாதாரம் துழாவிக் களைத்து
மாய்வோமோ எனத் திகைத்து விழித்து
ஓய்ந்திடும் வேளை தேடி வருவான்
பாய்மரக் கப்பலில் ஏற்றிட வருவான்

ஏலே ஏலே ஏலேலேலேலோ

ஐலசா ஐலசா
வந்திடுவான் சாயீசா சாயீசா

சாய் சாய் சாய் என்று
 என்றும் செபித்தால்
முன் பல பின் பல
சென்மம் எடுத்தால்
முதலிலும் முடிவிலும்
வாய் மறவாது.

ஏலே ஏலே ஏலேலேலேலோ
ஐலசா ஐலசா
சொல்லிடுவோம் சாயீசா சாயீசா

Tuesday, December 07, 2010

ஸ்ரீ சாயி துதி பாடல்கள் - 7

அன்னபூர்னேஸ்வரி சாய்

இன்னம் வேண்டும் என்றிட வைக்கும் பொருளும் அருளுமே.
இன்னம் வேண்டாம் என்றிட வைக்கும் அறுசுவை அன்னமே.
என்றென்றைக்கும் தேவை நமக்கு அருளும் பொருளுமே.
இன்றைக்காவது போதும் என்றிட அறுசுவை அன்னமே.

காசிமானகரிலுன் சீரடி பதித்தாய் அன்னபூரணியாய்
காசிவிச்வேஷ்வரன் சாபம் தீர்த்தாய்  அன்னபூரனியாய்
சீரடி நகரிலுன் சீரடி பதித்தாய் அன்னபூரனியாய்
சீரடி அன்பர்கள் சாபம் தீர்த்தாய் அன்ன பூரணியாய்

அன்னையே தாயே என்றே தினமும் குவளை ஏந்தினாய் நீ
அன்னமிட்டோரை வாழ்த்தி அவர்தம் சாபம் நீக்கினாய் நீ
அன்னையின் பரிவுடன் உன்னிரு கரங்களால் அன்னம் கலந்தாய்  நீ
அன்பர்கள் இன்றி மன்னுயிர் அனைத்துக்கும்  அன்னம் இட்டாய் நீ

முன்னை கருமம் பின்வந்திடினும் இன்னல்கள்  பல தொடர்ந்திடினும் 
பன்மடங்காய் பரிகாரம் செய்த    நன்மை கோடி பலனிதற்கு
உன்னை நாடி பசியென கேட்டு எதுவோ எவரோ வந்திடினும் 
அன்னம் இட்டிட முன் வந்தால்   சிறந்தது அதுவே என்றாய் நீ.

'மன்னுயிர் யாவிலும் யானே உள்ளேன் என்பதை   உணர்' என்றாய் நீ
'அன்னம் இடுதலில் பேதம் தவறு என்பதை   உணர்' என்றாய் நீ
இன்னுயிர்க்  காத்து துன்பம் தீர்க்கும் சாயி அன்னை  பூரணி நீ
கன்றிடம் பசுவாய் கருணை செய்வாய் சாயி அன்னை  பூரணி நீ

அன்ன பூரணி நீ சாயி பூரணி நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
அன்ன பூரணி நீ சாயி பூரணி நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீWednesday, December 01, 2010

ஸ்ரீ சாயி துதி பாடல்கள் - 6

ஒ அம்மா ! ஒரு துண்டு ரொட்டி தாருங்கள்
 
ஸ்ரீ சாயீஸ்வரா சிவா! பிட்சாடனா சிவா !


பித்தாபிறை சூடிபெரு மானேசிவ பெருமானே
பித்தனென்றுனை அழைத்தோர்பக வானேசாயி பகவானே

பிட்டுக்குமண் சுமந்தோன்பெரு  மானேசிவ பெருமானே
கட்டுக்குகோதி அரைத்தோன் -நோய்
கட்டுக்குகோதி அரைத்தோன்பக வானேசாயி பகவானே

பிட்சாடனரென்றுனை அழைப்போர்பெரு மானேசிவ பெருமானே
பிச்சை பாத்திரம் சுமந்தோன் - தினம்
பிச்சை பாத்திரம் சுமந்தோன்பக  வானேசாய்பகவானே

வில்வத்துக்குயர் வளித்தோன்பெரு மானேசிவ பெருமானே
வேம்புக்குஇனிப் பளித்தோன் - தல
வேம்புக்குஇனிப் பளித்தோன்பக வானேசாய்பகவானே

சிரமதில் கங்கை தரித்தோன்பெரு மானேசிவ பெருமானே
சிரடிக்கு வர  வழைத்தான்பக வானே சாய் பகவானே - அதை
சிரடிக்குவர  வழைத்தான் பக வானே சாய் பகவானே

திருநீரணிந்து இருப்பான்பெரு மானேசிவ பெருமானே
திருநீரளித்து காப்பான் - உதி
திருநீரளித்து காப்பான்பக வானேசாய்பகவானேசிவ சிவ சிவ சிவ சாம்ப சிவ
சிவ சிவ சிவ சிவ சாயி சிவ
சிவ சிவ ஹர ஹர சாயி சிவ
ஹர ஹர சிவ சிவ சாயி சிவSaturday, November 27, 2010

ஸ்ரீ சாயி துதி பாடல்கள் - 5

ஸ்ரீ சாய் ரங்கன்

ரங்க ரங்க ரங்கனென்று
பாண்டு ரங்க ரங்கனை
ஷிர்டி சாய் ரங்கனாய்
ஷிர்டி சாய் ரங்கனை
பாண்டு ரங்க ரங்கனாய்
அங்கமெல்லாம்  மண்ணிலிட்டு
பங்கமின்றி பவ்யமாய்
வணங்கி  தினமும் சேவித்தால்
பொங்கும் அவன் அருளுமே
மங்கும் நமது துயருமே

ரங்க ரங்க ரங்கனென்று
திருவரங்க ரங்கனை
 ஷிர்டி சாய் ரங்கனாய்
ஷிர்டி சாய் ரங்கனை
திருவரங்க ரங்கனாய்
அங்கமெல்லாம் மண்ணிலிட்டு

பங்கமின்றி பவ்யமாய்
வணங்கி தினமும் சேவித்தால்
பொங்கும் அவன் அருளுமே
மங்கும் நமது துயருமே.

ரங்க ரங்க ரங்க ரங்கா
பாண்டு ரங்க ரங்க ரங்க ரங்கா
திருவரங்க  ரங்க ரங்கா
ஷிர்டி சாய் ரங்க ரங்கா .

Thursday, November 25, 2010

ஸ்ரீ சாய் துதி பாடல்கள் - 4

அன்னை சக்தி 

சாய் சாய் எனும்போது மழலை ஆகிறேன்.
சாயும் தாயும் ஒன்றுதானே பேதமில்லையே.

சாய் ராமன் நாமம் எனக்கு ஷக்தி தருகுது.
எனை மறந்து அகமகிழ்ந்து இருக்கச் சொல்லுது.

பேதை எனக்கு அனைத்துமாகி ஆசி தருகுது.
மீதி யாவும் தேவை இல்லை என்றுமானது

தகுதிதானா எனக்கு இந்த பேரன்பானது?
தேவைதானா இந்த கேள்வி புத்தி சொன்னது.

நான் நினைக்க ஒன்றுமில்லை அறிய வைத்தது.
சாய் இருக்க பயமுமில்லை புரிய வைத்தது.

சாய் சாய் சாய் என்று துதிக்கச்  சொன்னது.
நோய் இல்லாமல் துயரில்லாமல் வைக்கும் என்றது.

ஓம் சக்தி சாய் ஷக்தி அன்னை சக்தியே
ஓம் சக்தி சாய் ஷக்தி அன்னை சக்தியே

ஸ்ரீ சாய் துதிகள் - 3

குரு வந்தனம்

குருவந்தனம் செய்வோம் - சத்
குருவந்தனம் செய்வோம் -சாய்
குருவந்தனம் செய்வோம்

தாய் தந்தை தோழனுமாய்
உற்றதொரு வழித் துணையாய்
நினைத்ததும் வந்தெம்மை
ஆட்கொள்ளும் குருபரா

வேப்பந்தரு நிழலில்
அமர்ந்தே எமைக் காத்தாய்
த்வாரக மாயியையே
ஒளிர்ந்திடவே   செய்தாய்.

துனியிலே மாந்தரின்
அகந்தயையே எரித்தாய்
எரிந்த உதி அளித்தே
நோய்களை நொடியில் தீர்த்தாய்.

பூவுலகில் என்றுமுன்
சமாதியில்  இயங்குகிறாய்
வணங்குமுன் பக்தருக்கே
ஆசிகள் பல அளிப்பாய்.

ஓம் குருநாதா ஜெய் ஜெய்
ஸ்ரிகுருனாதா ஜெய் ஜெய்
ஓம் குருநாதா ஜெய் ஜெய்
சத்குருநாதா ஜெய் ஜெய்.

Monday, November 22, 2010

ஸ்ரீ சாயி துதி பாடல்கள் - ௨

சாய் சரஸ்வதி

நான் முகன் நாவினில் நடமிடும் தேவி  சரஸ்வதி 
மும்முக தத்தாத்ரேய அவதாரம் சாயீ சரஸ்வதி

ஒரு மனத்துடன் உனை நினைத்ததும்  தாயே
இரு கரங்களால் எனை அணைத்திடும்  சாயி
 .
.ஜெய் ஜகதீஸ்வரி தாயே  சரஸ்வதி
ஓம் ஜகதீஸ்வரி சாயீ சரஸ்வதி

வெண் தாமரையின் மேல் வீற்றிருந் தெங்ளைக்
காத்திடும் ஞான தேவி நீயே
த்வாரக மாயியில் வீற்றிருந்தெங்களுக்(கு)
கறிவுரை தந்திடும்  சாயி நீயே.

ஜெய் ஜகதீஸ்வரி தாயே சரஸ்வதி

ஓம் ஜகதீஸ்வரி சாயி சரஸ்வதி

கரங்களில் வீணை இருத்தி எந்நேரமும்
கானம் இசைத்திடும் தாயே சரஸ்வதி.
பக்தர்கள்  நாம உச்சாடனம் செய்கையில்
நர்த்தனம் ஆடிடும் சாயி சரஸ்வதி.

ஜெய் ஜகதீஸ்வரி தாயே சரஸ்வதி

ஓம் ஜகதீஸ்வரி சாய் சரஸ்வதி

ஞானமும் கல்வியும் கேள்வியும் பெருகிட
ஆசியளித்திடு தாயே சரஸ்வதி -நாங்கள்
நாளும் உந்தன்  தாள் பணிந்திடவே
வாழ்த்தி அருளிடு  சாயி சரஸ்வதி.

ஜெய் ஜகதீஸ்வரி தாயே சரஸ்வதி

ஓம் ஜகதீஸ்வரி சாய் சரஸ்வதி

Thursday, November 18, 2010

ஸ்ரீ சாய் துதி பாடல்கள் - 1

ஸ்ரீ சாய் கணேசா

போற்றுவோம் போற்றுவோம் கணபதியைப் போற்றுவோம்

போற்றுவோம் போற்றுவோம் சாய் கணபதியைப் போற்றுவோம்

போற்றி போற்றி போற்றி போற்றி சித்திவிநாயகா


போற்றி போற்றி போற்றி போற்றி ஷீரடியின் நாயகாபரமசிவன் பார்வதியின் மைந்தனையே போற்றுவோம்

பாமரனாய் உலகிலவத ரித்தவனை போற்றுவோம்

கரிமுகனாய் உருவெடுத்து வந்தவனை போற்றுவோம்

பரிவுடந்தரு நிழலில் அமர்ந்தவனை போற்றுவோம்


அப்பமுடன் அவல் பொரி தந்தவனை போற்றுவோம்

ஷ்ரத்தை சபூரி என்ற தக்ஷிணை தந்து போற்றுவோம்

முருகன் குமரன் வேலவனின் முன்னவனை போற்றுவோம்

குருபரனாய்உலகில் அவதரித்தவனை போற்றுவோம்


வினைகள் தீர இடர்கள் நீங்க செய்பவனை போற்றுவோம்

செல்வ ஞான வளமும் தந்து அருள்பவனை போற்றுவோம்

நினைத்த எண்ணம் செயல்படுத்த செய்பவனை போற்றுவோம்

நலமும் பெற வெற்றி கிட்ட நம்பி அவனை போற்றுவோம்ஓம் சாயி நமோ நமோ ஸ்ரீ சாய் நமோ நமோ


ஜெய் ஜெய் சாய் நமோ நமோ சத்குரு சாய் நமோ நமோ

சாய் சத்சரிதா பாராயண பலன்கள்

சாய் சத்சரிதா பாராயண பலன்கள்

ஸ்ரீ ஷிர்டி சாய் மகானின் சத் சரிதையை மராத்தியில் அந்த தெய்வத்தின் சம்மதத்துடன் எழுதத் துவங்கியவர் ஸ்ரீ கோவிந்தராவ் ரகு நாத் தபோல்கர்.

அதன் ஆங்கில வடிவாக்கம் ஸ்ரீ.குனாஜி அவர்களால் எழுதப்பட்டது.

ஸ்ரீ.சாய் சத் சரிதை இன்று ஒவ்வொரு இல்லத்திலும் பூஜை அறையில் வைக்கப் பட்டு பாராயணம் செய்யப் பட்டு வருகிறது.பொருள் வேண்டுவோர்க்குப் பொருளையும் அருள் வேண்டுவோர்க்கு அருளையும் தந்து பக்தர்களை துன்பத்திலிருந்து காக்கும் குருதேவர் அவர்.

தினமும் விளக்கேற்றிய பிறகு சத் சரிதத்திலிருந்து ஒரு பக்கமாவது பக்தியுடனும் ச்ரத்தையுடனும் தூய்மையான சிந்தனையுடனும் படிப்போர்க்கு சகல சௌபாக்கியங்களும் தரும்.

சாய் சத் சரிதையிலிருந்து சில துளிகளை நான் பகிர்ந்து கொண்டுள்ளேன்.

இதைப் படிப்போர் ஒரு வேளை அந்த சாய் சத்சரிதம் எனும் அமுதத்தைப் பருகாமல் இருப்பின் சிறிதும் தாமதியாமல் சாய் பக்தர்களாகத் திகழ்ந்த அந்த பெரியோர்களின் நூல்களை ஆழ்ந்து படித்து நலம் பெற வேண்டுகிறேன்.

சாய் சத் சரிதத்தை பல முறை படித்து பயன் அடைந்தோர் நான் இது வரை எழுதியதில் தவறு ஏதேனும் இருப்பின் மன்னித்து திருத்தி அருள வேண்டுகிறேன்.

இவ்வாறு அந்த கருணை தெய்வத்தின் சரிதையை நான் எழுத வேண்டும் என்று திரு உளம் கொண்டு என்னை வழி நடத்திய ஸ்ரீ சாய் ராமனின் திரு பாதங்களுக்கு என் பணிவான வணக்கங்களை தெரிவித்து இதை இத்துடன் பூர்த்தி செய்கிறேன்.

ஓம் ஸ்ரீ சாய் ராம்

Thursday, November 11, 2010

ஷிர்டி என்னும் புனித தலம்மானுட வடிவில் வந்த ஜோதி இறை அடி  சென்ற பின்
 நான்கு பாகமாய்  பிரிந்து குருஸ்தான் த்வாரகமாய் ,சாவடி,பூட்டிவாடாவில் சேர்ந்து
நான்கு வேதங்களை உணர்த்தும் தெய்வீக வடிவங்களாயிற்றாம்
எனில் சாய் சக்தி எத்தகையது என்பதை நாம் உணர முடியும்
பல லீலைகளையும் புரிந்து,ஆசிகள் பல நல்கி நம்மிடையே சாய்  வாழ்ந்ததால்
ஷிர்டி புனித தலமாயிற்று.

ஷிர்டி தல மகிமை

சதா சந்தோசம் தந்திடும் ஒரே இடம்தான் சீரடி
பிரகாசமாய் ஒளிர்ந்திடும் சாய் நாதன்  சந்நிதி

விடாம லவனின் பாதங்களைதியானம் செய்து பற்றினால்
வராதவர்க்கும் சேர்த்தவன் கடாக்ஷம் தந்து அருளுவான்
சமாதியில்  லிருந்தும் நானியங்குவேனே என்றவர்
மகானாய் வந்து வாழ்த்திட்ட புண்ணியம் செய் சீரடி

எழாது மற்ற சிந்தனை சொல்லாமல் ஓடும் தீவினை
வினாடி தாம தம் மில்லாமல் சென்றடைவீர் சீரடி

விபூதி மந்திரம் சொல்லி எப்போதும் நுதலில் தரித்திடு

தப்பாது கிட்டும் அவரருள் இப்போதே செல்லு சீரடி.

Saturday, November 06, 2010

அகில இந்தியா சாய் சமாஜம்

அகில இந்தியா சாய் சமாஜத்தை  திரு நரசிம்ஹா சுவாமிஜி துவங்கினாராம்
பின்னர் "ஸ்ரீ சாயி அறிமுகம் " "சாய் பக்தரின் அனுபவங்கள் "சாய்நாத் ஸ்மரணம்  " ஸ்ரீ  ஸ்ரீ சாயி ஹரிகத என்ற நூல் கதா காலக்ஷேபமாக சாய் புகழ் பாடப்பட வேண்டும் என்று எழுதினாராம்
சாய் சத் சரிதத்தை ஆங்கிலத்தில் எழுதும் பணியில் வாழ்நாளில் ஈடுபட்டாராம்
தென் இந்தியா முழுதும் சாயி புகழ் பரவ காரணமானாராம்
சாய்  பஜனை மண்டலிகள் தோற்றுவித்தாராம்
சாய் பக்தர்களுக்கென வழிபாட்டு விதி முறைகளையும் நெறிமுறைகளையும்
எடுத்துச் சொன்னாராம் சாய் பூஜா விதி என்ற நூல்  சாய் சாயி சஹஸ்ரநாமம்  போன்று  பல அரிய  பொக்கிஷ நூல்களை தொடர்ச்சியாக எழுதினாராம்
ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்து ஆறில் சென்னையில் பி.எஸ்.உயர் நிலை  பள்ளியில் முதல் அகில இந்திய சாய் பக்தர்கள் கூட்டம் கூடியதாம்
ஆயிரத்து தொள்ளாயிரத்து  நாற்பத்து ஒன்பதில் அலர்மேல் மங்கா புரத்தில்
சாய் கோவில் உருப்பெற்றதாம்
ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்து மூன்றில் குரு பூர்ணிமை அன்று ஆராதனைகள் துவங்கியதாம்.
சாய் சமாஜம் சீரடி பாணியில் ஸ்ரீ ராம நவமி, குரு பூர்ணிமா, ஸ்ரீ பாபா சமாதி ஆராதனை தினம் மூன்றையும் ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாட ஆரம்பித்தனராம்
சாய் சரிதம் எழுதுவதில் அரும்பாடு பட்டு சாய் நாதன் அருள் ஒன்றே துணையாக
இருந்த திரு சத்குரு நரசிம்ஹா சுவாமிஜி அக்டோபர் பதினேழு ஆயிரத்து  தொள்ளாயிரத்து  ஐம்பத்து ஏழாம் ஆண்டு சாய் பாதம் சென்றடைந்தாராம்
இந்த மகானின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் திரு சாய் தன் சமாதியிலிருந்தும் பக்தர்களை தன்னிடம் எவ்வாறு ஈர்க்கிறார் என்பதற்கு ஒரு அற்புத எடுத்துக்காட்டாகும்
சமஸ்த சத்குருவான திரு சாயியின்  மகிமையை நமக்குரைத்த திரு சத்குரு நரசிம்ஹா சுவாமிஜியின் பாதம் பணிவோம்
சாயி ராம் சாய் ராம் சாய் ராம்

