Thursday, February 25, 2010

ஸ்ரீ பாபாவின் சாவடி ஊர்வலம் - 28

சூரியன் உதித்ததும் துதி செய்ய வேண்டிய நாமம் ஸ்ரீ சாய் ராம்
நடக்கும்போதும் நிற்கும்போதும் துதி செய்யுங்கள் ஸ்ரீ சாயி ராம்
எல்லாம் நீயே என்றும் நீயே என்று அற்பணியுங்கள் ஸ்ரீ சாயி ராம்
உறங்குமுன் நினைத்திட, மகிழ்ந்தே உறங்கிட படியுங்கள் ஸ்ரீ சாயி ராம்
பாபா ஒரு நாள் மசூதியிலும் ஒருநாள் சாவடியிலும் உறங்குவாராம்
சாவடிக்கு ஊர்வலம் செல்லும் காட்சியை நித்தம் மனதில் எண்ணியே உறங்குவீராம்
பாபாவின் சாவடி ஊர்வலம்
பாபா ஒரு நாள் மசூதியிலும் ஒருநாள் சாவடியிலும் உறங்குவாராம்
சாவடிக்கு செல்லு முன்  பக்தர்கள் கீதங்கள் பாடுவராம்
ஒருபுறம் பல்லக்கு ஒன்றை அலங்கரித்திருப்பராம்
அருகே தெய்வீக துளசி மாடத்தருகே பாபா ஆசனத்தில் வீற்றிருப்பாராம்
தபலா.மிருதங்கம் தாளக்க்கட்டை ஆகியவற்றை பக்தர்கள்  இசைப்பராம்
பாபாவின் குதிரை ச்யாமாவையும் அலங்கரித்திருப்பராம்
தாதயா பாடீல் அவரை கைத்தாங்கலாகப் பிடிப்பாராம்
கைவேலைப்பாடு செய்த சால்வையை அணிவிப்பாராம்
பாபா அவரது வழக்கமான கபினி ஆடையை அணிந்திருப்பாராம்
கைத்தடியையும் எடுத்துக்கொள்வாராம்
மகால்சாபதியும் தாத்யா படிலும்  இரு புறமும் வருவராம்
பக்தர்கள் திரளாக நின்று நாம  கோஷமிடுவராம்
ஹரிநாமத்தையும் சாயி நாமத்தையும் முழங்கியபடி ஊர்வலம் செல்வராம்
சாவடி வந்ததும் பாபா ஒளி பிழம்பாக காட்சி தருவாராம்
சாவடியையும் பக்தர்கள் சிறப்பாக விளக்குகளுடன் அலங்கரித்திருப்பராம்
பாபா ஆசனத்தில் அமர்ந்ததும் அவர் தலையில் கிரீடம் சூட்டி மகிழ்வராம்
ஆரத்தி எடுத்து வணங்குவராம்
பின்னர் ஒவ்வொருவராக வணங்கி விடை பெருவராம்
பாபா இந்த சேவைகளை பக்தர்களை மகிழ்விக்கவே ஏற்றுக்கொண்டாரே அன்றி அதில் அவருக்கு எந்த ஈடுபாடும் இல்லை என்பதை உணர்ந்து ஸ்ரீ சாயிராமனை துதித்து வணங்குவோம்

Wednesday, February 17, 2010

பாபாவின் அருளுரை - 27

ஒரு முறை திரு பாபா கீழ்கண்டவாறு கூறினாராம்.
" நான் சிறுவயதில் உண்ண உணவிற்காக கைவேலை செய்வேன்
என்போல் பல சிறுவர்கள் என்னுடன் வேலை செய்தனர்
ஆயினும் என் திறமையை என் எசமானர் மெச்சினார்
தலையில் தரிக்க ,இடையில் உடுக்க என அழகிய ஆடைகளை அளித்தார்
அதை அணிய என் உள்ளம் இடமளிக்கவில்லை.
இந்த உடையோ அதை தந்தவரோ நிலையில்லாதது
மேலே இருக்கும் என் எசமானரே நித்தியமானவர்
அவர் அருளே நிலைத்தது என்றெண்ணினேன்
மேலிருக்கும் என் எசம்மானர் ஒரு தங்கச்சுரங்கம்
அள்ளஅள்ளகுறையாத பேரின்ப ஊற்று அவர்.அருளே
ஆழ அகழ்ந்து எடுத்துக்கொள்ளுங்கள் என்று  அவர் அழைக்கிறார்
நீங்களோ என்னிடம் வந்து கொடு கொடு என்கிறீர்கள்
நான் யார்? இந்த உடல் மண்ணிற்கும் மூச்சு காற்றுடன் கலக்கும்
எனவே அந்த தெய்வத்திடம் பற்று கொண்டு ஞானம் என்னும் அருளை பெறுங்கள்" என்றாராம்.
மிக எளிய முறையில் உலக வாழ்வின் நிலையாமையை எடுத்துச் சொல்லியும் இறைவனிடம் பக்தி செலுத்தி ஞானத்தை பெற்று பயனடைய வேண்டியது அவசியத்தையும் விளக்கிய திரு சாய் நாதனை பணிவோம்.

Sunday, February 14, 2010

பாபாவின் அன்ன தானம் - 26

அன்ன தானத்தின் மகிமையை உலகோற்கு உணர்த்தியவராம் ஸ்ரீ சாயிராம்
ஸ்ரீ பாபா வீடுதோறும் இரந்து உணவு பெறுவாராம்
அவருக்கு உணவிட்டோர்  புண்ணியம் செய்த அன்பராம்.
அந்த உணவுப் பண்டங்களை எல்லாம் கலந்து அனைத்து ஜீவா  ராசிகளுக்கும்
விநியோகிப்பாராம்.
ஈ, எறும்பு, காகம், நாய் அனைத்தும் அதிதிகள் என்பாராம்.
சில நேரங்களில் தாமே உணவு தயாரிக்கக் முனைவாராம்
அவ்வமயம் தேவையான பொருட்களைத் தாமே வாங்கி வருவாராம்
தானியங்களையும் தன் திருக்கரங்களினால் அரைப்பாராம்.
இரண்டு வித தவலைகளில் உணவு தயாரிப்பாராம்
ஒன்றில் இனிப்பு அன்னமும் மற்றொன்றில் அசைவ உணவும் தயாரிப்பாராம்.
மசூதியின் வெளியே அடுப்பை மூட்டி தவலைகளில் நீர் ஊற்றி கொதிக்க விடுவாராம்
உணவு பதமாகிவிட்டதா   என அறிய தன் கரங்களை  உள்ளே விடுவாராம்
(கொதி கலனே அவர் கரம் பட்டு குளிர்ந்து விடுமே!
அவர் கரங்களுக்கு என்ன தீங்கு நேரிடும்.?
அது இறைவனின் திருக்கரங்கள் அன்றோ?)
பக்தர்களோ அந்த மகானின் கரம் பட்டு உணவு அமுதாகியதென்பாராம்
உணவை இறைவனுக்கு  நிவேதனம் செய்த பின் அனைவருக்கும் வழங்குவாராம்.
சைவ உணவை உண்பவர்க்கு அசைவ உணவை தொடவிட மாட்டாராம்
ஆயினும் சிலநேரங்களில் பக்தர்களிடம் சீண்டி பார்ப்பாராம்