Friday, November 05, 2010

நரசிம்ஹா சுவாமிஜி -

நரசிம்ஹ சுவாமிஜி என்று வணங்கப்படும் திரு பி.வி.நரசிம்மன் என்பவர் திரு சாயியிடம்  ஈர்க்கப் பட்டதே ஒரு தெய்வீக வரலாறு.
அகில இந்திய சாய் சமாஜத்தை உருவாக் கிய மகான் அவராம் 
அரசியலிலும்,சட்ட நிபுணராகவும் புகழ் பெற்றிருந்தாராம்
ஒரு சமயம் அவரது இரு குழந்தைகளும் கிணற்றில் தவறி விழுந்து மரித்தனராம்
இதனால் மனம் உடைந்து வாழ்வின் ரகசியத்தை அறிய சத்குருவைத்தேட துவங்கினாராம்
அருளாளர் திரு ரமண மகரிஷியை சந்தித்தாராம்
அவரிடம் ஆசி பெற்று பண்டரிபுரம் சென்று சுவாமி விட்டலனை தரித்தாராம்
கேட்காவ்ம் என்ற இடத்தில் இருந்த நாராயன் மஹராஜ் அவரை மேற்கே செல்ல பணித்தாராம்
அங்கு மேஹெர் பாபாவை சந்தித்து பின்னர் உபாசநி  பாபாவை சென்றடைந்தாராம்
அவர் மூலம் திரு சாய் மும் மூர்த்தியின் அவதாரம் என்று கண்டறிந்தாராம்
ஷீரடியில் சாய் சமாதியில் நின்றதும் அவர் தேடலுக்கு விடை கிட்டிற்றாம்
திரு சாயியே சமஸ்த சத்குரு என்று உணர்ந்தாராம்
சிறிய கிராமத்தில் இருந்து  சாய் செய்த மகத்துவங்களை உலகம் முழுதும பரப்ப எண்ணினாராம்
வையகத்தார் அனைவருக்குமே சாயியின் அருள் கிட்டச் செய்ய எண்ணினாராம்
சாயி பக்தர்கள் பலரையும் மகாராட்டிரம் முழுதும்  சுற்றி அவரகளிடம் விவரங்களையும் அனுபவங்களையும் கேட்டறிந்தாராம்
பின்னர் சண்டே டைம்ஸ் என்ற பத்திரிகையில் சாயை பற்றி எழுதினாராம்
பின்னர் ஆயிரத்து தொள்ளாயிரத்து  முப்பத்து ஒன்பதில் சென்னை திரும்பினாராம்
மறு வருடம் அகில இந்திய சாயி சமாஜத்தை துவங்கினாராம்

Wednesday, November 03, 2010

உண்மையான பக்திக்கு பாபா தந்த பரிசு - 49

செப்டெம்பர் இருபத்தெட்டாம் நாள் திரு பாபா உடல் நலிவுற்றாராம்
ஆயிரத்து தொள்ளயிரத்து பதினெட்டாம் ஆண்டு பதினைந்தாம் தேதி
விஜய தசமி நாளன்று,ஏகாதசி துவங்கியதும்  பூவுலகை நீத்தாராம்.
அதற்கு முன் கோடீஸ்வரரான பூட்டி என்பவர் கனவில் அவர்  தோன்றினாராம்
ஷீரடியில் ஒரு அழகிய கட்டடம் கட்டி அதை ஒரு இறைவன் இருப்பிடமாக நிர்மாணிக்கும்படியும் சொன்னாராம்
அதே நேரம் உன்னத சீடரான ஷாமா கனவிலும் தோன்றி பூட்டிக்கு  உதவும்படி கூறினாராம்
பூட்டி உடனே பாபாவிடம் ஆசி பெற்று வேலையை துவங்கினாராம்
அழகிய ராதா கிருஷ்ணர் சிலையை வைக்க திட்டமிட்டாராம்
ஆனால் பாபாவோ " நான் அங்கு தங்குவேன் ஆடுவேன் பாடுவேன் என்பாராம்.
பாபா உடல் நலிவுற்றபோது வாகே என்பவர் வந்தாராம்
அவரை ராம விஜயம் என்ற நூலை படிக்கும்படி சொன்னாராம்
 தொடர்ந்து சில நாட்கள் படித்த வாகே களைப்புற்றாராம்
பாபா தன்னை பூட்டி கட்டியுள்ள கட்டிடத்திற்கு அழைத்து செல்ல சொன்னாராம்
இவ்வண்ணம் சொல்லியாவாறு பாயாஜி மீது சாய்ந்து பூவுலகை நீத்தாராம்
இந்து முஸ்லிம் மத நல்லிணக்க செல்வரான அவர் உடல் பூட்டி கட்டிய புதிய  ஆலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது
அதுவே நாம் அனைவரும் தொழும் சமாதி மந்திர் ஆயிற்று.
பாபா உடல் நலிவுற்ற நேரம் அவருடன் சிறு வயது முதலே அன்பு பாராட்டி அவர் சேவையிலே வாழ் நாளை கழித்த தாத்யா படேல் உடல் நலம் குன்றி ரத்த வாந்தி எடுத்து உயிர் பிரியும் நிலையில் இருந்தாராம்.
ஆனால் பாபாவோ அவர் வேதனையை தான் வாங்கிக் கொண்டு தாத்யாவின் உயிருக்கு உத்தரவாதம் அளிப்பதுபோல் தன் உயிரைக் கொடுத்தாராம்.
தன் பக்தருக்காக தன் உயிரை ஈந்த மகான் ஸ்ரீ பாபா
என்? அப்படி தன் இன்னுயிரை அளித்து அவரைக் காத்தார் அந்த பெருமான்?
தாத்யாவின் அன்னை பைஜாபாய், பாபா காடு மேடுகளில் திரிந்து கொண்டிருந்த காலங்களில் அவர் மேல் சாலப் பரிந்து  தாயினும் மேலான அன்புடன் அவரைத் தேடி அலைந்து அவருக்கு பசியாற உணவளித்தாராம்.
பாபாவும் பாயஜாவின் மகனை தன் உயிரினும் மேலாகக் காப்பேன் என்று அவருக்கு வாக்களித்தாராம்
பைஜாபாய் செய்த தொண்டுக்கு நன்றிக்கடனாக தன் மேல் கொண்ட  பக்திக்காக  அவர் தந்த பரிசே அவர் இன்னுயிராம்
பாபா இறுதி நெருங்கும்போது யாரையும் தன்னிடம் இருக்க விடாமல் உணவருந்த சொல்லி அனுப்பி விட்டாராம்
லக்ஷ்மி பாய் ஷிண்டே போன்ற சிலரே இருந்தனராம்
லக்ஷ்மி பாய் ஷிண்டே ஒரு செல்வந்தராம்
ஆனால் த்வாரகமாயியை நாள் முழுதும் துப்புரவு செய்யும் பணியில் ஈடுபடுவாராம்
ஒருமுறை பாபா அவரைத் தனக்கு ஏதேனும் உணவு கொண்டு வரும்படி கேட்டாராம்
உடனே லக்ஷ்மி பாய் ரொட்டியும் பாலும் எடுத்து வந்தாராம்
பாபா அதை அங்கிருந்த நாய்க்கு போட்டு விட்டாராம்
இதக் கண்ட லக்ஷ்மி "தாங்கள் பசிக்கு உணவு கேட்டதால் கஷ்டப்பட்டு செய்து வந்தேன்.அதை இப்படி நாய்க்கு போட்டது ஞாயமா"  என்றாராம்
"நீ என்னை ஏன்  பிரித்து பார்க்கிறாய்?நாயுள்ளும் ஒரு ஆத்மம இருக்கிறது." என்றாராம்
அன்றிலிருந்து லக்ஷ்மி மிகவும் உள்ளன்போடு தினமும் பாபாவிற்கு ரொட்டி செய்து எடுத்து வருவாராம்
பாபா உண்ட மீதியை பிரசாதமாய்  ராதா கிருஷ்ண மாயிக்கும் எடுத்து செல்வாராம்
அவருடைய சரத்தை, பொறுமை இவற்றை மெச்சி பாபா அளித்த பரிசு அவர் வாழ் நாளிலேய மிக விலை மதிப்பற்றதாம்
பாபா தன் இறுதியை நெருங்கும்போது ,
லக்ஷ்மி பாயிடம் முதலில் ஐந்து ரூபாயும் பின்னர் நான்கு ரூபாயும் தந்தாராம்
பாபா பக்தர்களிடம் பெரும் ஒன்பது ரூபாய் தக்ஷிணை பற்றி முன்னமே கூறியுள்ளோம்
பாபா லக்ஷ்மி பாய்க்கு அதன் மகத்துவத்தை விளக்கினாராம்
அது பாபா மேல் லக்ஷ்மி பாய் கொண்ட பக்தியை மெச்சி அவர் அளித்த பரிசே.
நவ வித பக்தி என்பதற்கு விளக்கம் சொன்ன பாபா அதற்கு இலக்கணமாகத் திகழும் தன் பக்தர்களுக்கு அளிக்கும் பரிசும் ஆசியும் மிக உன்னதமானது.
தன் சமாதியிலிருந்தே இயங்கி நம்மைக் காக்கும் சாயி ராமனின் பாதம் பணிந்து அவர் நாமம் போற்றுவோம்
சாயிராம் சாயிராம் சாயிராம்

Thursday, October 21, 2010

ஸ்ரீ சாயி சத்யா வ்ரத பூஜா - 48

மகாராட்டிரத்தை சேர்ந்தவர்கள் சத்யநாராயண விரதம் இருப்பார்கள்.
பீமாஜி படேல் என்பவர் ஸ்ரீ சாயி சத்யா விரத்தத்தை துவங்கியவர்.
அதன் பின்னணியில் அமைந்த சாயி நாதன் அருளைப் பார்ப்போம்.
பீமாஜி மார் வலியால் துன்புற்றாராம்
அதுவே க்ஷய ரோகமாக உருவாயிற்றாம்
ரத்தமாக வாந்தி எடுத்தாராம்
எனவே நானாசாஹிப் சந்தோகருக்கு விரிவாக எழுதினாராம்
அவரோ பகவான் சாயியின் பாதத்தை சரணடைவதே வழி என்றாராம்
பாபாவோ அவரிடம்"இது உன் பூர்வ கர்ம பலன்' என்று சொல்லி விட்டாராம்
பீமாஜி கதறி அழுத தும் பாபா" இந்த த்வாரகமாயியில் உள்ள பாகீர் கருணை உள்ளவர்.அன்புடனும் கருணையுடனும் வியாதிகளை தீர்ப்பார்.கவலைப் படாதே"என்றாராம்
பின்பு பீமாபாய் என்பவர் வீட்டில் தங்க சொன்னாராம்
அந்த வீட்டில் இருந்த போது இரு கனவுகள் மூலமே வியாதியை தீர்த்தாராம்.
ஒரு கனவில் பீமாஜி தான் ஆசிரியர் முன்பு நிற்பதாகவும் அவர் சுவாமி பாட்டை சரியாக ஒப்பிக்காததால் தன்னை சவுக்கால் விளாசுவது போலவும் கண்டாராம்
மறு கனவில் யாரோ தன் உடலில் மேலும் கீழும் கனத்த உருளை கல்லினால் உருட்டுவது போலவும் கண்டாராம்.
அதன் பின் அவர் பூரண குணம் அடைந்தாராம்
ஒரு மருத்துவரோ ஒரு மந்திர வாதியோ இப்பிறவியில் நமக்கு ஏதோ வைத்தியம் செய்து குணப்படுத்துவார்கள்
ஆனால் சாயி என்னும் மருத்துவர், மாந்த்ரீகரால் மட்டுமே நம் எல்லா பிறவி கர்மங்களுக்கும் விடிவு தர முடியும்.
அவர் குணமாக்கும் முறையோ எவருக்கும் புரியாதது.
சாயியை சரணடைந்தால் எப்பிறவி கர்ம வினைகளுக்கும் பரிகாரம் உண்டு என்பது இதிலிருந்து நாம் அறிவோம்
பீமாஜி இதன் பிறகு சாயிக்கு நன்றி செலுத்தும் விதமாக ஸ்ரீ சாயி சத்யா விரத பூஜையை துவங்கி நமக்கெல்லாம் ஒரு வழி முறையும் காட்டினார்.
சாய்ராம் சாய்ராம் சாய்ராம்

Tuesday, October 19, 2010

பக்தரின் துன்பத்தை ஏற்கும் மகான் -47

கபர்தே என்ற பக்தரின்   மகன் ஒருமுறை கடும் காய்ச்சலால் அவதியுற்றாராம்
கொள்ளை நோய் பரவி இருந்ததாம்
அவரது தாய் மிகவும் பதறி விட்டாராம்
சிரடியை விட்டு கிளம்பி அமராவதி சென்று விட எண்ணினாராம்
மாலையில் பாபாவை அணுகினாராம்
தன் மகனின் நிலையை சொன்னாராம்
பாபா அவரிடம் அன்புடன் "வானத்தை இப்போது கருமேகங்கள் சூழ்ந்துள்ளது.
விரைவில் விலகிவிடும்.கவலைப் படாதே என்றாராம்."
சொல்லியபடி தன் கபினியை முன்பகுதியில் எல்லாரும்  பார்க்கும் வண்ணம் விலக்கினாராம்
அங்கு முட்டை அளவு பெரிய கட்டிகள் இருந்ததாம்
என் பக்தனுக்காக நான் துன்பத்தை ஏற்பேன்.வலியைத்தாங்குவேன். என்றாராம்
அங்கிருந்தவர்கள் அந்த மகானின் செயலைக் கண்டு "பக்தனுக்காக மகான்கள் எப்படி மெழுகாக,வெண்ணையாக மனம் இளகுகிரார்கள் என்று உணர்ந்த்னராம்
நீயே சரணம் என்று தஞ்சம் அடைந்த பக்தனின் துன்பத்தையும் சாயி ஏற்பார்
என்பதை உணர்ந்து அவர் பாதங்களை எந்நேரமும் பற்றுவோம்.
சாயி சரணம் சாயி சரணம்  சாயி சரணம்

Thursday, September 23, 2010

நம்பிக்கை வையுங்கள்! சாயி மறுக்காமல் ஏற்பார் - 46

கோவிந்த் பல்ராம் மன்கர் என்பவர் ஷீரடிக்கு செல்ல இருந்தாராம்
செல்லுமுன் திருமதி தாரகத் என்ற பக்தையை பார்க்கச் சென்றாராம்
பாபாவிற்கு அன்புடன் எதாவது கொடுத்து அனுப்ப எண்ணி  அந்த பக்தை வீடு முழுதும் தேடினாராம்
எதுவும் கிடைக்காமல் இறுதியிற் ஏற்கனவே நிவேதனம் செய்த பால் பேடாவை கண்டாராம்
 பாபா ஏற்பாரா என்று எண்ணாமல்  பாபா மேல் கொண்ட அன்பினால் அதை பாபா ஏற்பார் என்று நம்பிக்கை கொண்டு  பாபாவிடம் கொடுக்குமாறு சொன்னாராம்
கோவிந்த் பாபாவை தரிசனம் செய்ய செல்லு முன் இதை பற்றி மறந்து விட்டாராம்
சர்வமும் அறிந்த பாபாவோ "எனக்கு என்ன கொண்டு வந்தாய்" என்றாராம்
கோவிந்த் " எதுவும் இல்லை" என்றாராம்
மறுமுறை தரிசனம் செய்தபோது பாபா இதை கேட்டாராம்
கோவிந்தும் ஒரே பதிலை சொன்னாராம்
பாபா உடனே அவரிடம் "தாரகத் எனக்கு எதுவும் கொடுக்கவில்லையா ?' என்றாராம்
உடனே கோவிந்த் அவரது தங்குமிடம் சென்று பேடாவை கொணர்ந்தாராம்
பாபா அதை மிகவும் விரும்பி சுவைத்து உண்டாராம்
பக்தியுடனும் அன்புடனும் அளிக்கும் தனது பக்தர்களின் காணிக்கையை அது எத்தகையது ஆயினும் ஏற்பார் அந்த பெருமான்.
அந்த சற்குருவை வணங்கி சாய் ராம் என்று கூவி நம்பி அவனைப் பணிவோம்

Friday, September 10, 2010

சாய் பெருமான் சுமந்த பிச்சை பாத்திரம் - 45

சாய் நாதர் தினமும் வீடு வீடாக சென்று உணவு பெற்று வருவாராம்
குறிப்பாக ஐந்து வீடுகளுக்கு செல்வாராம்.
எல்லாம் வல்ல இறைவனுக்கு ஏன் இந்த நிலை என்று பலர் வியந்தனராம்
அவர் நினைத்தால் உலகுக்கே உணவு படைக்கலாமே என பேசினாராம்
சந்ததி,செல்வம், புகழைத் துறந்தவர் யாசித்தே உணவு பெருவராம்
ஏனெனில் சன்யாசிகள் அவர்களுக்கு  எதுவும் இல்லாத நிலையில் யாசித்து உணவு பெருவராம்.
 அவர்களுக்கு உணவு அளிப்பது சம்சாரியின் கடமை என சாத்திரம் சொல்லிற்றாம்
ஆயின் சாய் ஒரு சந்நியாசி அல்லவே !சம்சாரியும்  அன்று!
அவருக்கு உலகே வீடு.உலகோரைக் காப்பதுவே அவர் செயல்.
எனவே அவர் செய்யும் எந்த செயலையும் விமர்சிக்க இயலாது
மற்றும் அவர் மக்களை பாவச் சுமையிலிருந்து காக்கவே பிச்சை பாத்திரம் சுமந்தாராம்
இது எவ்வாறு என்று அறிவோமா ?
உணவு தயாரிக்கையில் ,அதாவது கழுவுவது, இடிப்பது,அரைப்பது போன்ற செயல்களில் ஈடுபடும்போது பல கிருமிகளையும்,ஜந்துக்க்களையும் நாம் கொல்ல நேரிடுகிறது.
அதனால் ஏற்படும் பாவச் சுமைகளுக்குப் பரிகாரத்தையும்  சாத்திரம்  .சொல்லிற்றாம்
பிரம்மனுக்கோ, தேவருக்கோ, வேதத்திற்கோ ,பித்ருக்களுக்கோ, அல்லது வீடு தேடி வரும் அதிதிக்கோ உணவிட்டால் பாவ விமோசனம் கிடைக்குமாம்
சாய்ராம் அவ்வாறு பிச்சை கேட்டு சென்றதன் மூலம் மக்களை பாவத்திலிருந்து காத்தாராம்
அவர் மக்களின் பாவத்தை இரந்து பெற்றாராம்.
அதன் மூலம் நாம் எல்லாரும் உணர வேண்டியது, 'இல்லார்க்கும் வறியவர்க்கும் உணவிட வேண்டியது நம் கடமை மட்டுமின்றி நம் பாவச் சுமையையும் குறைக்கும்' என்பதுவே.
ஒவ்வொரு செயலாலும் வாழ்ந்து காட்டியே நமக்கு வழி காட்டிய ஸ்ரீ சாய் ராமை நன்றி கூறி வணங்குவோம்

Sunday, August 29, 2010

ஜோதியையா சோதிப்பது? - 44

ஹரி கநோபா என்பவர் சாய் லீலைகளைக் கேள்விப்பட்டாராம்.
அவற்றை நம்பாமல் சாயியை சோதிக்க நினைத்தாராம்.
சில நண்பர்களுடன் மும்பையிலிருந்து  கிளம்பி சீரடி வந்தாராம்
அவர் தலையில் அழகிய ஜரி வேலைப்பாடு செய்த பாகை அணிந்திருந்தாராம்
புத்தம் புதிய பாத அணியும் அணிந்திருந்தாராம்
பாபாவை சற்று தொலைவில் கண்டதும் அவரை அருகில் சென்று வணங்க எண்ணினாராம்
 புதிய பாகையையும் பாத அணியையும் கழற்றி ஓரிடத்தில் வைத்தாராம்
ஆனால் அவர் முழு கவனமும் அவற்றின் மீதே வைத்தாராம்
பாபாவை நமஸ்கரித்து விட்டு திரும்பியவர் திடுக்கிட்டாராம்
ஆம். விலை உயர்ந்த பாத அணி தொலைந்திருக்க கண்டாராம்
மனம் ஒடிந்து மதியம் உணவு அருந்த அமர்ந்தாராம்
அப்போது மராத்திய சிறுவன் ஒருவன் பாத அணிகளை ஒரு குச்சியில் சொருகியபடி வருவதைக் கண்டாராம்
வந்த சிறுவன் "உங்கள் பெயர் ஹரியா?கநோபாவின் மகனா? என்றாராம்
ஹரி கனோப பதில் அளித்ததும் பாத அணியை தந்தாராம்
எப்படி நீ கண்டு பிடித்தாய் என்று ஹரி கேட்டாராம்
அதற்கு அவன் பாபா அவர்கள் என்னிடம் இந்த காலனியை தெருவில் எடுத்துக் கொண்டு போய் " இங்கு கநோபாவின் மகன் இருக்கிறாரா?( ஹரி கா பேட்டா )அவர் ஜரி தலைப்பாகை அணிந்திருப்பார்( ஜரி கா பேதா ) என்று கூவி உனக்கு திருப்தி அளித்தால் உரியவரிடம் சேர் " என்று சொன்னதாக கூறினாராம்
ஹரி கநோபா "நான் ஜரிகை தலைப்பாகை அணிந்திருந்ததை எல்லோரையும் போல் பாப்வும் பார்த்திருப்பார். ஆனால் நான் கநோபாவின் மகன் என்று எப்படி அறிந்தார்?
எனவே பாபா யாவும் உணர்ந்த , அறிந்த மகான் என்பதி ஐயமில்லை என்று வியந்தாராம்.
இறைவனை வணங்கும்போதும் இறை உருவாகிய குருவை வணங்கும்போதும் நம் கவனம் அவன் மீதுதான் இருத்தல் வேண்டுமே அன்றி நம் மறுமைக்கு உதவாத பொருட்கள் மீது இருக்கக் கூடாது. அது மட்டுமன்றி அவன்  மீது அளவற்ற நம்பிக்கை வைத்தல் வேண்டும்.சந்தேகம் என்பதே கூடாது.
சத்குரு ஸ்ரீ சாயியை நம்பி  வணங்குவோம்.

Wednesday, June 30, 2010

சன்யாசிக்கு முக்தி தந்த பெருமான் - 43

சென்னையிலிருந்து விஜயானந்த் என்ற சந்நியாசி மானசரோவர் யாத்திரை மேற்கொள்ள விரும்பினாராம்
செல்லும் வழியில் பாபாவின் பெருமைகளை கேள்விப்பட்டு ஷீரடியில் இறங்கினாராம்
சோம்தேவ் சுவாமிஜி என்பவரிடம் மான சரோவர் யாத்திரைக்கான வழிகளை கேட்டாராம்
அவரோ அது மிகவும் குளிர் மிகுந்த,பல மொழிகளை பேசுவோர் நிரந்த கடினமான பயணம் என்று கூறினாராம்
இதனால் விஜயானந்த் பயணத்தை ரத்து செய்து விட்டாராம்
பாபாவை தரிசிக்கச் சென்றாராம்
"இந்த சந்நியாசி இங்கு எதற்கு வந்தார்?" என்று பாபா கடிந்து கொண்டாராம்
(பாபாவின் கோபம்,சாந்தம், இன்மொழிகள், கடிந்துகொள்ளல் யாவையுமே காரணங்கள் அவர் மட்டுமே அறிந்தவையாம்)
மனம் வருந்தினாலும் அந்த சந்நியாசி பாபா தரிசனத்திலே இரண்டு நாட்கள் கழித்தாராம்
பிறகு "தாயார் உடல் நிலை சீர் கேட்டு விட்டது"என்ற ஒரு தகவலுடன் வந்த தந்தியை பாபாவிடம் காட்டி ஊர் திரும்ப சம்மதம் கேட்டாராம்
பாபா அவரிடம்"தாயாரிடம் பாசம் இருப்பவர் எதற்கு சந்நியாசி ஆக வேண்டும்?பந்த பாசங்களை ஒழித்து இறைவனின் அடி பணிவதல்லவோ சன்யாசிக்கு அழகு?என்றாராம்.
பின்னர் " உன் குடிஇருப்பில் சென்று அமைதியாக அமர்.பாகவதம் மூன்று முறை படித்து முடி. ஆசைகளை விட்டொழி.ஹரியை சரணடை" என்றாராம்.
மேலும் அவரது இறுதி நெருங்கி விட்டதை அறிந்த பாபா "ஸ்ரீ ராமா விஜயமும் " படிக்கப் பணித்தாராம்.
லேண்டி தோட்டத்தில் அமர்ந்து பாகவதம் படிக்க ஆரம்பித்தவர் களைப்படைந்து பாப்பாவிடம் வந்தவர் அவர் மடியில் உயிர் நீத்தாராம்.
என்ன ஒரு பேரின்பம்! என்ன ஒரு பாக்கியம்!பெரும் பேறன்றோ !
வேறு பாதையில் செல்ல இருந்தவரிடமும்,தன் திருஷ்டியை செலுத்தி தம்மிடம் வர வைத்து முக்தி அளித்தாரே!பாபாவை சரணடைந்தால் எத்தகைய பேறும் அவரருளால் நமக்கு கிட்டும் என்று உணர்த்தும் இச் சரிதத்தைப் படித்துப் பயனடைவோம்!
சாய் ராம்! சாய் ராம்! சாய்ராம்!

Wednesday, June 23, 2010

சாய் ராம பக்த ஹனுமான் ஸ்ரீ நானாவலி - 42

தர்கத் என்ற குடும்பத்தினரின் அனுபவ பூர்வ விவரிப்பின்படி  :
நானாவலி என்று ஒரு சாய் பக்தர் இருந்தாராம்
அவர் பலவித சேஷ்டைகளும் செய்வாராம்
கோமாளிபோல் தோற்றமும் நடவடிக்கையும் கொண்டவராம்
அவர்  ஹெர்னியா எனும் உடல் உபாதை கொண்டவராம்
எனவே உடலின் பின் புறம் வால் போல் ஆடையை சுத்தி இருப்பாராம்
அதன் பொருட்டு சிறிது கோணல் மாணலாக நடப்பாராம்
வீதியில் அவர் நடந்தால் சிறுவர்கள் அவரை கேலி செய்து துன்புறுத்துவராம்
அவரோ வெகுவேகமாய் சாயிடம் சரண் புகுவாராம்
பணம் பொருள் தேடி ஷீரடிக்கு வரும் பக்தர்களின் நடவடிக்கையை கேலி செய்வாராம்
ஆயினும் ஸ்ரீ சாய் பக்தியில் அனுமனுக்கு நிகராம்
ஒருமுறை பாபாவை இருக்கையை விட்டு எழச் சொன்னாராம்
அதில் தான் அமர்ந்தாராம்
மீண்டும் பாபாவை இருக்கையில் அமரச் சொன்னாராம்
பின்னர் "இந்த இருக்கையில் நீங்கள் ஒருவர் மட்டுமே அமர முடியும்
நான் எப்பவும் உங்கள் காலடியில் அமரவே விரும்புகிறேன் என்றாராம்
திரு பாபாவை இப்படி உரிமையுடன் எவரால் இருக்கையை விட்டு எழச் சொல்லமுடியும்?
பாபாவும் தன் அன்பு பக்தருக்காக அடி பணிந்தாரே!
ஒருமுறை நானாவலி  கவல்யாவை தன்னுடன் வரும்மாறு அழைத்தாராம்
மசூதியின் உள் புகுந்ததும் தன் உருவத்தைச்  சுருக்கி
உத்தரத்திலிருந்து இறங்கும் கண்ணாடி விளக்கைப் பிடித்துக் கொண்டு
தொங்கினாராம்
இவ்வாறு உருவத்தைச் சுருக்க எவரால் இயலும் ஹனுமனை அன்றி?
பாபா மகா சமாதி அடைந்ததும் மிக்க துயரத்தில் ஆழ்ந்த நானாவலி
பதி மூன்றாம் நாள் இவ்வுலக வாழ்வை நீத்தாராம்
ராம பக்தியில் ஸ்ரீ ஹனுமாருக்கு நிகராக ,சாய் ராம பக்தியில் பக்தி செய்தல் என்பதற்கு இலக்கணமாக இருந்த நானாவளியின் வழியை நாம் பின் பற்றுவோம் .சாயி நாதர் அருள் பெற வேண்டின் அறிவுடையவராகவோ, செல்வம் உடையவராகவோ,பெரும் பதவியிலிருப்பவராகவோ, உருவ பொலிவு உடையவராகவோ, ஏன் மனித இனமாக மட்டுமே கூட  இருத்தல் ஒரு தகுதிஆகா.
புழு,பூச்சி,பக்ஷி,மிருகம்,போன்ற எல்லாவற்றையும் நேசிக்க கற்று கொடுத்த ஆசான் அல்லவா அவர்!
ஷீரடியில் லேண்டி தோட்ட முகப்பில் இருக்கும் அந்த நானாவலி என்ற  பக்தரின் சிலையை வணங்குவோம்

சாய் ராம் சாய் ராம் சாய்ராம்

Monday, June 14, 2010

எதையும் அறியும் மாயக்காரர் -41

ஸ்ரீ தாஸ்கனு அவர்கள் கொவ்பினேச்வர கோவிலில் சாய் கீர்த்தனைகள் பாடிகொண்டிருந்தாராம்
அதைக் கேட்டுக் கொண்டிருந்த சொல்கர் என்பவர் இவ்வாறு மனதில் வேண்டினாராம்
"பாபா! நான் ஏழை.என் அலுவலக தேர்வில் வெற்றி பெற்று நல்ல பதவி கிடைத்தால் ஷீரடி வருகிறேன்."
தேர்வில் வெற்றி பெற்று விட்டாராம்
ஆனால் ஷிர்டி செல்ல பணம் இல்லாததால் தினமும் தான் குடிக்கும் தேநீரில் சர்க்கரை போட்டுக்கொள்ளாமல் அந்த பணத்தை சேமித்து பின் ஷிர்டி சென்றாராம்
தரிசனம் முடிந்ததும் பாபா சொல்கர் தங்கியுள்ள இடத்தை சேர்ந்த ஜோக் என்பவரிடம்   "இவருக்கு தேநீரில் நிறைய சர்க்கரை போட்டு இனிப்பாக அளியுங்கள் என்றாராம்"
சொல்கர் திகைத்து மறுபடியும் பாபா காலடியில் விழுந்தாராம்
பிறகு ஜோகிடம் சொல்கர் நடந்ததை சொன்னாராம்
பகவான் நம்மை நாம் எங்கிருந்தாலும் கவனிப்பதோடு நம்முள் புகுந்து நம் எண்ணங்களையும் செயல்களையும் கவனித்து ஆசி அளிக்கிறார் என்பது தெரிகிறதல்லவா?
அற்புத செல்வர் சாய் நாதரை வணங்குவோம்

Thursday, June 03, 2010

சாயிராம் சொன்ன பூர்வ கதை - 40(பாகம் 2)

பாம்பு தவளை இரண்டின் பூர்வோத்திரத்தை சாய் சொன்னது:
ஒரு சிவன் கோயில் பாழடைந்த நிலையில் இருந்திற்றாம்
ஊர் மக்கள் ஒன்று கூடி பணம் திரட்டினாராம்
கருமியும் பணக்காரருமான  ஒருவரிடம் அதைக் கட்டும் பொறுப்பை ஒப்படைத்தனராம்
அவரோ பெரும் பணத்தை தாம் வைத்துக்கொண்டாராம்
ஒரு நாள் சிவன்  அந்த கருமியின் கனவில் வந்தாராம்
உன் கணவரின் செயலில் உனக்கு பொறுப்பு இருக்கிறதாகையால்
நீ உன் பங்காக பணத்தை கொடு என்றாராம்
 அந்த பெண் தன் நகையை விற்று அளிக்க நினைத்தாராம்
அந்த கருமி அந்த நகைக்குரிய பணத்தை தான் கொடுப்பதாக சொல்லி
குறைந்த விலை மதிப்பீடு செய்தாராம்
மேலும் அந்த பணத்திற்கு ஈடாக நிலம் அளிப்பதாக சொன்னாராம்
அந்த  நிலமும் துபாக்கி என்ற பெண்மணி அடமானம் வைத்ததாம்
மேலும் விளைச்சல் இல்லா நிலத்தை அதிக விலைக்கி பூசாரியிடம் அளித்தாராம்
இவ்வாறு மனைவியை, டுபாக்கியை, பூசாரியை, கடவுளையும் ஏமாற்றினாராம்
பின்னர் ஒருநாள் இடி தாக்கி இவர்கள் இறந்தனராம்

மறுபிறவியில் அந்த கருமி பிராமன குளத்தில் பிறந்து வீர பத்ரப்ப என்று அழைக்கப்  பட்டாராம்
அவரது மனைவியோ கோவில் பூசாரிக்குப் பிறந்து கௌரி என
அழைக்கப் பட்டாராம்
துபாக்கி ஒரு கோவில் பணியாளரின் வீட்டில் மகனாகப்  பிறந்து சென்னபச்ப்பா என்று அழைக்கப் பட்டாராம்
பாபா அந்த பூசாரியின் நண்பரானதால் பிக்ஷை கேட்டு அந்த ஊருக்கு வந்த வீரபட்ரப்பாவை கௌரிக்கு மணமுடிக்க சொன்னாராம்
ஆனால் இந்த பிறவியிலும் அவன் பணத்தாசை விடவில்லை
திடீரென, தானமாக அளிக்கப்பட அந்த நிலம் விலை ஏற்றம் கண்டது
முன்  பிறவியில் கௌரி கருமியின் மனைவியாக தன் நகைகளை விற்று அடைந்த நிலம் அது.
அந்த நிலம் விஷயமாக வீரபத்ரப்பாவும் சென்ன பசப்பாவும் சண்டை இட்டனர்.
பாபாவோ கௌரிக்குத்தான் சொந்தம்  என்றும் எவருக்கும் அளிக்க வேண்டாம் என்றும் சொன்னாராம்
அதைக் கேட்ட வீரபத்ரப்பா  சென்ன  பசப்பாவை அடிக்க சென்றாராம்
பாபாவின் காலில் விழுந்து தன்னை விரோதியிடமிருந்து காக்கும்படி அவர் சொன்னாராம்
பாபாவும் தான் அவரை எப்போதும் விரோதியிடமிருந்து காப்பதாக சொன்னாராம்
அடுத்த பிறவியில் பாம்பாக பிறந்த வீரபட்ரப்பாவிடமிருந்து தவளையாக பிறந்த சென்னபச்ப்ப்பாவை காத்தாராம்
என்ன அற்புதமான கருணை செயல் இது

எத்தனை பிறவிகள் எடுத்தாலும் எத்தகைய உரு எடுத்தாலும் பாபாவின் அருள் நம்மைக் காக்கும்.எடுத்த பிறவி யாவிலும் அந்த மகானின் ஆசி பெரும் தகுதியை பெறுமாறு பக்தியும் தூய உள்ளமும் ,கொண்டு பேராசை,பொறாமை,அகங்காரம் அற்ற நல வாழ்வே நாம் வாழ்தல் வேண்டும்.
எப்பிறவியிலும் நம்மை காக்கும் சாயி அடி பணிதல் நமது பெரும் பேறன்றோ?
சாய்ராம் சாய்ராம் சாய்ராம்

Saturday, May 29, 2010

விதைத்ததே அறுவடையாகும் - 40 (பாகம் 1)

சாயிராம் ஒருநாள் சொன்னாராம்
நான் நதி கரை அருகே சென்று கை கால்களை கழுவிக் கொண்டிருந்தேன்
பிறகு குழாயை எடுத்துப் புகைக்கத் துவங்கினேன்
ஒரு தவளை கத்தும் ஒலி கேட்டது
அப்பொழுது அங்கு வந்த வழிப்போக்கன் அது என்னவென்று கேட்டார்
தவளையை பாம்பு விழுங்கப் பார்க்கிறது என்றேன்
தான் நேரில் சென்று பார்த்து வருவதாக சொன்னார்
வந்தவர்"தவளையை பாம்பு விழுங்கிவிடும்" என்றார்
நான் அதை தடுப்பேன் என்றேன்
அங்கு சென்று: ஏய் வீர பத்ரப்பா! இன்னும் உன் பகை தீரவில்லையா?
பசப்பா தவளையாய் பிறந்தது போதாதா?
நீ மாற மாட்டாயா ? என்றேன்
பாம்பு உடனே தவளையை விட்டு விட்டது தவளை ஓடி மறைந்தது
இதை பார்த்த வழி போக்கன் வியந்தார்
அப்போது நான் அவர்களின் பூர்வ கதையை சொன்னேன்
                                                                     

Sunday, May 16, 2010

பாபாவின் உதி சொல்லும் தத்துவம் - 39

பாபா தன் பக்தர்களுக்கு உதி அளிப்பாராம்
அது பல நோய்களைத் தீர்த்தது என்பதை  அறிவோம்
அது வாழ்கைத்தத்துவத்தையும்   போதித்தது என்றே சாயி சரிதம்
எழுதிய பெரியார் சொல்கிறார்
நாம் இப்புவியில்  கண் எதிரே காணும் பொருட்கள் யாவும்
நிலையற்றது .திடமான விறகு கட்டைகள் எவ்வாறு தீயில் சாம்பலாகிறதோ அவ்வாறேஇவ்வுலகில் யாவும்நிலையற்றது. பரப்ரம்மனே நிலையானவர்.அவரை  வணங்கும்
சந்தோஷமே  அன்றி மற்று நாம் அனுபவித்து மகிழும் யாவுமே நிலைக்காது. பஞ்ச பூதங்களாலான நம் உடல் அழியக்கூடியது என்பதை உணர்த்தவே பாபா உதி அளித்ததாக சாய் சரிதம் எழுதிய மகான்கள் சொல்கின்றனர்.

ஜாம்நேரில் சாண்டோர்கருக்கு உதி கிடைத்த அற்புத நிகழ்வு :
ராம்கிர்புவா என்பவர் பாபாவின் பக்தராம்
அவர் பாபாவைத் தரிசித்த பின் தன் ஊர் திரும்ப  விரும்பினாராம்
பாபா அவரை ராமேரில் தங்கி பின் பயணத்தை தொடர சொன்னாராம்
ராம்கிர்புவா தன்னிடம் அவ்வாறு செல்ல போதிய பணம் இல்லை என்றாராம்
ஜல்காவ்ம் வரைதான் செல்ல இயலும் என்றாராம்.
பாபா அவரிடம் "அதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்படும்  நீ செல்.ஜாம்நேரில் என் பக்தன் சாண்டோர்கரின் மகள் மைனாதாய் பிரசவ வலியில் தவிக்கிறார்.ஆபத்தான நிலையில் இருக்கிறார்.இந்த உதியையும் ஆரத்தி பாடலையும் அவரிடம் கொடு"என்றாராம்
ஜல்காவில் இறங்கியபோது இரண்டு அணாக்கள் மட்டுமே வைத்திருந்தாராம்
அவருக்கு ஆறுதல் தரும் வகையில்"இங்கு ராம்கிர்புவா யார்?" என ஒருவர் கேட்டாராம்
உங்களுக்கு நானா அவர்கள் குதிரை பூட்டிய ஜட்கா அனுப்பி அழித்து வர
சொன்னார் என்றாராம்.
வண்டியில் பயணம் செய்தபோது வழியில் சுனை ஒன்றை கண்டதும்
வண்டி ஒட்டி ஜட்காவை நிறுத்தினாராம்
ராம்கிர்புவாவிற்கு உண்ண பழங்களை அளித்தாராம்
வண்டி ஒட்டி முஸ்லிம் போல தோற்றமளிக்கவே அவர் அதை உண்ண தயங்கினாராம்
வண்டி ஒட்டி "நான் இந்துதான்.தயங்காமல் அருந்துங்கள்" என்றாராம்
விடியும் நேரம் வண்டி ஜாம்நேரை நெருகிய போது ராம்கிர் இயற்கை உபாதை கழிக்க
வண்டியை நிறுத்த சொன்னாராம்
முடிந்ததும் திரும்பினால் ஜட்காவையும் வண்டி ஒட்டியையும் காணாமல் ஆச்சர்யம் அடைந்தாராம்
வழி விசாரித்து சாந்தோர்கர் வீட்டை டைந்தாராம்
உதியை அளித்ததும் சாண்ட்தோர்கர் மகளுக்கு அதை  இட்டாராம்
பிரசவம் நான் முறையில் முடிந்ததும் ராம்கிர் வண்டி அனுப்பியதற்கு நன்றி தெரிவித்தாராம்
சாந்தோர்கர் தாம் வண்டி அனுப்பவில்லையே என்று வியந்தாராம்
பாபாவின் மகிமையையும் உதியின் மகிமையையும் அறிந்தவர்க்கு
வண்டி ஒட்டி யார் என்று தெரியாதா?
பக்தருக்காக எதையும் எதையும் செய்வாரே அந்த சித்தர்!

Sunday, May 09, 2010

எளிய முறையில் உபநிஷத விளக்கம் சொன்னவர் -38

தாஸ்கனு என்ற பக்தர்  பல நூலகளையும் கற்றுத் தேர்ந்தவராம்

ஆயினும் ஈஷா உபநிஷத்தை மராத்தியில் மொழி பெயர்க்கும்போது

பல ஐயங்கள் கொண்டாராம்

பாபாவைச் சரணடைந்தபோது அவர் " காகாசாஹிப் த்ஹ்க்ஷித்

வீட்டு வேலைக்காரி உனக்கு விடை அளிப்பாள்"என்றாராம்

அதைக் கேட்ட அனைவரும் பாபா குறும்பு செய்வதாக நினைத்தனராம்

ஆனால் தாச்கனு அவ்வாறு எண்ணாமல் தீட்சித் வீட்டிற்கு சென்றாராம்

அங்கு சென்றதும் அந்த வீட்டு வேலைக்காரச் சிறுமி அழகாக பாடுவதை கேட்டாராம்

"கருஞ்சிவப்பு வண்ண புடவை....அழகான பூக்கள் பின்ன வண்ணக் கரைகள் மின்ன கண்ணைக் கவர்கிறதே" என்பது அந்த பாடல் பொருளாம்

பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தாலும் மகிழ்வுடன் பாடிக்கொண்டிருந்த

அந்த சிறுமி அணிந்திருந்ததோ ஒரு கந்தல் ஆடையாம்

மறுநாள் ராவ் பகதூர் தாச்கனுவிற்கு வேஷ்டி வாங்கி கொடுத்தாராம்

அந்த சிறுமிக்கும் ஒரு புடவை வாங்க வேண்டுமென தாச்கனு வேண்டினாராம்

மறுநாள் அந்த புடவையில் வந்த சிறுமி அழகாக பாடி ஆடினாளாம்

அதற்கு அடுத்த நாள் மீண்டும் பழைய கந்தல் ஆடையில் வந்தாளாம்

அப்பொழுதும் அதே மகிழ்ச்சியுடம் பாடினாளாம்

தாஸ்கனு உடனே ஈஷா உபநிஷத தத்துவத்தை உணர்ந்தாராம்

"ஒருவரது மன நிலையைப் பொறுத்தே அவரவரது இன்ப துன்பம் அமைகிறது" என்று உணர்ந்தாராம்.புற நிலைகள் வேறானாலும் மனமோ மகிழ்வுடன் இருத்தல் வேண்டும் என்பதை அறிந்தாராம்மிகப் பெரிய தத்துவத்தையும் எளிதாக உணர்த்த அந்த சாய் சமர்த்தரைத் தவிர யாரால் இயலும் என்பதை நாம் அறிந்து சாய் ராமை வணங்குவோம்

Sunday, May 02, 2010

சரிகை துணியும் கந்தல் ஆடையும் - 37

தியோ என்ற பக்தர் "ஞானேஸ்வரி" என்ற பக்தி நூலை படிக்க விரும்பினாராம்
பல பக்தி நூல்களையும் படிப்பாராம்
ஆயினும் இந்த நூலை எடுத்தால் படிக்க இயலாமல் தடை வந்து  தவித்தாராம்
சாயினாதரை தரிசித்து இதற்கு வழி தேட விரும்பினாராம்
ஷிர்டி வந்ததும் ஜோக் என்பவரிடம் இதை சொன்னாராம்
ஜோக் அவரிடம் "ஒரு புத்தகத்தை வாங்கி பாபாவிடம் கொடுத்து ஆசி பெற்று
பின்னர் படிக்க ஆரம்பியுங்கள்" என்றாராம்
"ஏன் என் மனதில்  இருப்பதை  பாபாவே அறிந்து கொள்ளட்டும் என்றாராம்
பாபாவை தரிசித்த போது அவரிடம் பாபா  இருபது ரூபாய் தட்சிணை கேட்டாராம்
அன்று இரவு தியோ  பல்க்ராம் என்பவரை சந்தித்தாராம்
அவர் "மதிய ஆரத்தி முடிந்ததும் நான் பாபாவிடம் என் மன குறையை சொல்வது
வழக்கம்" என்றாராம்
மறு நாள் பாபா மீண்டும்  தியோவிடம் தட்சிணை கேட்டாராம்
கூட்டம் அதிகம் இருந்ததால் தியோ தனியே அமர்ந்து விட்டாராம்
அங்கே வந்த பால்க்ராமிடம் "பாபா உங்களுக்கு என்னவெல்லாம் சொல்லிக்கொடுத்தார் .... த்யானம் சொல்லிக்கொடுத்தாரா என்றெல்லாம் வினவினாராம்
சிறிது நேரம் கழித்து பாபா தியோவை கூப்பிட்டனுப்பினாராம்
"தங்க சரிகையில் நெய்த பட்டாடை இருக்கையில் கந்தலாடை எதற்கு என்று கேட்டாராம்
 பிறகு மிகவும் கடிந்து கொண்டாராம்.
அப்போதுதான் தியோ பாபா சொன்னதை புரிந்து கொண்டாராம்.
சரிகை ஆடை போல் சாயி இருக்கும் போது மற்றவரிடம் ஏன் கேட்கிறாய் என்று பகவான் சொன்னதின் பொருள் என்று அறிந்தாராம்
பாபா அவரிடம் "தினமும் ஞாநேஸ்வரியிலிருந்து ஒரு பக்கம் படி.படித்ததை மற்றவர்க்கும் விரித்துச் சொல்" என்றாராம்
தியோ மிகவும் மகிழ்ந்தாராம்.
மறு வருடம் கனவில் பாபா தோன்றி "இப்போது புரிகிறதா? "என்றாராம்
"இப்பொழுதும் புரியவில்லை" என்று தியோ சொன்னாராம்
நிதானமாக கவனமாக படி.இப்போது என் முன் படி ஞான மார்க்க அத்தியாயத்தை படி என்றாராம்.
புத்தகத்தை எடுத்து வர செல்கையில் கனவு கலைந்ததாம்
தியோ அடைந்த பரவசத்திற்கு எல்லை எது?
ஞானமற்றோற்கு ஞானம் அளிப்பதும்,படிப்படியாக பாமரனும் புரிந்து கொள்ளும்வண்ணம் அருள் புரிந்து தெளிவிப்பதும் ஸ்ரீ சாயியின் கருணைதானே!மேலும் குருவிடம் நேரடியாக சரணாகதி அடைவது ஒன்றே சிறந்த வழி என்ற நெறியையும் இது விளக்குகிறது.
சாயி இருக்க பயமேன்?
மனக்குறையை அவரிடம் நேரே சொன்னாலே போதுமே.
பக்தருக்காக உடனே வருவாரே?
சாயி ராம்.

Thursday, April 22, 2010

அழைத்தால் வருவார் எவ்வுருவிலும் - 36

பக்தர்கள் அன்புடன் அழைத்தால் தவறாமல் வருவார் சாயி ராம்
ஆனால் அவர் எந்த உருவிலும் வருவாராம்
இதை அறிந்து கொண்டார்  மட்டுமே அவர் வருகையை உணருவராம்
ஹெமட்பந்த் மிகச் சிறந்த சாய் பக்தர் அல்லவா?
எனவே ஒரு முறை அவர் கனவில் சாய் வந்தாராம்
உன் வீட்டில் உணவருந்த வருகிறேன் என்றாராம்
அன்று பவுர்ணமி தினம் .ஹோலி பண்டிகை.
அவர் தன் மனைவியிடம் கனவை சொன்னாராம்
அவர் மனைவியோ நம்பிக்கை இன்றி
பலவித நிவேதனங்கள் படைக்கப்படும் த்வாரக மாயியை விட்டு
எளிய உணவு உண்ண நம் வீட்டுக்கு எங்கே வருவார் என்றாராம்
இருப்பினும் உணவருந்தும் நேரம் வந்ததும் வீட்டிலுள்ளவர்களோடு
ஒரு தனி இலை விரித்து விருந்தினர் அல்லது அகதிக்கு என்று
பதார்த்தங்கள் பரிமாறப்பட்டனவாம்
அனைவரும் மந்திரம் சொல்லி இலையை சுத்தி செய்தனராம்
ஸ்ரீ கிருஷ்ணருக்கு நிவேதனம் செய்தனராம்
இலைகளில் நெய் பரிமாறினராம்
அந்த நேரம் காலடி ஓசை கேட்டதை ஹெமட்பந்த் உணர்ந்தாராம்
உடனே ஹெமட்பந்த் எழுந்து விரைந்தாராம்
கதவைத்திறந்ததும் "உணவருந்தும் நேரம் பாதியில் எழுந்து வந்தீர் போலும்
நாங்கள் அலி முகமத் , மௌலானா இஸ்மு முஜவர்.
உங்களிடம் சமர்பிக்க ஒன்று உள்ளது. அதை பெற்றுக்கொள்ளுங்கள்.
அதன் பின்னணியை பிறகு வந்து கூறுகிறோம்" என்றனராம்
அவர்கள் அளித்த  பொட்டலத்தில் சாயியின் திரு உருவ படம் இருந்தததைப் பார்த்தாராம்
ஹெமட்பந்த் மெய் சிலிர்த்து கண்ணீர் சொரிந்தாராம்
சாயியே உணவருந்த வந்து விட்டார் என்று அறிந்தாராம்
அந்த திரு உருவ படத்தை பரிமாறப்பட்ட இலையின் முன் வைத்து வணங்கி
அனைவரும் உணவருந்தினராம்
அன்புடன் பக்தியுடன் அழைத்தால் வருவார் அந்த சாய் நாதர்
வருவார் என்ற நம்பிக்கையும் வைத்திடல் வேண்டும்
எவ்வுருவிலும் வருவார் என்றும் அதை உணர தூய பக்தியும் வேண்டும்.
அவரை வணங்கி அவரையே நினைத்து இருத்தல் நம் பாக்கியம் அன்றோ

Wednesday, April 14, 2010

விதைத்ததே அறுவடையாகும் - 35

காகா மகாஜனியின் நண்பர் ஒருவர் இருந்தாராம்
உருவ வழி பாட்டிலோ தனி மனித வழிபாட்டிலோ நம்பிக்கை அற்றவராம்
ஒரு ஆர்வம் காரணமாய் சாயியை  தரிசிக்க விழைந்தாராம்
ஆனால்  அவரை வணங்கவோ அவருக்கு தட்சிணை கொடுக்கவோ சம்மதியேன் என்றாராம்.
இவர்கள் சீரடியை அடைந்தனராம்
பாபா இவரை நோக்கி "வாருங்கள் ஐயா" என்றாராம்
அந்த குரல் நண்பரின் தந்தையின் குரல் போல ஒலிக்கவே நண்பர்
உடனே பாபாவின் கால்களில் வீழ்ந்து வணங்கினாராம்
காலையிலும் மதியமும் பாபாவை தரிசித்தனராம்
இரு முறையும் பாபா காகாவிடம் தட்சிணை கேட்டாராம்
நண்பர் தன்னிடம் ஏன் தட்சிணை கேட்கவில்லை என்று பாபவிடமே கேட்டாராம்
"நீ  கொடுக்க விரும்பவில்லை. .  அதனால் கேட்கவில்லை.
இப்போது கொடுக்கிறாயா/என்றாராம்.
அவர் காகா அளித்த அதே பதினேழு ரூபாயை அளித்தாராம்.
பாபா அவர்களை ஆசிர்வதித்து அனுப்பினாராம்.
பிறகு இவ்வாறு சொன்னாராம்
"நான் எவரிடமிருந்தாவது ஒரு ரூபாய் பெற்றால் அதை பத்து மடங்காய் திருப்பித்தருவேன்
யாரிடமிருந்து பெற வேண்டும் என்பதை அந்த இறைவன் தீர்மானிப்பார்
நீங்கள் ஏற்கனவே கடன் பட்டிருந்தால் அதை திருப்பி தருகிறீர்கள்
செல்வம் தருமம் செய்ய பயன் பட வேண்டும்
சொந்த சுகத்திற்காக உபயோகிக்க கூடாது.
நீங்கள் கொடுத்தால்தான் உங்களுக்கு அது திரும்ப கிடைக்கும்
கொடுப்பதன் மூலம் வைராக்கியம், பக்தி,ஞானம் வளரும்." என்றாராம்.

Sunday, April 11, 2010

கனவை நனவாக்குபவன் அவனே - 34

நாசிக் நகரில் காகாஜி வைத்யா என்பவர் இருந்தாராம்
சப்த ஸ்ரிங்கி மாதா ஆலயத்தில் பூசாரியாக  இருந்தாராம்
ஆயினும் பெரும் மனக்குழப்பத்திலும் அமைதியற்றும் இருந்தாராம்
அன்னையை மனமுருகி வேண்டி நின்றாராம்
அவர் கனவில் அன்னை தோன்றி"நீ பாபாவிடம் செல்.மன அமைதி கிட்டும்" என்றாராம்
பாபா யார்,எங்கிருக்கிறார் என்று அறிவதற்குள் கனவு கலைந்து விட்டதாம்
எனவே அன்னை த்ரயம்பகேஷ்வர் எனப்படும் சிவனை பாபா என்று சொல்லி இருப்பார் என எண்ணி த்ரய்ம்பகேஷ்வரம் சென்று  ருத்ரம் சொல்லல், அபிஷேகம் செய்தல் என்று நாட்களை கடத்தினாராம்
மனம் அமைதி அடையவில்லையே என்று மீண்டும் அன்னையை வேண்டினாராம்.
அன்னை தோன்றி"நான் த்ர்யம்பகேஸ்வரை சொல்லவில்லை.சாய் சமர்த்தரை சொன்னேன்"என்றாராம்
மீண்டும் சாய் யாரென்று புரியாமல் காகாஜி தவித்தாராம்
ஆனால் சாயியை ஒரு பக்தர் காண விரும்பினால்,சாயியே  அவரைத்தன்னிடத்தே
வரச்செய்ய வழியும் செய்து கொடுப்ப்பார்.அவர் நினைத்தால்தான் மரத்தின் இலை கூட அசையுமன்றோ?
ஷாமா என்பவர் பாபாவின் பெரும் பக்தராம்
அவர் சிறு வயதில் நோயுற்றபோது அவர் தாயார் சப்த ஸ்ரிங்கி அன்னையிடம்
வேண்டுதல் வைத்தாராம்
தன் பிள்ளையை  காப்பாற்றினால் சன்னதிக்கு அழைத்து வருவதாக வேண்டினாராம்
சிறிது காலத்திற்கு பிறகு அன்னையின் மார்பகத்தில் தொந்தரவு ஏற்பட்டதாம்
வெள்ளியில் மார்பகம் செய்து போடுவதாக வேண்டினாராம்
இறக்கும் தருவாயில் இதை மகனுக்கு சொன்னாராம்
ஆனால் ஷ்யாமா இதை மறந்து விட்டாராம்
ஒரு சோதிடர் இதை நினைவுபடுத்தியதும் ஷ்யாமா பாவிடம் சென்றாராம்
"நீயே என் தெய்வம்.அதனால் இந்த வேண்டுதலை உனக்கே செய்கிறேன் "என்றாராம்
பாபா மறுத்துவிட்டு அவரை சப்த ஸ்ரிங்கி அன்னைக்கு காணிக்கையை செலுத்த சொல்லிவிட்டாராம்.
இவ்வாறு ஷ்யாமா காகாஜி இருக்கும் ஊருக்கே வந்து விட்டாராம்.
காகாஜி அவர் யாரென்று வினவினாராம்
ஷிரிடியில் இருந்து வந்ததாக சொன்னதோடு பாபாவின் லீலைகளையும் சொன்னாராம்
இதைக்கேட்ட காகாஜி மகிழ்வுற்று ஷ்யாமாவுடன் ஷிர்டி சென்றாராம்
சாய் நாதனை தரிசித்ததும் அந்த தரிசன இன்பமே அவரை சாந்தமாக்கிற்றாம்
சில நாட்கள் இருந்து தரிசித்த பின்னர் பாபாவின் ஆசியுடன், உதியுடனும்
அவர் அமைதியாக ஊர் திரும்பினாராம்.
நீயே எல்லாம் என்ற ஷ்யாமாவை அன்னை சப்த்ஸ்ரின்கியை தரிசிக்க
அனுப்பியும் த்ரயம்பகேஸ்வறரை  தரிசித்த காகாஜியை  தன்னிடம் வரவழைத்ததும்
அந்த பகவானின் லீலையன்றி வேறேது!

Tuesday, April 06, 2010

நம்மையும் நம் எண்ணங்களையும் ஆட்டுவிப்பவன் -33

ஸ்ரீ வசுதேவானந்தா சரஸ்வதி என்ற யோகி, தத்தாத்ரேயரின் பக்தராம்
ஆந்திராவில் கோதாவரி கரையருகே முகாமிட்டிருந்தாராம்
அவரை தரிசிக்க புண்டரீகராவ் என்பவர் நண்பர்களுடன் சென்றாராம்
பேச்சு வாக்கில் ஷிர்டி செல்வது  பற்றியும் சாய்  நாதர் பற்றியும் பேசினாராம்
அதைக்கேட்ட சுவாமி ஒரு தேங்காயை அவர்களிடம் கொடுத்தாராம்
"இதை ஷீரடியில் இருக்கும் என் தமையன் சாயிடம் கொடுத்து  என் பணிவான வணக்கங்களைத் தெரிவியுங்கள் .என்னை மறக்க வேண்டாம் என்று சொல்லுங்கள்:" என்றாராம்
நண்பர்கள் அதை பெற்றுக்கொண்டு ஷிர்டி பயணப் பட்டனராம்
செல்லும் வழியில் ஒரு ஆற்றினருகே அமர்ந்து சிறிது அவல் உண்டு விட்டு
நீரருந்தலாம் என்று அமர்ந்தனராம்
அவல் காரமாயிருந்ததால் ஒருவர் தேங்காயை உடைத்து அந்த தேங்காய் துருவலை
சேர்த்ததால் காரம் குறையும் என்று சொன்னாராம்
தேங்காய் உடைக்கப்பட்டு துருவல் சேர்க்கப்பட்டு அவல் உண்ணப்பட்டதும்
அந்த தேங்காய் சுவாமிகள் சாயியிடம் சேர்க்க சொன்னது என்று உணர்ந்து
பதறி விட்டனராம்
சீரடி சென்று அந்த நாதன் காலில் வீழ்ந்து மன்னிக்கும்படி கேட்டனராம்
"உங்களிடம் அந்த தேங்காயை ஒப்படைக்கும்படி செய்ததும் நானே.உடைக்கச் செய்ததும் நானே" என்று உணருங்கள்
நல்லதோ கேட்டதோ எல்லா செயல்களுக்கும் அவனே பொறுப்பு.
நான் என்ற அகம்பாவத்தை களையுங்கள் .எல்லாவற்றுற்கும் அவனே கர்த்தா என்று உணருங்கள் .அவனடியில் வீழ்ந்து சரணடையுங்கள்" என்றாராம்
எப்பேர்பட்ட தத்துவ நெறி
அற்புதமாக எளிமையாக நம்மை மேம்படுத்தும் அந்த  சாய் நாதனின் பாதங்களில் வீழ்ந்து வணங்குவோம்

Sunday, March 21, 2010

அவனன்றி ஓரணுவும் அசையாது-32

ஒரு முறை கோவாவிலிருந்து இருவர் பாபாவைத் தரிசிக்க வந்தனராம்.
ஒருவரிடமிருந்து தட்சிணையாக பதினைந்து ரூபாய் பெற்றாராம்
மற்றொருவர் முப்பத்தைந்து ரூபாய் தாமாகவே கொடுத்தாராம்
பாபா அதை ஏற்க மறுத்துவிட்டாராம்.
ஆனால் அதைத் தொடர்ந்து பாபா  ஒரு கதை(போல ) சொன்னாராம்
"நான்  எழ்மையிலிருந்தபோது நல்ல வேலை கிடைத்தால் முதல் மாத சம்பளத்தை இறைவனுக்கு அர்ப்பணிப்பதாக சொன்னேன்.பதினைந்து ரூபாய்க்கு வேலை கிடைத்தது.மேலும் மேலும் உயர்வூதியமும் கிடைத்தது.ஆயினும் என் வேண்டுதலை மறந்து விட்டேன்"என்றாராம்.
அடுத்தகதை :(பாபா சொன்னது)
"நான் கடலோரமாக சென்று கொண்டிருந்தேன்.அங்கே ஒரு பெரிய இல்லத்தை பார்த்தேன்.தங்க இடம் கேட்டேன்.ஒரு அலமாரி அருகே இடம் கொடுத்தார் அந்த வீட்டுக்காரர்.ஆனால் இரவு என்னிடமிருந்த முப்பத்தைந்தாயிரத்தை எடுத்து விட்டார் .நான் கதறி அழுதேன்.அவ்வழியே சென்ற பெரியவர்"நான் சொல்வது போல் செய்தால் நீ பணத்தை திரும்ப பெறலாம்.நான் ஒரு பாகீர் இருக்குஇடத்தை சொல்கிறேன். அவரை சென்று பார்.அவர் காலடியில் உன் குறையை சமர்ப்பணம் செய்.அதுவரை .உனக்கு பிடித்த ஒரு விஷயத்தை அந்த பணம் கிடைக்கும்வரை விட்டு விடுவதாக பிறகு பணம் கிடைத்ததும் தொடர்வதாக உறுதி எடுஎன்றார்.நானும் அவ்வாறே விரதம் இருந்தேன். எடுத்தவரே தவறை உணர்ந்து திருப்பி கொடுத்து விட்டார். எனவே அந்த பாகீரை தரிசிக்க முடீவு செய்து பயணம் துவங்கினேன். ஆனால் அந்த படகில் கூட்டம் அதிகம் இருந்ததால் செய்வதறியாமல் நின்றேன். அப்போது ஒருவர் என்னை அழைத்து சென்று படகில் ஏற்றின்னார்" என்றாராம்.
இந்த கதைகளை பாபா வாய் வழி கேட்டதும்  இருவரும் திகைத்தனராம்
ஏனெனில் அந்த கதை அவர்கள் வாழ்வில் நடந்தவையே என்று ஷாமாவிடம் சொன்னாராம்
ஒருவர் சொன்னாராம்
"எனக்கு பதினைந்து ரூபாய்   சம்பளத்தில் வேலை கிடைத்தது.நான்  என் வேண்டுதலை மறந்தேன்.தத்தாவிடம் வேண்டினேன்.அதையே பாபா நினைவூட்டினார்" என்றாராம்.
மற்றொருவரோ பாபா சொன்னபடி அதே முப்பத்தைந்து ஆயிரம்  தொகையை நான் இழந்து கிடைக்கப் பெற்றேன்.ஆனால் பாபாவை தரிசிக்க மறந்தேன். ஒருநாள் பாபா கனவில் தோன்றினார்.அதனால் பாபாவை தரிசிக்வந்தேன்.கூட்டமாக இருந்த  படகில் ஏறவும் எனக்கு ஒருவர் உதவினார் என்றாராம்.
நமது வேண்டுதல்களை செவி சாய்க்கும் தெய்வத்திற்கு நம் நன்றியைக் காட்டவும் மறக்கலாமோ?
அவ்வாறு மறக்கும் போழ்திலும் நாம் பாவச் சுமையை  சுமக்காதிருக்கும் பொருட்டு அவரே நமக்கு நினைவூட்டி காத்திடுவார்.அதுவே அந்த தெய்வத்தின் சிறப்பு
சகுன பர பிரம்மன் ஸ்ரீ பாபாவை வணங்கி அவரருள் பெறுவோம். சாய் ராம்.

Saturday, March 13, 2010

மாம்பழலீலை - 31

தாமு அண்ணா பாபாவின் சீடருள் ஒருவராம்
அவரும் ஒரு உண்மைச் சம்பவத்தினாலே மன பக்குவம் அடைந்தாராம்
நண்பர் ஒருவர் வியாபாரத்திற்கு துணை சேர அழைத்தாராம்
அது பெருத்த லாபம் கொடுக்கும் என்றாராம்
தாமு அண்ணா சாமா அவர்களுக்கு எழுதி பாபாவின் அனுமதி கேட்டாராம்
பிறகு நேரிலும் வந்தாராம்
அதற்கு பாபா "அவனுக்கு வானத்தை பிடிக்கும் எண்ணமா
அரை துண்டு ரொட்டி போதாதாமா? பேராசை வேண்டாம் .
இருப்பதில் நிறைவு கொள்ள சொல்" என்றாராம்
தாமு அண்ணாவுக்கு பாபாவை கேட்டிருக்க கூடாதோ என்று தோன்றியதாம்
மீண்டும் நெல் கொள்முதல் வியாபாரம் செய்ய எண்ணி பாபாவை கேட்டாராம்
"ஒரு ரூபாய்க்கு ஐந்து படி வாங்கி ஏழு படி ஒரு ரூபாய் என விற்பாய்" என்றாராம்
தாமு அண்ணா அதையும் வருத்தத்துடன் கை விட்டாராம்
பிறகு அந்த முறை பெரு மழை பெய்ததால் விலை குறைந்திற்றாம்
நெல்லை சேமித்து வைத்தவர்கள் வியாபாரத்தில் நட்டம் அடைந்தனராம்
தாமு அண்ணா தன் தவறை உணர்ந்தாராம்
அது முதல் தாமு அண்ணாவின் பக்தி பாபாவின் மேல் பெருகிற்றாம்
அவருக்கு மனைவிகள் இருந்தும் மழலை இன்றி தவித்தாராம்
ஜாதகத்தில் பாவி கிரகம் உளதென்று சோதிடர் சொன்னாராம்
ஆயினும் பாபாவின் மேல் நம்பிக்கை வைத்து அவர் காத்திருந்தாராம்
ஒரு நாள்  மாம்பழக் கூடை பாபாவிற்கு ராலே என்பவர் அனுப்பினாராம்
அதில் நான்கு பழங்களை பாபா தம்மிடம் வைத்துக் கொண்டாராம்
"இது என் தாமுவிற்கு"  என்றாராம்
தாமு அண்ணா பாபாவைத் தரிசிக்க வந்தாராம்.
பாபா "இதை பலர் விரும்பினாலும் இது யாரைச் சேர வேண்டுமோ அவர்கள் உண்ணட்டும் மரிக்கட்டும்"என்றாராம்.
இதைக்கேட்ட தாமு அண்ணன் திடுக்கிட்டாராம்
மனம் வருந்தினாராம்
மகால்சாபதி அவரிடம்"பாபா மரிக்கச் சொன்னது மமதை , இறுமாப்பு, கர்வம் "இவற்றைத்தாம் "என்றாராம்
தாமு அவர்கள் வந்ததும் பாபா  "இதை உன் இளைய மனைவிக்கு கொடு என்றாராம்
நான்கு பெண் நான்கு  ஆண் என மழலைகள் பிறக்கும் என்றாராம்
அவ்வண்ணமே நடந்ததெனச் சொல்லவும் வேண்டுமோ?
மாம்பழ லீலை புரிந்து ஜோதிடரை பாபா  பொய்யராக்ககினாராம்
இந்த அற்புத லீலை புரிந்த ஸ்ரீ சாயியை , பக்தர்களின் வேண்டுகோளை நிறை வேற்றும விருக்ஷத்தை ,என்றென்றும் அவன் பாதம் பற்றி சம்சாரம் என்ற கடலை கடக்க உதவும் தோணியை வணங்கி போற்றுவோம்.சாயி ராம்.

Sunday, March 07, 2010

நம் நடத்தை பற்றி பாபாவின் அறிவுரை - 30

உனை நாடி வரும் மனிதரையோ உயிரினத்தையோ வரவேற்று உபசரியுங்கள் என்பாராம்.

ஏதோ ஒரு தொடர்பு இருப்பதால்தான் அவர்கள் வருகிறார்கள் என்றுரைப்பாராம்

தாகத்திற்கு நீரும்,பசித்தோருக்கு  ரொட்டியும், உடுத்த ஆடையும் அளியுங்கள்
கடவுள் மனமகிழ்ந்து உங்களை வாழ்த்துவார் என்பாராம்.

உங்களிடம் அவதூறு பேசுபவர்களிடம் வெறுப்பைக்காட்டாதீர்கள்
பொறுத்துக்கொண்டால் உங்களுக்கு மகிழ்ச்சியே கிட்டும் என்பாராம்

உலகமே தலை கீழ சுழன்றாலும் நீங்கள் இருக்கும் இடத்தில் இருங்கள் என்பாராம்

உங்களைச் சுற்றி நடப்பதை அமைதியுடன் கவனியுங்கள் என்பாராம்.

எனக்கும் உங்களுக்கும் இடையே இருக்கும் சுவரை உடையுங்கள்
அப்போது பாதை தெளிவாகும் என்று சொல்வாராம்

எல்லார்க்கும் இறைவன் ஒருவனே எசமானன்
அவர் செயலே அற்புதமானது, அலாதியானது
இறைவனை பணிந்து  வேண்டினால் எல்லா நலமும் கிட்டும் என்பாராம்

அவர் நமக்கு எது நல்லதோ அதையே செய்வார் என்று நம்புங்கள் என்பாராம்.

நாம் எந்த செயலை செய்தாலும் குருவிற்கு அர்ப்பணம் செய்ய வேண்டும்
குருவும் இறைவனும் ஒன்றே.
நினைப்பு, நடப்பு யாவிலும் பாபாவை எண்ணியே  செய்தால்
கனவிலும் நனவிலும் பாபாவின் உருவமே தோன்றும்.
இச்சைகள் மறைந்து அவரிடம் ஒன்றிவிடுவோம்
மனம் நிம்மதி அடைந்து சுகமாக வாழலாம்
சகுன பர பிரமன் சாயினாதனை பணிந்து வணங்குவோம்.
சாய் ராம்

Thursday, February 25, 2010

ஸ்ரீ பாபாவின் சாவடி ஊர்வலம் - 28

சூரியன் உதித்ததும் துதி செய்ய வேண்டிய நாமம் ஸ்ரீ சாய் ராம்
நடக்கும்போதும் நிற்கும்போதும் துதி செய்யுங்கள் ஸ்ரீ சாயி ராம்
எல்லாம் நீயே என்றும் நீயே என்று அற்பணியுங்கள் ஸ்ரீ சாயி ராம்
உறங்குமுன் நினைத்திட, மகிழ்ந்தே உறங்கிட படியுங்கள் ஸ்ரீ சாயி ராம்
பாபா ஒரு நாள் மசூதியிலும் ஒருநாள் சாவடியிலும் உறங்குவாராம்
சாவடிக்கு ஊர்வலம் செல்லும் காட்சியை நித்தம் மனதில் எண்ணியே உறங்குவீராம்
பாபாவின் சாவடி ஊர்வலம்
பாபா ஒரு நாள் மசூதியிலும் ஒருநாள் சாவடியிலும் உறங்குவாராம்
சாவடிக்கு செல்லு முன்  பக்தர்கள் கீதங்கள் பாடுவராம்
ஒருபுறம் பல்லக்கு ஒன்றை அலங்கரித்திருப்பராம்
அருகே தெய்வீக துளசி மாடத்தருகே பாபா ஆசனத்தில் வீற்றிருப்பாராம்
தபலா.மிருதங்கம் தாளக்க்கட்டை ஆகியவற்றை பக்தர்கள்  இசைப்பராம்
பாபாவின் குதிரை ச்யாமாவையும் அலங்கரித்திருப்பராம்
தாதயா பாடீல் அவரை கைத்தாங்கலாகப் பிடிப்பாராம்
கைவேலைப்பாடு செய்த சால்வையை அணிவிப்பாராம்
பாபா அவரது வழக்கமான கபினி ஆடையை அணிந்திருப்பாராம்
கைத்தடியையும் எடுத்துக்கொள்வாராம்
மகால்சாபதியும் தாத்யா படிலும்  இரு புறமும் வருவராம்
பக்தர்கள் திரளாக நின்று நாம  கோஷமிடுவராம்
ஹரிநாமத்தையும் சாயி நாமத்தையும் முழங்கியபடி ஊர்வலம் செல்வராம்
சாவடி வந்ததும் பாபா ஒளி பிழம்பாக காட்சி தருவாராம்
சாவடியையும் பக்தர்கள் சிறப்பாக விளக்குகளுடன் அலங்கரித்திருப்பராம்
பாபா ஆசனத்தில் அமர்ந்ததும் அவர் தலையில் கிரீடம் சூட்டி மகிழ்வராம்
ஆரத்தி எடுத்து வணங்குவராம்
பின்னர் ஒவ்வொருவராக வணங்கி விடை பெருவராம்
பாபா இந்த சேவைகளை பக்தர்களை மகிழ்விக்கவே ஏற்றுக்கொண்டாரே அன்றி அதில் அவருக்கு எந்த ஈடுபாடும் இல்லை என்பதை உணர்ந்து ஸ்ரீ சாயிராமனை துதித்து வணங்குவோம்

Wednesday, February 17, 2010

பாபாவின் அருளுரை - 27

ஒரு முறை திரு பாபா கீழ்கண்டவாறு கூறினாராம்.
" நான் சிறுவயதில் உண்ண உணவிற்காக கைவேலை செய்வேன்
என்போல் பல சிறுவர்கள் என்னுடன் வேலை செய்தனர்
ஆயினும் என் திறமையை என் எசமானர் மெச்சினார்
தலையில் தரிக்க ,இடையில் உடுக்க என அழகிய ஆடைகளை அளித்தார்
அதை அணிய என் உள்ளம் இடமளிக்கவில்லை.
இந்த உடையோ அதை தந்தவரோ நிலையில்லாதது
மேலே இருக்கும் என் எசமானரே நித்தியமானவர்
அவர் அருளே நிலைத்தது என்றெண்ணினேன்
மேலிருக்கும் என் எசம்மானர் ஒரு தங்கச்சுரங்கம்
அள்ளஅள்ளகுறையாத பேரின்ப ஊற்று அவர்.அருளே
ஆழ அகழ்ந்து எடுத்துக்கொள்ளுங்கள் என்று  அவர் அழைக்கிறார்
நீங்களோ என்னிடம் வந்து கொடு கொடு என்கிறீர்கள்
நான் யார்? இந்த உடல் மண்ணிற்கும் மூச்சு காற்றுடன் கலக்கும்
எனவே அந்த தெய்வத்திடம் பற்று கொண்டு ஞானம் என்னும் அருளை பெறுங்கள்" என்றாராம்.
மிக எளிய முறையில் உலக வாழ்வின் நிலையாமையை எடுத்துச் சொல்லியும் இறைவனிடம் பக்தி செலுத்தி ஞானத்தை பெற்று பயனடைய வேண்டியது அவசியத்தையும் விளக்கிய திரு சாய் நாதனை பணிவோம்.

Sunday, February 14, 2010

பாபாவின் அன்ன தானம் - 26

அன்ன தானத்தின் மகிமையை உலகோற்கு உணர்த்தியவராம் ஸ்ரீ சாயிராம்
ஸ்ரீ பாபா வீடுதோறும் இரந்து உணவு பெறுவாராம்
அவருக்கு உணவிட்டோர்  புண்ணியம் செய்த அன்பராம்.
அந்த உணவுப் பண்டங்களை எல்லாம் கலந்து அனைத்து ஜீவா  ராசிகளுக்கும்
விநியோகிப்பாராம்.
ஈ, எறும்பு, காகம், நாய் அனைத்தும் அதிதிகள் என்பாராம்.
சில நேரங்களில் தாமே உணவு தயாரிக்கக் முனைவாராம்
அவ்வமயம் தேவையான பொருட்களைத் தாமே வாங்கி வருவாராம்
தானியங்களையும் தன் திருக்கரங்களினால் அரைப்பாராம்.
இரண்டு வித தவலைகளில் உணவு தயாரிப்பாராம்
ஒன்றில் இனிப்பு அன்னமும் மற்றொன்றில் அசைவ உணவும் தயாரிப்பாராம்.
மசூதியின் வெளியே அடுப்பை மூட்டி தவலைகளில் நீர் ஊற்றி கொதிக்க விடுவாராம்
உணவு பதமாகிவிட்டதா   என அறிய தன் கரங்களை  உள்ளே விடுவாராம்
(கொதி கலனே அவர் கரம் பட்டு குளிர்ந்து விடுமே!
அவர் கரங்களுக்கு என்ன தீங்கு நேரிடும்.?
அது இறைவனின் திருக்கரங்கள் அன்றோ?)
பக்தர்களோ அந்த மகானின் கரம் பட்டு உணவு அமுதாகியதென்பாராம்
உணவை இறைவனுக்கு  நிவேதனம் செய்த பின் அனைவருக்கும் வழங்குவாராம்.
சைவ உணவை உண்பவர்க்கு அசைவ உணவை தொடவிட மாட்டாராம்
ஆயினும் சிலநேரங்களில் பக்தர்களிடம் சீண்டி பார்ப்பாராம்.
ஒருமுறை சாந்தோகரை அசைவ உணவு பண்டம்  வாங்கி வர சொன்னாராம்
பிராமண குலத்தவராயினும் பாபாவின் கட்டளையை சிரமேர்கொண்டாராம்
கடைக்குச்செல்ல தயாரானாராம்
பாபா உடனே அவரை நிறுத்தி வேறு ஒருவரை அனுப்பினாராம்
பின்னர் அதையும்தடுத்து விட்டாராம்.
இதுவும் பாபாவின் திரு விளையாடல்தானே?
பக்தர்களை தன் குறும்புத்தனத்தால் குரு பக்தியின் ஆழத்தை உணர்த்திய
திரு சாயி ராமனை வணங்குவோம்.

Sunday, February 07, 2010

ரகு ராமனும் சாயிராமனும்- 25 (இரண்டாம் பகுதி )

சென்னையிலிருந்து சிலர்  காசி யாத்திரை செல்ல முடிவெடுத்தனராம்
அவர்கள் அற்புதமாக பக்தி பாடல்கள் பாடுவாராம்.
அக்குழுவில் ஒரு கணவன்,மனைவியும் அவர் தமக்கையும்  இருந்தனராம்
ஸ்ரீ சாயியைபற்றி செவிஉற்றனராம்
அவரைத் தரிசிக்க ஆவலுற்றனராம்
கணவனுக்கு சாயி  அளிக்கும் தட்சிணையில் ஆசை உண்டாயிற்றாம்
மனைவியோ பெரும் பக்தி கொண்டிருந்தாராம்.
எனவே சாயி அந்த மனைவிக்கு   அவர் இஷ்ட தெய்வமான
சீதா ராமனைப்போல் காட்சி அளித்தாராம்
மற்ற்வற்கோ சாயினாதனாகவே காட்சி அளித்தாராம்
அப்பெண்மணி பரவச பேரானந்தத்தில் திளைத்தாராம்
தன் கணவனிடம் இதை மகிழ்வுடன் சொன்னாராம்
கணவர் அதை அப்பெண்மணியின்  கற்பனை என்று கேலி செய்தாராம்
ஆனால் அப்பெண்மணி அதை பொருட்படுத்தாமல் விட்டாராம்.
உண்மையான பக்திக்கு விளம்பரமோ ஆடம்பரமோ தேவையில்லை.
வெளிச்சம் போடவும் அவசியம் இல்லை
பிறர் மெச்சவோ, புகழவோ பக்தி செய்ய தேவை இல்லை.
மெய்யான பக்திக்கு ஸ்ரீ சாயி தந்த பரிசும் ஆசியும் அது என அறிந்து
ஸ்ரீ சாயியின் பொற் பாதங்களை வணங்குவோம்.

Thursday, January 28, 2010

பெருமானே சிவ பெருமானே - 25 (பகுதி ஒன்று )

ராவ் பகதூர்  சாதே என்பவர் பாபா பக்தராம்
அவரிடம் மெகா என்ற பிராமண சமையல்காரர் இருந்தாராம்
அவர் சிவபெருமானிடம் மிகுந்த பக்தியுடையவராம்
சாதே அவரிடம்"நான் உனக்கு சிவா அவதாரத்தை
 நேரில் காட்டுகிறேன் என்றாராம்.
நீ ஷிர்டி சென்று பாபாவை தரிசித்துவா என்றாராம்.
மெகா பயணிக்க நினைக்கையில் பாபா ஒரு முஸ்லிம் என்று அறிந்தாராம்
பிராமண குலத்தவர் முஸ்லிம் ஒருவரை தரிசிக்கலாகாது என்று எண்ணினாராம்
மீண்டும் சாதே வற்புறுத்தவே ஷிர்டி சென்றாராம்
பாபா அவரைக்கண்டதும் ,"அவனை உள்ளே விடாதீர்கள்.
அவன் உயர் ஜாதி பிராமணன் நான் கீழ் ஜாதி என்றாராம்.
என்னை தரிசித்தால் அவருக்கு இழுக்கு" என்றாராம்.
தன்னை மன்னிக்குமாறு மெகா பாபாவிடம் வேண்டினாராம்.
பாபா சாந்தமடைந்தாராம்.
 மேகா அவருக்குரித்தான  முறையில்   பணிவிடை செய்தாராம்.
பின்னர் த்ரயம்பகேஷ்வர்   சென்று ஒரு வருடம் தங்கி இருந்தாராம்.
அங்கு சிவனை பாபாவாகவே நினைத்து வணங்கினாராம்
பின்னர் ஷிர்டி வந்து பாபாவுக்கு பணிவிடை செய்ய ஆரம்பித்தாராம்.
தினமும் பல காத தூரம் நடந்து வில்வ பத்திரங்களை சேகரிப்பாராம்
கண்டோபா கோவிலில் சிவா தரிசனம் செய்து விட்டு மசூதிக்கு வருவாராம்.
பின்னர் பாபா அமரும் ஆசனத்திற்கு பூசை செய்வாராம்.
பிரகி பாபாவிற்கு பாத பூசை செய்து நீரை "கங்கா தீர்த்தம்"
என்று உரத்து சொல்லி அருந்துவாராம்.
ஒரு நாள் அவர் கதவு திறவாமையால் கோவிலுக்கு
 செல்லாமலே பாபாவைத் தரிசிக்க  வந்து விட்டாராம்.
பாபா"இப்போது திறந்திருக்கிறது" என்றாராம்
கோவிலைத்தான் குறிப்பிடுகிறார் என்று அறிந்து மேகா வியந்தாராம்.
பாபாவை சிவனாகக் கருதி அவரை கங்கை நீரால் நீராட்ட விரும்பினாராம்.
பாபாவோ"நான் முஸ்லிம்.எனக்கும் கங்கா நீருக்கும் என்ன தொடர்பு?" என்றாராம்.
"இல்லை நீர்தாம் நான் வணங்கும் சிவன்" என்று மேகா சொன்னாராம்.
பாபாவை ஒரு ஆசனத்தில் அமர செய்தாராம்.
குடத்து நீரை ஊற்று முன் பாபா
"என் உடம்பில் படாமல் தலையில் மட்டும் ஊற்று" என்றாராம்.
ஆனால் மேகாவோ"ஹர கங்கே" என பரவசமாய் கூவினாராம்.
நீரை உடல் முழுதும் ஊற்றினாராம்.
பிறகு பாபாவின் பாதங்களில் வணங்கி எழுந்தாராம்.
 பாபாவின் தலை மட்டுமே நனைந்திருக்கக் கண்டாராம்.
சிரசில் கங்கை தரித்த கங்காதரன் சாய் என்றே எண்ணினாராம்
நான் வணங்கும் சிவனே நீர்தாம் என வணங்கினாராம்.
உண்மையான பக்தருக்கு பாபாவே சிவனாக ,பண்டரிவிடலனாக
அல்லா,இயேசுவாக அவரவர் வணங்குமுறைக்கேற்ப காட்சியளிப்பார் என்பதே
இந்த சம்பவத்தின் கருத்தாகும்


  

Wednesday, January 27, 2010

ஆறு மனமே ஆறு - 25

சாந்தோர்கரின் மகள் பிரசவ வலியால் துன்புற்றாராம்.
பாபா தக்க தருணத்தில் உதி அனுப்பிக் காத்தாராம்.
சில  காலம் சென்றதும் மருமகனும்  பேரனும் மேலுலகை அடைந்தனராம்.
சாந்தோர்கர் "உங்கள் ஆசி கிட்டிய பிறகும் இந்நிலை நேரலாமா?" என்றாராம்.
"பிறப்பதும் இறப்பதும் முன் கர்மாவின் பலன்.
அதை என்னால் மாற்ற இயலாது.
முன்கூட்டி நடப்பதை என்னால் அறிய முடிகிறது அவ்வளவே." என்றாராம்.
நானா,"பாபா! நான் சம்சார பந்தத்தை துறக்க விரும்புகிறேன்" என்றாராம்.
"நானா!துக்கத்தினால் நீ பிதற்றுகிறாய்.
இறுதிவரை அனைவருமே ஏதோ ஒரு தளையில் சிக்குகிறோம்.
மற்றவர்கள் துயரை ஏற்கும் எனக்கே அது ஒரு தளைதான்
உலகில் மனிதன் ஏற்ற தாழ்வுடன் வாழ்வதாக நீ நினைப்பாய்.
ஆனால் அவரவர் கர்மா படிதான் அவை அமைகின்றன.
மனிதனுக்குப் பகை, காம, க்ரோத,லோப,மோக,மத, மாச்சர்யம் ஆகியவை.
இந்த ஆறும் மாயையால் தோன்றுவதாகும்.
செல்வந்தர்கள் செடிகளைப்போல் பணிந்து நடக்க வேண்டும்.ஆனால் கொடியவர்களிடம் கடுமையாய்  நடக்க வேண்டும்.
அற வழியில் பொருளீட்டி செலவு செய்ய வேண்டும்.
ஆனால் அளவுக்கு மிஞ்சி தானம் செய்ய வேண்டாம்.
பிறவிகளில் மானிட பிறவி உயர்ந்தது.
அதுதான் தன்னைப் படைத்தவனை ஆராதிக்கிறது
உருவ வழிபாடு சிறந்தது.
அதில்தான் மனம் லயித்து ஒரு நிலை படுகிறது
ஹரி "யார்" என்று அறியாமல் பண்டரிபுரம் செல்வது வீண்
பிறர் மதிக்க பக்தியை பறை சாற்ற செல்வது வீண்.
சித்தர்களையும் சாதுக்களையும் வழிபடுங்கள்.
ஆசையை அடக்கி மனத்தை இருத்தி ஆத்மாவை தூய்மையாய் வைத்திருங்கள்.
நிம்மதி கிட்டும்"
இவ்வாறெல்லாம் பாபா செய்த போதனையால் நானா மனம் தெளிந்தாராம்
அடக்க வேண்டிய ஆறும் நாமெல்லாரும் கடக்க வேண்டிய ஆறு.
இந்த தத்துவ முத்துக்களை உதிர்த்த திரு பாபாவை வணங்குவோம்.

Thursday, January 21, 2010

நவ வித பக்தி - 24

புனே நகரிலிருந்து ஆனந்தராவ் பதங்கர் என்பவர் ஷிர்டி வந்தாராம்.
வேதங்கள்,புராணங்கள் யாவும் படித்தும் நிம்மதி இல்லை என்றாராம்
பாபாவை வணங்கி நிம்மதிக்கு வழி கேட்டாராம்.
பாபா அவரிடம் இவ்வாறு கூறினாராம்:
"இங்கு ஒரு வியாபாரி வந்தார்
அவர் முன் ஒரு குதிரை ஒன்பது சாணம் முட்டை இட்டது
அவன் அதை கவனத்துடன் தன வேட்டி நுனியில் இட்டுக் கொண்டான்
இதனால் அவனுக்கு மன நிம்மதி கிட்டியது " என்றாராம்
பதங்கருக்கு ஒன்றும் விளங்கவில்லை என்றாராம்
அருகே இருந்த தாதா கேல்கர் சொன்னாராம்.
"எனக்குப் புரிந்ததை சொல்கிறேன்.
ஒன்பது சாண முட்டைகள் என்ன தெரியுமா?
அவை உண்மையான பக்தியின்  ஒன்பது வடிவங்களாகும்.
இறைவனின் நாமத்தை கேட்டல்,நினைத்தல்,துதித்தல்,பாதங்களில் வீழ்தல்,அர்ச்சித்தல்,சேவை செய்தல் ,பணிந்து வணங்கல் ,இறைவனுடன் தோழமை கொள்ளல் ,ஆத்மா நிவேதனம் செய்தல் ஆகியவை" என்றாராம்.
பக்தி இல்லாத பூஜை,இறை துதி,வேத புத்தகம் படித்தல் இவை வீண் என்றாராம்.
நீங்களும் அந்த வியாபாரியாக உங்களைக் கருதி
 அந்த ஒன்பது  முறைகளைப் பின் பற்றினால் நிம்மதி கிட்டும் என்றாராம்.
மறுநாள் பதங்கர் பாபாவை சந்தித்த பொது" அந்த ஒன்பது  முட்டைகளை
சேகரித்தீரா ?"என்றாராம்.
"உங்கள் கருணை இருந்தால் முடியும்" என்று பதங்கர் சொன்னாராம்.
மனம் ஒன்றாமல் ஒரு சடங்காகச் செய்வது பக்தி அல்ல.
படிப்படியாக மனம், உடல் ,பொருள் ஆவி ஆகிய அனைத்தையும் பரிபூரணமாக இறைவனின் பாதத்தில் அர்ப்பணித்து சரணாகதி அடைவதே பக்தி என்பதே இதன் பொருள்.
உண்மையான பக்திக்கு விளக்கம் சொன்ன சாயினாதரை வணங்கிடுவோம்.

Friday, January 15, 2010

விஷ்ணு சஹஸ்ரநாம மகிமை - 23

ராமதாசி ஒருவர் ஷிர்டி வந்தாராம்
தினமும் குளித்தபின் விஷ்ணு சஹஸ்ரநாமம் படிப்பாராம்
பாபாவும் அவர் படிப்பதை கேட்பாராம்
ஒரு நாள் அவரிடம் தனக்கு வயிறு வலிக்கிறது,
அதனால் கடைக்குச் சென்று மருந்து வாங்கி வர வேண்டும் என
ராம்தாசியைப்  பணித்தாராம்.
அவர் சென்றதும் ஷ்யாமா என்றழைக்கப்படும்
திரு மாதவராவ் தேஷ்பாண்டேயிடம் அந்த புத்தகத்தைக் கொடுத்தாராம்
ஷ்யாமா என்பவர் பாபாவின் பேரன்பிற்குரித்தானவராம்.
இறுதிவரை பாபாவிற்குத் தொண்டு புரிந்தவராம்
"நீ இந்தபுத்தகத்தை எடுத்துச் செல்
தினமும் இதிலிருந்து ஒரு நாமமாவது சொல்.
எனக்கு ஒரு முறை நெஞ்சு வலி ஏற்பட்டது.
நான் ஹரி நாமம் சொல்லியபடி இந்த புத்தகத்தை மார்போடு
அணைத்துக் கொண்டேன். வலி நீங்கியது." என்றாராம்.
திரும்பி வந்த ராமதாசி கோபம் அடைந்தாராம்.
உடனே பாபா அவரிடம்
"உண்மையான பக்தன், ராம நாமம் சொல்பவர் இப்படி உணர்ச்சி
 வயப்படலாமா ?"   எனக்கேட்டாராம்.
ராமதாசி அந்த புத்தகத்திற்குப் பதில் வேறொன்றை எடுத்துக் கொண்டாராம்.
ஷ்யாமாவிற்கு ராமநாமம் சொல்லும் வழக்கத்தை ஏற்படுத்தி
அவருக்கு நற்கதி அளிக்கவே சாயி நாதர் புரிந்த
 லீலை அது என உணர்ந்து நாமும்தினமும் ராம நாமம்
 சொல்ல உறுதி எடுத்து 
அந்த சாயி ராமனை வணங்குவோம்.

Thursday, January 14, 2010

குருவின் கட்டளை - 22

காகா என்று அன்புடன் அழைக்கப்பட்டாராம்
பிராம்மண குலத்துதித்த நற்செல்வராம்
ஹரிசீதாராம் தீசித் என்ற திருமகனாராம்
பெரும் செல்வராய் நீதிதுறையில் இருந்துவந்தாராம்
ஒரு விபத்தில் காலை இழந்தாராம்
அவரை பாபாவிடம் செல்லுமாறு நானா அனுப்பினாராம்
நேரில் கண்டதும் ஷிர்டியிலேயே தங்கிட முனைந்தாராம்
பாவும் அவரை ஆங்கே தங்கி யோகம் செய்யப் பணித்தாராம்
தான் தங்குவதற்காக ஒரு தங்குமிடத்தைக் கட்டினாராம்
அதுவே பின்னர் " தீட்சித் வாடா"என ஆயிற்றாம்
ஷிர்டி யாத்ரிகர்களுக்கு தங்குமிடமாயிற்றாம்.
அவர் சாயிடம் இணையில்லா பக்தி கொண்டிருந்தாராம்
ஒரு முறை உணவில்லாமல் உடல் மெலிந்து நலிந்த நிலையில்
 ஆடு ஒன்று நுழைந்ததை பாபா கண்டாராம்
பாபா டோபா என்வரை அழைத்து இந்த ஆடை வெட்டி விடச்சொன்னாரம்
அது பாபச்செயல் என்று அவர் மறுத்து விட்டாராம்
ராதா கிருஷ்ண ஆயியோ கத்தி தர மறுத்தாராம்
ஷாமா மற்றும் பலர் இது  பாபம் எனக் கருதினாராம்
பாபா தீட்சித்திடம் ஆட்டை  வெட்டச் சொன்னாராம்
வைதீக பிராமணரான அவரோ பாபாவின் கட்டளையை சிரம்
 மேல் கொண்டாராம்
கத்தியை எடுத்து வெட்ட சென்றாராம்
பாபா அவரைத்தடுத்தாராம்
"இந்த ஆடு இன்னும் சிறிது நேரத்தில் இறக்கப் போகிறது
ஆயினும்
 என் கட்டளையை யார் மதிக்கிறார் என சோதித்தேன்" என்றாராம்
பாபாவின் சோதனையில் தீசித்  புடமிட்ட தங்கமானாராம்
எனவேபாபா "என் காகாவை நான் விம்மானத்தில் ஏற்றி செல்வேன்" என்றாராம்
உண்மையான பக்தருக்கு அனாயாச மரணம் அளிப்பார் என்பது அதன் பொருள்
அவ்வாறே ஒரு ஏகாதசியில் உயிர் நீத்த பெருமானை வணங்கி
அவருக்கு அப்பேற்றை அளித்த சாயி ராமனை வணங்குவோம்

Thursday, January 07, 2010

தத்தாத்ரேயரின் மறு அவதாரம் - 21

பாபாவின் அவதார மகிமையை சிலர் சந்தேகித்தனராம்
மார்கழி மாதம் பஞ்சமி திதி அன்று யாவரும் கூடி இருந்தனராம்
தத்தாத்ரேயரின் நினைவு தினமாக யாவரும் வணங்குவராம்
திடீரென பாபா சிலரைத் தடியால் அடித்தாராம்
எனக்குப் பிரசவ வலி ஏற்பட்டுவிட்டது என்றாராம்
பல்வந்த் கைஜாக் என்பவரை உள்ளே கூப்பிட்டாராம்
உள்ளேசென்ற கைஜாக் திகைத்தாராம்
பல கரங்களுடன் மும்முகத்துடன் குழந்தை இருக்கக் கண்டாராம்
அனைவரும் சென்றபோது பாபா மட்டுமே இருந்தாராம்
தத்தாத்ரேயர் அவரே என்று அறிந்தனராம்
பாபாவின் அவதார மகிமையை உணர்ந்தனராம்
அற்புதராம் அந்த தத்தாத்ரேயரை வணங்குவோம் சாய்ராம்

Wednesday, January 06, 2010

மந்திரமாவது நீறு - 20

மந்திரமாவது பாபா விபூதி
இதந்தருவது பாபா விபூதி
அருமருந்தாவது பாபா விபூதி
திருவருளாவது பாபா விபூதி
கர்மங்கள் தொலைய பாபா விபூதி
அகந்தையை ஒழிக்க பாபா விபூதி
மாயையை உணர பாபா விபூதி
முக்தி அளிக்க பாபா விபூதி
பாபா விபூதி பரம பவித்ரம்
பாபா விபூதி லீலா விசித்ரம்
சமஸ்த சத்குரு ஸ்ரீ சாய் நாத மகாராஜ் கீ ஜெய்
சமஸ்த சத்குரு ஸ்ரீ சாய் நாத மகாராஜ் கீ ஜெய்
சமஸ்த சத்குரு ஸ்ரீ சாய் நாத மகாராஜ் கீ ஜெய்

நிரந்தர துனியும் உதியும் - 19

ஒருநாள் த்வாரகமாயியில் பக்தர்கள் கூடிஇருந்தனராம்
பாபா ஹூக்கா பிடிக்க விரும்பினாராம்
ஹூக்கா ஏற்ற நெருப்பு கேட்டாராம்
நெருப்புக்கு பாபா அலைவதேன் என்று பக்தர்கள் வருந்தினாராம்
நிரந்தர ஏற்பாடு செய்யலாமே என்றனராம்
பாபா எழுந்து சென்று குச்சியால் தட்டினாராம்
ஆங்கே நெருப்பு எரிந்ததும் இவ்வாறு சொன்னாராம்
"இந்த நெருப்பு இனி என்றும் அணையாது" என்றாராம்
விறகு கட்டைகளை எரித்துக்கொண்டே இருங்கள் என்றாராம்.
கட்டைகளையா எரித்தார் ?
அதில் பாபா நமது அகந்தையை எரித்தார் என்றனராம்
துனியில் இருந்து வரும் சாம்பல் உதி என்றாராம்
அந்த புனித உதியே நோய் தீர்க்கும் மருந்து என்றாராம்.
அற்புத உதி அளித்த மருந்தீச்வர சாயை வணங்குவோம் சாய் ராம்

பாபாவின் உதிஎன்னும் மருந்து - 18 (டாக்டர் பிள்ளை)

டாக்டர் பிள்ளை என்றொரு பக்த சீலராம்;
பாபா அவரிடம் பேரன்பு கொண்டாராம்;
ஒரு சமயம் காலில் சீழ் பிடித்து பிள்ளை துன்பமுற்றாராம்;
காகா சாகேப் தீக்ஷித் என்பவரிடம் இவ்வாறு சொன்னாராம்;
"என்னால் பொறுக்க இயலவில்லை” என்று கதறினாராம்;
“என் கர்ம பலன்களின் விளைவு இது என்பதை அறிவேன்” என்றாராம் ;
“இனி வரப்போகும் பிறவிகளில் நிரவி விடும்” என்றாராம்;
“நான் இறக்க விரும்புகிறேன் என்று பாபாவிடம் சொல்லும்" என்றாராம்;
இதை கேட்ட பாபா "அவரை இங்கே எப்படியாவது இட்டு வாரும்" என்றாராம்;

தலை அணையைக் கொடுத்து, "அமைதியாகப்படுத்திரு” என்றாராம்;
“எதற்காகப் பல பிறவிகளிலும் கஷ்டப்பட எண்ணுகிறாய்? என்றாராம்;
“நான் இருக்கும்போது சாவைப்பற்றி நினைக்காதே.” என்றாராம்;
“நான் உனக்கு ஆன்ம ரீதியாக அமைதி தருவேன்.” என்றாராம்;
“அல்லாவிடம் உன் மனம், உடல், வாக்கு ,செல்வம்
யாவையும் அர்ப்பணி” என்றாராம்.
மேலும்” உன்னை ஒரு காகம் கொத்தும் பின் உன் பிணி நீங்கும்" என்றாராம்.
அவ்வமயம் மசூதியை சுத்தம் செய்ய அப்துல் என்பவர் வந்தாராம்;
நீட்டி இருந்த காலை தெரியாமல் மிதித்து விட்டாராம்;
கட்டி உடைய சீழ் வெளிப்பட பிள்ளை அலறி விட்டாராம்;
மறுகணமே ஆனந்த கூத்தாட துவங்கினாராம்;
கொத்திய காகம் அந்த தொழிலாளி என்று அறிந்தாராம்.
பாபா அவருக்கு பூரண குணமடைய உதி அளித்தாராம்.
இந்த அற்புத லீலை செய்த சித்தர் சாயியை வணங்குவோம்...சாய்ராம்.---------------------------------------------------------------------------------------------------------------------------------------

வைத்யநாத சாய் - 17(கோதுமைஅரைத்தது)

ஹேமட்பந்த் நேரிடை கண்டதாக கூறும் சாயி நாதன் அற்புதத்தை கேட்போம்
1910 ஆம் ஆண்டு வாக்கில் ஒரு நாள் சாயியை காணச் சென்றாராம் ;
அவர் அங்கு கண்டதை பார்த்து வியந்தாராம்.;
திரு சாயி வாயையும் கரங்களையும் சுத்தம் செய்து கொண்டாராம்;
பின்னர் ஒரு சாக்குப் பையை விரித்தாராம் ;
கோதுமை தானியத்தை திருகையில் அரைக்க துவங்கினாராம் ;
தினமும் பாபா வீடுகளில் இரந்தே உண்பாராம் ;
எனவே இவர் யாருக்காக அரைக்கிறார் என எண்ணினாராம் ;
ஊர் மக்களும் கூட ஆரம்பித்து தாமும் அவருடன் அரைத்தனராம்;
தங்களுக்கு அளிக்கப்போகிறார் என்றே எண்ணினராம்;
அரைத்ததும் மாவை பங்கிட ஆரம்பித்தனராம்;
இதைக்கண்ணுற்ற பாபா பெருங்கோபம் கொண்டாராம்;
"யாரைகேட்டு இதை எடுக்கிறீர்கள்?" என்று கூச்சலிட்டாராம்;
மாவைகொண்டு போய் ஊர் எல்லையில் கொட்டச்சொன்னாராம்;
அச்சமயம் நிலவிவந்த  கொள்ளை நோயையே அவர் வெளியே கொட்டினாராம்
திருகையில் பொடித்தது விட நோயையே என்றறிந்தனராம்;
எல்லையில் கொட்டி ஜன நலம் காத்தார் என எண்ணினாராம்
சாயி அன்பர்கள் மேலோட்டமாய் இதை  அறிந்தனராம்;
எளிய விளக்கம் அன்று என்று சிலர் உணர்ந்தனராம
அதன் தத்துவ விளக்கத்தையும் பக்தர்கள் விளக்கினாராம்
பாபா ஞானம் என்ற பிடியைப் பிடித்தாராம்;
பக்தி என்ற கல்லால் நமது கர்மங்களை அன்றோ பொடித்தாராம்
இந்த அற்புத வைத்தியம் அளித்த வைத்யநாத சாயியை வண ங்குவோம் சாய் ராம்.

நானா சாஹிப்பிற்கு செய்த போதனை - 16

நானா சாஹேப் சாந்தோர்கர் சிறந்த பக்தராம்.
அவர் பகவத் கீதையை படித்தறிந்தவராம்
தன்னுடைய சமஸ்க்ருத மொழிபுலமையில் பெருமிதம் கொண்டவராம்.
பாபாவிற்கு சமஸ்க்ருத ஞானம் இல்லைஎன்று எண்ணினாராம்.
ஒருநாள் அவர் பாபாவின் பாதங்களை பிடித்துக் கொண்டிருந்தாராம்.
பாபாஅவரை"என்ன முணுமுணுக்கிறாய்?" என்றாராம்.
"பகவத் கீதையிலிருந்து ஒரு தோத்திரம்" என்றாராம்,
பாபா அவரை அந்த தோத்திரத்தை உரத்து சொல்ல சொன்னாராம்.
அவர் சொன்னதும் "உஅனக்கு பொருள் புரிந்ததா" என்றாராம்.
"குருவை நமஸ்கரித்து ,அவரிடம் சந்தேகங்களைக் கேட்டுத்தெளிந்து
ஞானம் பெற வேண்டும்" என்றாராம்.
பாபாஅவரைக் கீழ் கண்டவாறு கேட்க ஆரம்பித்தாராம்
பாபா : "ப்ரணிபாத என்றால் என்ன ?
நானா:அடி பணிவது
பாபா: அடி பணிந்தால் போதாது.உடல் ,பொருள்,மனம் அனைத்தையும்
அர்பணித்து குருவின் அடி பணிதல் வேண்டும்.
பாபா:பரி ப்ரஷ்னா என்றால் என்ன?
நானா: கேள்வி கேட்பது.
பாபா:ப்ரஷனா என்றால்?
நானா:கேள்வி கேட்பது.
பாபா:பின் பரி என்ற வார்த்தை எதற்கு?
பாபா: குருவின் அறிவை சோதிப்பது போல் கேட்காமல்
முக்தி அடைய ஞானத்தைப் போதிக்க கேள்வி கேட்க வேண்டும்.
பாபா: சேவை என்றால் என்ன?
நானா:நாம் எப்போதும் செய்வதுதான்.
பாபா: சேவை என்பது தன் உடல் ஒன்று இருப்பதையே எண்ணாமல்
தன்உடம்பு குருவுடையது , குருவிற்கு தொண்டு புரிவதே தான்
ஜீவித்திருப்பதன் பயன் என்று எண்ணி தொண்டு செய்வது.
பாபா: ஞானத்தை போதிப்பது என்றால் என்ன?
அஞானமாகிய இருட்டை போக்கி,ஞான ஒளி பெற வேண்டும்.
நான் ஒரு ஜீவன் குரு ஒரு ஜீவன் என எண்ணம் கூடாது.
எல்லாம் ஒன்று ,என்னுள்ளும் இறை அம்சம் உள்ளது என எண்ண
வேண்டும்.
இறைவன், உடல், ஆத்மா யாவும் ஒன்றே என
ஐக்கிய பட வேண்டும்.
கிருஷ்ணனே எல்லாம் அறிந்தவராக இருக்கும் போது
ஏன் அர்ஜுனனை மற்ற குருவிடம்
அனுப்புகிறார்?
உண்மையான பக்தனுக்கு எல்லா ஞானியும் கிருஷ்ணராக தெரிவார்.
குருவோ எல்லா சீடர்களையும் கிருஷ்ணனாகவே பார்ப்பார்.
தான் ஒரு ஜீவன் என்ற உணர்வை,அஞானத்தை நீக்கவே
குரு உபதேசம் அவசியம்."
இவ்வாறெல்லாம் ஸ்ரீ பாபா நானாவுக்கு உபதேசித்தாராம்.
நானாவின் மமதை என்ற குமிழை உடைத்தாராம்.
இந்த அற்புத அறிவுரை தந்த ஞான குருவிடம் பரிபூரண சரணாகதி
அடைவோம்.ஸ்ரீ சாய் ராம்.
நானா ஒரு   பழுத்த வைதீக குடும்பத்தைச் சேர்ந்தவராம்
.தினமும் ஒரு அதிதிக்கு உணவு அளித்த பின்னரே உண்பாராம்.
ஒரு நாள் அதிதி எவரும் வராமல் பாபாவிடம்  புலம்பினாராம்
நடைமுறை வாழ்க்கைக்கு ஒவ்வாததென வேதத்தை குறை கூறினாராம்.
பாபா இவ்வாறு சொன்னாராம்:
"பூஜை முடிந்ததும் உணவை வெளியில் வைத்து விடு.
அதிதி என்றால் பிராமணன் மட்டும்  என்று எண்ணாதே.
காகம், எறும்பு, நாய் யாவையும் அதிதிகள்தாம் " என்றாராம்.  
ஒரு நாள் பாபா திரு நானா சாந்தோகரிடம் இவ்வாறு சொன்னாராம்:
"எட்டு போளிகளை எனக்கு நிவேதனம் செய் என்றாராம்
பாபா அதை உண்பார் என்று நானா  காத்திருந்தாராம்
ஈக்கள் மொயத்துக்கொண்டிருப்பதை பார்த்தாராம்
சிறிது நேரம் கழித்து பாபா பிரசாதம் எடுத்துக் கொள் என்றாராம்.
நானாவோ "நீங்கள் அதை தொடவே இல்லையே" என்றாராம்.
"இந்த எண் சாண் உடம்புதான் பாபாவா?
போளிகளில் அமர்ந்த ஈ எறும்பில் நான் இல்லையா?" என்றாராம்.
பிறகு கர சமிக்யை செய்து தான் யார் என உணர வைத்தாராம்.
பக்தர்களின்  மன இருளை நீக்கி ஒளி அளிக்கும் ஸ்ரீ சாயியை வணங்குவோம்.

பக்த சீலர் மகால்சாபதி - 15

சிவனுக்கோர் நந்தியைபோல் பாபாவின் சீடரானாராம்.
மகால்சாபதி என்ற நற்குணவான் பாபாவின் அருளைப் பெற்றாராம்.
பக்தி, ச்ரத்தை,பூரண சரணாகதி என்று சிறந்து விளங்கினாராம்.
ஏழ்மை நிலையிலும் பிறரிடம் பணமா வாங்க மறுத்து விடுவாராம்
பாபா ஒரு நாள் அவரை தன் அருகே அழைத்தாராம்.
பாபா ஆழ்நிலை சமாதிக்கு செல்லு முன்தன் உடலை காக்க பணித்தாராம்
" 36 மணி நேரம் என் உடலருகே இரு.நான் திரும்பி வராவிடில் திறந்த வெளியில் புதைத்து விட்டு இரு கொடிகளை நட்டு விடு" என்றாராம்.
பாபா வாக்கை தேவ வாக்காக எண்ணி பாது காத்தாராம்.
ஊர் மக்கள் பாபா இறந்து விட்டார் என்று எண்ணினராம்.
உடலை எரிக்க சொல்லி மகால்சாபதியை வற்புறுத்தினராம்
பக்த சீலரோ வற்புறுத்தலுக்கு இணங்க மறுத்தாராம்
ஊண்,உறக்கம்,மனித உடல் தேவைகளை மறுத்து பாதுகாத்தாராம்
சமாதியிலிருந்து வெளி வந்த பாபாவின் பரி பூரண ஆசியைப் பெற்றாராம்.
பாபாவுடன் சாவடியிலும் மசூதியிலும் இரவும் பகலும் கழித்தாராம்.
பாபா அவரை வற்புறுத்தி மனைவியுடன் இருக்க பணித்தாராம்.
வம்ச வ்ருத்தி செய்ய சொன்னாராம்.
மகன் பிறந்ததும் மீண்டும் பாவிடம் வந்து சேர்ந்துவிட்டாராம்
இத்தகைய பக்த சீலரின் வரலாற்றை படித்து நாமும் அத்தகைய குண நலன்களைப் பெற வேண்டும்.

அற்புத தீபம் - 14

மசூதியில் நிறைய விளக்குகள் சாய் ஏற்ற சாய் விரும்புவாராம்.
பலகடைக்காரர்களையும் ஆவலோடு அணுகுவாராம்
தினமும் இரந்து எண்ணெய் பெறுவாராம்.
இதை விரும்பாத சிலரும் இருந்தனராம்.
எண்ணெய் கொடுக்க கூடாது என தீர்மானித்தனராம்.
மற்றவரிடமும் மறுக்கச் சொல்லி வற்புருத்தினராம்
சாயி எண்ணெய் தனக்கு மறுக்கப்பட்டதை அறிந்தாராம்
சாயி நேரே .மசூதிக்குச் சென்றாராம்.
கிணற்றடிக்குச் சென்று கைகால்களைக் கழுவிக்கொண்டாராம்.
தகர குவளையில் நீர் நிரப்பிக்கொண்டாராம்.
அகல்களில் நீரை இட்டாராம்.
விளக்குகள் யாவும் எரிய தொடங்கிற்றாம்.
விளக்குகள் யாவும் எறிந்ததைக் கண்டோர் வியந்தனராம்.
எண்ணெய் மறுத்த வ்யாபாரிகள் அச்சம் கொண்டனராம்.
பாபா "நீங்கள் எண்ணெய் தர மறுத்தால் தவறில்லை என்றாராம்
ஆனால் இருந்தும் இல்லை என பொய் உரைத்தது தவறு” என்றாராம்.
நீரில் தீபத்தை ஏற்றிய அற்புதசாயியை வணங்குவோம்

ராம நவமியும் சந்தனக்கூடு விழாவும் - 13

கோபால்ராவ் என்ற ஒரு பக்தர் இருந்தாராம்
மூன்று மனைவிகள் இருந்தும் மழலை இன்றி தவித்தாராம்
பாபாவின் அருளால் மகப்பேறு கிடைக்கப் பெற்றாராம்
நன்றிக்கடனாக த்வாரக்மாயிக்கு ஏதேனும் செய்ய விரும்பினாராம்
உருஸ் கொண்டாடலாம் என நினைத்தாராம்
பாபாவும் அதற்கு சம்மதித்தாராம்.
(பெரும் ஞானியரை கௌரவிக்கும் வண்ணம் இஸ்லாமியர்கள்
சந்தன குழம்பை எடுத்துக்கொண்டு ஊர்வலம் சென்று கொண்டாடுவார்)
மேலும் ராம் நவமி அன்று கொண்டாடலாம் என்றும் சொன்னாராம்
விழா நடத்த சில தடைகள் இருந்ததைக் கண்ணுற்றனராம்
குடிநீருக்கு இரு கிணறுகள் போதாது என பயந்தனராம்
பாபாவோ துவர்ப்பு நீரை இனிப்பாக்கினாராம்
ஆம்.புஷ்பங்களைத் தூவி லீலைபுரிந்தாராம்.
தாத்யா படேல் பல ஏற்பாடுகளும் செய்தாராம்.
தற்காலிக கடைகளும் நிறுவச் செய்தனராம்
மல்யுத்தப்போட்டிகள் நடக்க ஆயத்தம் செய்தனராம்
தாமு அண்ணா என்பவர் ஒரு அழகிய கொடி தயாரித்தாராம்
நானா சாஹிப் நிமொங்கர் பூவேலை செய்த கொடி தயாரித்தாராம்
திருவிழா நடக்க துவங்கிற்றாம்
ஹிந்து கொடியும் முஸ்லிம் கொடியும் அருகருகே சுமந்தனராம்
இரு கொடிகளையும் ஊர்வலமாக எடுத்து வந்தனராம்.
மசூதியின் இரு மூலைகளிலும் நட்டனராம்
இன்றுவரை அந்த விழாவை ஷிர்டியில் நடத்துகின்றனராம்.
ராம நவமி அன்று த்வாரகமாயியில் பக்தர்கள் குழுமுகின்றனராம்
அமீர சாக்கர் தலால் என்ற முஸ்லிம் அன்பர் இருந்தாராம்
அவர் சந்தனக்கூடு ஊர்வலம் நடத்த விழைந்தாராம்
தாலத்தில் சந்தன குழம்பை இட்டு ஊர்வலம் செல்வராம்
ஊதுபத்தி ஏற்றி சென்று பின் மசூதி சுவர்களில் தெரிப்பராம்
இதுவும் பாபாவின் ஆசியால் ராம நவமி அன்று நடத்தினராம்
கிருஷ்ணராவ் ஜாகேஷ்வர்பீமா என்பவர் விழாவுக்கு வந்தாராம்
திடீரென உருஸ் என்பதை ராம நவமியாக்க எண்ணினாராம்.
பாபாவிடம் தன் என்ணத்தை விண்ணப்பித்தாராம்
பாபாவும் சம்மதித்து ஆசி அளித்தாராம்.
மசூதியை சுத்தம் செய்யவும் வெள்ளை அடிக்கவும் துவங்கினராம்
ராதாக்ரிஷ்ணமாயி உணவு உபசாரத்தைக் கவனித்தாராம்.
அழகிய தொட்டில் ஒன்றும் ராதா கிருஷ்ணருக்குத் தயாரித்தாராம்.
மஹா ஜானி ஹார்மோனியம் இசைத்தாராம்
பீஷ்மா கீர்த்தனங்கள் பாடினாராம்.
இறுதியில் ஜெய் ராம் என்று கோஷமிட்டனராம்.
சிவப்பு பொடியைத் தூவினராம்
பொடி பாபாவின் கண்களில் விழுந்து அவர் கூச்சலிட்டாராம்
தொட்டிலை உடைத்து விடுவரோ என்று அஞ்சினாராம்
நரசிம்மமூர்த்தியாய் காட்சி அளித்தாராம்
நொடியில் சமாதானம்அடைந்தாராம்
அரக்கர்களை தீயவையை அழிக்க ராமர்அவதாரம் எடுத்தாராம்.
அது போன்றதே பாபாவின் ஆவேசம் என்று உணர்ந்தனராம்
.அடுத்த நாள் கோபால் கல விழாவும் நடத்தினராம்
(ஒருபானையில் தயிர்,,பொரி,அரிசி ஆகியவை கலந்து வைக்கப் படுமாம். )
கண்ணனை போல் பொரியையும் அனைவர்க்கும் வழங்கினராம்.
அடுத்த ஆண்டிலிருந்து தாஸ் கனு ஹரி கீர்த்தனம் இசைத்தாராம்
வருடா வருடம் மென்மேலும் சிறப்பாக நடத்தினராம்.
சீரடி புண்ணிய தலமே சமஸ்தானம் ஆயிற்றாம்.

கலியுகத்து அவதார புருஷர் - 12 திரு தாஸ்கனு உணர்ந்தது

பாபாவின் அன்புக்குப் பாத்திரமானார் தாஸ்கனு என்பவராம்
அவர் பிரயாகைக்குச் சென்று நீராட விரும்பினாராம்
பாபாவிடம் தன் விருப்பத்தைச் சொன்னாராம்
இங்கு பிரயாகை இல்லையா என்று பாபா கேட்டாராம்
தாஸ்கனு ஒன்றும் புரியாமல் விழித்தாராம்
இங்கேயே உனக்குப் ப்ரயாகயைக் காட்டுகிறேன் என்றாராம்
மாதவராம் வித்தகராம் அந்த ஸ்ரீசாயிராம்.
தாஸ்கனு பாபாவின் பாதங்களில் தன் தலையை வைத்தாராம்
மறு நிமிடம் பாபா இரு கட்டை விரல்களிலிருந்து நீர் வரவழைத்தாராம்
பிரயாகைபிரவாகமாகபொழிந்ததைகண்டோர்வியந்தனராம்
கங்கையும் யமுனையும் இதுவே என்று தாஸ்கனு மகிழ்ந்தாராம்
புனித நீரைத்தம் தலையில் இட்டுக் கொண்டாராம்
பாபாவின் பக்தர்கள் அவர்பாத நீரை புனிதமென கருதி அருந்துவராம்
 கனு மகாராஜ் தாம் உயர்ந்த ஜாதி எனக் கருதிநீரை அருந்தாமல் விட்டாராம்.
பாபாவை அவர் ஒரு மகானாகவே கருதினாராம்
பாபாவே கடவுள் என்று அறிய மறுத்தாராம்.
தான் பிராமணன் பாபா இஸ்லாமியர் என்றே நினைத்தாராம்
பாபா சமாதியானபிறகே ஒரு மகான் மூலம் இதை உணர்ந்தாராம்
.தெய்வம் அருகே இருந்தும் உணராத தன் அகந்தயை அழித்தாராம்.
ஒவ்வொரு உயிரிலும் பகவான் உள்ளார் என்றும் எம்மதத்தவரும் அவர் குழந்தைகளே என்பதும் இறைவன் ஒருவனே என்பதும் நாம் அறிய வேண்டிய உண்மை.
இப்பூவுலகில் நம்மிடையே அவதரித்த திரு அவதாரமாம் சாயி நாதனை வணங்குவோம்

த்வாரகமாயியும் மசூதியும் - 11

ஒரு சமயம் ஷிரிடியில் பலத்த மழை பொழிந்திற்றாம்
சாயி அசராமல் சமாதி நிலையிலே இருந்தாராம்.
வேப்பமரத்தடியிலேயே அமர்ந்திருந்தாராம்.
குப்பை கூளங்கள் மேல் விழுந்த போதும் அவ்வாறே இருந்தாராம்.
அந்நிலையில் அவரைக்கண்ட மக்கள் வருந்தினாராம்.
வற்புறுத்தி ஒரு பாழடைந்த மசூதியில் இருக்க வைத்தனராம்.
அதுவே பின்னர் இந்துக்களின் த்வாரகமாயி ஆயிற்றாம்
முகமதியர் மசூதிக்கு வந்து அவர்கள் மரபில் தொழுவாராம்.
இந்துக்கள் த்வாரகமாயியிக்கு வந்து கும்பிடுவார்களாம்
இருவரும் பாபாவை உறவும் உரிமையும் கொண்டாடினராம்
இதனால் இருவரும் பகை கொள்ள ஆரம்பித்தனராம்.
ஒரு முறை மகால்சாபதி பாபாவிற்குச் சேவை செய்து கொண்டிருந்தாராம்
அங்கு வந்த இஸ்லாமியர் அவரைத் தாக்கினாராம்
"பாபா! பாபா!" என்று மகால்சாபதி அலறினாராம்
இதைக் கண்ணுற்ற பாபாமிகுந்த சினம் உற்றாராம்
"சைத்தான்களே!என்னை என் அடிக்கிறீர்கள்" என்றாராம்
"நாங்கள் மகால்சாபதியைத்தானே அடிக்கிறோம்" என்றனராம்
"மகால்சாபதியுள் நானல்லவா இருக்கிறேன் "என்றாராம்.
"என்னிடம் சரணடைந்தவருள் நான் இருப்பேன் என்றாராம்.
"மதம் பிடித்தவருள் மாதவன் உறையான்."என்றாராம்.
தவறை உணர்ந்தவர்கள் அவர் காலில் வீழ்ந்தனராம்.
"எல்லார்க்கும் இறைவன் ஒருவனே" என்ற தத்துவ பொருளாம்
சாயி ராமை வணங்குவோம்

புண்ணிய பூமி ஷிர்டி - 10 (சாந்த் படீல் குதிரை )

தூப் எனும் நகரில் சாந்த் படீல் என்பார் இருந்தாராம்;
அவுரங்காபாத் செல்லும் வழியில் அவர் தம் குதிரையை தொலைத்து விட்டாராம்
கடிவாளத்தை தோளில் போட்டபடி ஊர் திரும்பிக்கொண்டிருந்தாராம்;
வழியில் ஓர் மரத்தடியில் ஒருவர் இருப்பதைக்கண்டாராம்;
நீண்ட அங்கி ,தலையில் குல்லாவுடன் ஹூக்கா பிடித்தபடி இருந்தாராம்;
அவர் சாந்து பட்டீலை கூப்பிட்டு அருகே அமரச்சொன்னாராம்;
கடிவாளத்தைப் பார்த்ததும் என்னவென்று வினவினாராம்;
விவரம் சொன்னதும் குளத்தருகே இருக்கும் என்றாராம்;
சாந்து பட்டீலும் அவ்வண்ணமே குதிரை இருக்கக் கண்டாராம் ;
மேலும் மற்றொரு அதிசயத்தையும் அவர் கண்டாராம்;
மரத்தடி இளைஞன் குச்சியால் தரையைத் தட்டினாராம்;
தட்டிய இடத்தில் தீக் கங்கு வரவழைத்தாராம்;
மற்றொரு இடத்தில் நீர் தருவித்தாராம்;
துணியை நீரில் நனைத்து கங்குகளை குழாயில் இட்டாராம்;
அமைதியே உருவாக புகை பிடித்தாராம்;
இதைக் கண்ட படீல் அவர் மேல் மதிப்பு கொண்டாராம்;
தன் இல்லத்திற்கு வருமாறு அழைத்தாராம்;
இளைஞனும் மறுக்காமல் அவருடன் சென்றாராம்;
அவர் இல்லத்தோறும்அவர் மகிமை அறிந்தனராம்;
சீரடியில் தம் குடும்ப மண விழாவிற்கு அழைத்தனராம்;
அவர்களுடன் சென்ற இளைஞன் ஆங்கே தங்கிவிட்டாராம்;
அந்த இளைஞர்தான் முன்பு வேப்பமரத்தடியில் thangi இருந்தவராம்.
மகால்சாபதியோ அவரைக் கண்டதும் 'யா சாயீ' என்றாராம்;
அன்று முதல் அவர்கள் பூர்வ பந்தம் தொடங்கிற்றாம்;
சீரடியும் மகான் சீரடி பட்ட புண்ணிய தலமாயிற்றாம்.………………………………………………………………………

Tuesday, January 05, 2010

வேப்ப மரத்தடி இளைஞன் - 9

குருவிடம் விடை பெற்று மேற்கே நடந்த இளைஞன் ஷிர்டியை அடைந்தாராம்
மகாராட்டிரத்தின் கோதாவரி கரையில் சிற்றூராம்
சீரடி தலமதில் வேம்பு மரத்தடி அமர்ந்தாராம்
எழில் இளைஞனை அனைவரும் வியந்து நோக்கினராம்
வெயில், மழை.எதையும் பொருட்படுத்தாததை வியந்தனராம்
வேப்பமரத்தடி இளைஞர் வைத்தியமும் செய்ய ஆரம்பித்தாராம்
பச்சிலை மருந்து தயாரித்துக் கொடுப்பாராம்
வீடு வீடாகச் சென்று யாசித்து உணவு சேகரிப்பாராம்
திரவ உணவுகளை ஒரு குவளையில் இடுவாராம் வேப்ப மரத்தடி
எல்லாவற்றையும் கலந்து மனிதர்கள் விலங்குகள்
மற்றும் அனைத்து ஜீவா ராசிகளுக்கும் அன்புடன் இடுவாராம்.
உணவு உடைக்கு முக்கியத்துவமே தராமல் இருந்தாராம்.
கண்டோபா கோவில் பூசாரி ஒருவர் இருந்தாராம்
மகால்சாபத்தி என்ற பெயர் கொண்ட சீலராம்
பாபாவை பெரும் சித்தர் என உணர்ந்தாராம்
தினமும் இன்னும்சிலருடன் சேர்ந்து வணங்குவாராம்
ஒரு நாள் வேப்பமர இளைஞன் திடீரென மறைந்து விட்டாராம்.

வேம்படி புனித பாதுகாஸ்தான் ஆன வரலாறு :
(பி .வி. தியோ என்பவர் தன்னுடைய "சாயி சரிதம்"என்ற புத்தகத்தில் எழுதியபடி)
பாய் க்ரிஷஞ்சி அளிபக்கர் என்பவர் அகல்க்ஹோட்  மகாராஜ் என்ற மகானின் பக்தராம்.
அவரின் பாதுகைகளை வணங்க வேண்டு அகல்க்ஹோட் செல்ல இருந்தாராம்
அப்போது அவர் கனவில் அக்ஹல்க்ஹோட் மகாராஜ் தோன்றினாராம்
"இப்பொழுது சீரடிதான் என் இருப்பிடம்.அங்கு செல் என்றாராம்."
அதன் பின் ராம் ராவ் கோதாரி என்ற மருத்துவர் தன் கம்பவுண்டரையும்
நண்பர் பாய் க்ரிஷஞ்சியையும் சிரடிக்கு வருமாரி அழைத்தாராம்
அங்கு சென்றதும் திரு சாய் நாதரின் பக்தர்கள் ஆகிவிட்டனாறாம்
முதன் முதலாக சாய் வந்தமர்ந்த வேம்பு மரத்தடியில் அந்த சம்பவத்தின் நினைவாக அவரின் பாதத்தை பிரதிஷ்டை செய்ய விரும்பினாராம்.
மருத்துவர் ராமராவ் அழகிய வடிவமைப்பு செய்தாராம்
கண்டோபா கோவிலில் இருந்த உபாசனை மகாராஜிடம் ஆலோசனை கேட்டாராம்
அவர் அந்த பாதுகைகருகில் ஒரு தாமரை சங்கு சக்ரம் போன்றவற்றையும் வடிவமைத்தாராம்
கீழ்வரும் ஸ்லோகத்தையும் எழுதி கொடுத்தாராம்
"சதா நிம்ப வ்ருக்ஷச்ய மூலாதிவாசத்
சுதா ஸ்ரவினம் திக்தமபிஅப்ரியந்தம் ,
தரும் கல்ப வ்ருக்ஷாதிகம் சாதயந்தம்
நமாமீஷ்வரம் சத்குரும் சாய் நாதம் "

பிறகு பாதுகை வடிவமைக்கப் பட்டு கண்டோபா கோவிலிலிருந்து த்வாரகமயிக்கு ஊர்வலமாக கொண்டு வர பட்டதாம்
திரு சாய் அதை தொட்டு ஆசித்து 'இது இறைவனை பாதம்"வேம்பு மரத்தருகே பதியுங்கள்" என்றாராம்

சரவண மாதம் பவுர்ணமி அன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.

எல்லாம் அவனுக்கே சமர்ப்பணம் - 8

இறைவனுக்குப் படைத்தலும் பகிர்ந்து உண்ணலும்

சந்தீபணி என்ற குருவிடம் ஸ்ரீ கிருஷ்ணர் சீடராக இருந்தாராம்
சுதாமா என்ற சிறுவனும் உடன் பயின்றாராம்.
குரு ஒரு நாள் காட்டிலிருந்து சுள்ளி கொணர பணித்தாராம்.
கிருஷ்ணர்,பலராமர் இருவரும் புறப்பட்டனாறாம்.
குருவின் மனைவி சுதாமாவிடம் நெல்மணிகளைக் கொடுத்தாராம்.
பசி எடுத்தால் மூவரும் பகிர்ந்துண்ணுங்கள் என்றாராம்.
காட்டில் அவர்கள் களைப்படைந்தன ராம்
கிருஷ்ணர் சுதாமா மடியில் படுத்து உறங்கிவிட்டாராம்.
அவ்வமயம் சுதாமா நெல்மணிகள் அனைத்தையும் உண்டு விட்டாராம்
துயிலெழுந்த கண்ணன் "ஏதேனும் உண்டாயா?" என்றாராம்.
எதுவுமில்லைஎன சுதாமா மறுத்துவிட்டாராம்.
"எனக்கு கொடுக்காமல் எதையும் நீ உண்ண மாட்டாய்.
ஆயினும் அப்படி ஒரு கனவு வந்தமையால் கேட்டேன்" என்றாராம்.
(இந்த செயல் பிற்காலத்தில் சுதாமாவை ஏழ்மையில் பிடித்து தள்ளியது.
ஆனால் அவர் மனைவி கையால் செய்த அவலை தானே கொண்டு சென்று
கிருஷ்ணனுக்கு அளித்ததும் சுதாமாவிற்கு வறுமை நீங்கியது.)
இந்த கதை நினைவிற்கு வரும் சம்பவம் ஹெமட்பந்த்துக்கு நேர்ந்தது.
பாபாவின் பாதங்களை வருடியபடி ஹேமட்பந்த் இருந்தாராம்.
அருகிலிருந்த ஷ்யாமா "உங்கள் மேலாடை மடிப்பில்
நெல் மணிகள் ஒட்டி உள்ளன" என்றாராம்.
பிரித்துப்பார்த்த ஹெமாத் திகைத்தாராம்.
எவ்வாறு அவை வந்திருக்கும் என்று அனைவரும்
அவரவர் கருத்து சொல்ல துவங்கினாராம்.
அப்போது பாபா "நீதான் சீரடி சந்தையிலிருந்து மணிகளை
வாங்கி வந்து எவருக்கும் அளிக்காமல் உண்டாய் என்பதன் சாட்சி
இது" என்றாராம.
"பாபா! நான் சீரடி சந்தையை பார்த்ததுமில்லை.
இதுவரை பிறர்க்கு அளிக்காமல் எதையும் உண்டதுமில்லை."என்றாராம்.
உன் அருகே எவரும் இல்லையெனில் யாருக்கு அளிப்பாய்.?
என்னை நினைத்து எனக்கு அளித்திருக்கிறாயா? "என்றாராம்.
(இது நமக்கு உணர்த்துவது என்ன?
எந்த செயலையும் நாம் உணர்வு பூர்வமாக ,மனப்பூர்வமாக
செய்யும்போது இறைவனாகிய பாபாவை நினைத்து அவருக்கு
அனைத்தையும் அர்ப்பணித்த பிறகே செய்ய வேண்டும்.
அவரை நினைத்ததும் அந்த செயல் அவருக்கு உகந்ததா
என்ற எண்ணம் தோன்றும்.
இவ்வாறு அர்ப்பணித்தால் நம் மன ஆசைகள் ,கோபங்கள் நீங்க
இது ஒரு வழியாக அமையும்.
குருவும் நம் மன அவலங்களை அழுக்குகளை அழிப்பார்.
குருவின் மேல் நமக்கு அன்பும் அபிமானமும் தோன்றும்.
அவரும் நாமும் வெவ்வேறு என்ற எண்ணம் மறையும்.
குருவும் இறைவனும் ஒன்றே என்று தோன்றும்.
குருவை வணங்கினால் இறைவன் மகிழ்வார்.
பிறகென்ன? என்றும் பேரானந்தப் பெருவெள்ளம் தான். )

ஸ்ரத்தையும் சபூரியும் - 7

தபோல்கர் அவர்கள் வேலையிலிருந்து ஒய்வு பெற்றாராம்.
ஓய்வூதியம் போதிய அளவு இல்லை என வருந்தினாராம்
சிஞ்சாநிக்கர் என்பவர் பாபாவிடம் இதைக்கூறினாராம்
"அவனுடைய பாத்திரம் எப்போதும் நிரம்பியே இருக்கும். .
ஆனால் அவன் என்னை நோக்கியே எப்போதும் பிரார்த்தனை
செய்யட்டும்.தீயவர்களுடனும், மத த்வேஷகர்களுடனும்
சேர கூடாது.அடக்கத்துடனும் பணிவுடனும் இருந்தால்
எந்நாளும் மகிழ்வுடன் இருப்பார் என்றாராம்."
ஒரு சமயம் ஹேமத்பந்த் பாபாவின் திரு பாதங்களைக்
கழுவிக்கொண்டிருந்தாராம்.
(ஹெமாத் பந்த் என்பது தபோல்கரை குறிப்பிடும் பெயராம்
தபோல்கர் எளிய குடியில் பிறந்தவராம்
சுயமாகவே பல நூல்களைக் கற்றுத் தேர்ந்தாராம்.
எனவே குரு தேவை இல்லை என விவாதித்தாராம்
ஸ்ரீ சாயியை சந்திக்கு முன் இவ்வாறு நண்பர்களிடம் பேசினாராம்
பிறகு பகவான் தரிசனத்துக்கு சென்றாராம்.
"ஹெமட்பந்த் என்ன சொல்கிறார்?"என ஸ்ரீ சாயி கேட்டாராம்.
ஹேமத்பந்த் என்பவர் மகாராஷ்டிரத்தின் சிறந்த பண்டிதராம்
சாயி ஏன் அவ்வாறு கேட்டார் என தபோல்கர் பின்னர் அறிந்தாராம்
“நீ பெரிய பண்டிதரோ” என கேட்டிருப்பார் என அறிந்தாராம்
தன் சிறு மதியை எண்ணி வெட்கினாராம்)
(ஆயினும் சாயிசத் சரிதத்தை அவர் எழுதியதை நோக்கின்
ஸ்ரீ சாயி தீர்க்க தரிசன வாக்காகவே தோன்றுகிறது என்கிறார்கள் சாயி பக்தர்கள்)
சாதே என்ற பக்தர் வந்தாராம்
நீங்கள் கூறிய படி குரு சரிதம்
ஏழு நாட்கள் படித்தேன் என்றாராம்
ஏழாவது நாள் நீங்கள் நூலுடன் தோன்றி
ஆசீர்வதிப்பது போல் கண்டேன் என்றாராம்
ஏழு ஆண்டுகள் தொண்டு புரியும் எனக்கு
அந்த பேறு இல்லையே என தபோல்கர் வருந்தினாராம்.
பாபா அவரிடம் "சாமாவிடம் சென்று பதினைந்து ரூபாய்
நான் கேட்டதாய் வாங்கி வா" என்றாராம்.
சாமாவோ “நான் பரம ஏழை என்னிடம் பணம் ஏது” என்றாராம்
“எனது பதினைந்து வணக்கத்தை அவரிடம் கொடுங்கள்” என்றாராம்
மேலும் பாபா அவரைத் தன்னிடம் அனுப்பியதன்
காரணத்தை உணர்ந்தாராம்
பக்தனுக்கு குருவிடம் நம்பிக்கையும்பொறுமையும்
வேண்டும் என்று பாபா சொல்ல விரும்பியதை உணர்ந்தாராம்
எனவே தபோல்கரிடம் ராதா கிருஷ்ண மாயி கதையை சொன்னாராம்
ராதாபாய் என்றொரு மூதாட்டி இருந்தாராம்
பாபாவின் மேல் பெரும் அன்பு கொண்டிருந்தாராம்
தனக்கு உபதேச மொழிகளை அளிக்க வேண்டினாராம்
அதுவரை உணவு உண்கிலேன் என்று பிடிவாதம் பிடித் தாராம்
பாபா அவரைக் கூப்பிட்டு அனுப்பினாராம்
“அன்னையே!என் இப்படி வருத்திக் கொள்கிறாய்?” என்றாராம்
“உனக்கு முதலில் என் கதையைக் கூறுகிறேன்” என்றாராம்
(பாபாவின் இந்த கதை அனைவரும் அறிந்து தெளிந்து கொள்ள வேண்டிய
குரு பக்தியின் இலக்கணமாகும்)
"எனக்கு மிகச் சிறந்த குரு இருந்தார்.
வெகு காலம் அவருக்கு நான் பணிவிடை செய்தேன்
எனக்கு அவர் எந்த மந்த்ரஉபதேசமும் செய்யவில்லை.
தலையை மொட்டை அடிக்கச் சொன்னார்.
இரண்டு பைசா தக்ஷிணை கேட்டார்.
பொருள் பற்றினாலா கேட்டார்?
(பாபா தனது சீடரிடம் இரண்டு பைசா தக்ஷிணை கேட்பார்.
சிலரிடம் நிறைய பணமும்,சிலர் கொடுத்தால் மறுத்து விடவும் செய்வார்.
அவரவர் கர்ம பலனை பொறுத்து கேட்பார் என்று கூறுவார்
குருவின் மேல் கொள்ள வேண்டிய ச்ரத்தை அல்லது நம்பிக்கையும்
அவர் அருளுக்காக காத்திருக்கும் பொறுமையும்தான்
இரண்டு தக்ஷினைகள்என்றும் கூறுவார்)
இல்லை.பொறுமை, நம்பிக்கை என்ற குணங்களையே கேட்டார்.
என் குருவைப் பார்ர்த்துக் கொண்டே இருப்பேன்.
கருணை வெள்ளத்தில் மூழ்கி விடுவேன்.
பசி தாகம் இன்றி இரவும் பகலும் அவரையே அண்டி இருப்பேன்
அவர் நினைப்பன்றி வேறு சிந்தனை அற்று இருப்பேன்
இது ஒரு தக்ஷிணை.
அடுத்தது பொறுமையாகும்
பொறுமை புண்ணியங்களின் அரங்கம்.
மாயையைக் கடக்க உதவும் துடுப்பு.
கஷ்டங்களை போக்கி வெற்றி கிட்டச் செய்யும்.
பொறுமையும் நம்பிக்கையும் இரட்டைக்குழந்தைகள்.
ஆமை தன் பார்வையிலேயே எட்டி நிற்கும் குழந்தைகளைக்கூட
போஷித்த து போல என் குரு என்னைக் காத்தார்.
அது போல் நம்பிக்கையுடனும் பொறுமையுடனும்
என்னை நினை.முக்தி கிட்டும்."
இவ்வாறெல்லாம் அந்த குரு போதனை செய்தாராம்
முதியவளும் தலை வணங்கி விரதத்தைக் கைவிட்டாராம்
இந்த போதனை நம் யாவருக்கும் உரியதன்ரோ?
இந்த அற்புத மொழிகளைக் கூறிய குரு சாயியை வணங்குவோம்.
ஓம் சாய் ஸ்ரீ சாய் ஓம் ஸ்ரீ சாய் ஸ்ரீ சாய் ராம்

குரு பக்திக்கு இலக்கணம் - 6

சிறுவனும் அன்னையுடன் வேங்குசாவை அடைந்தாராம்;
பெரியவரிடம் அன்னை யாவையும் உரைத்தாராம்;
சிறுவனின் முக ஒளியால் அவர் கவரப்பட்டாராம்;
தான் அறிந்தவற்றை எல்லாம் சிறுவனுக்கு ஒதினாராம்;
சிறுவன் அவரைத் தாயாய் தந்தையாய் குருவாய் கருதினாராம்...
.சிறுவனோ பொறுமையாய் பணிவிடை செய்தாராம்;
குரு பக்திக்கே இலக்கணம் என்றானார் ஸ்ரீ சாயி ராம்.
இவர்கள் பிணைப்பினை கண்டவர் பொறாமை உற்றனராம்;
ஒரு நாள் தோட்டத்தில் வேங்குசா அருகில் சாய் இருந்தாராம் ;
பித்தர்கள் சாயியைக் குறிவைத்துக் கல் எறிந்தனராம்;
வேங்குசா நொடியில் அதைக் கண்டாராம்;
ஆன்ம சக்தியால் அந்தரத்தில் நிலைக்கச் செய்தாராம் ;
மற்றொரு கல் குருவைத் தாக்கியதும் சாய் பதறினாராம்;
என்னால் நீங்கள் துயருறுதல் ஆகா என்றாராம்.
நான் செல்கிறேன் என்றாராம்.
“என்னை நீ பிரியும்காலம் வந்துற்றது” என குரு சொன்னாராம் ;
ஆங்கு சென்ற கன்று ஈயா பசுவிடம் பால் கறக்க பணித்தாராம்;
அற்புத லீலை அத்தருணமே துவங்கும் என்பதை அறிந்தாராம் ;
பீறிட்டு எழுந்த பாலை நிரப்பி இளைஞனிடம் தந்தாராம்;
அவர்தம் தவ வலிமை, ஞானம் அனைத்தையும் அதில் இட்டாராம்;
நீ இனி பரிபூரணன் மேற்கு நோக்கிப் பயணி" என்றாராம்;
நிலை நிறுத்திய கல்லை அளித்தாராம்;
(குருவின் நினைவாக சாய் அதில்தான் தலை சாய்ப்பாராம்;)
பிணமான கல் எறி தீயனை சாய் உயிர்ப்பித்தாராம்;
குருவை வணங்கி மேற்கே நோக்கி நடந்தாராம்.

குரு பக்திக்கே இலக்கணமான குரு சாயியை வணங்குவோம்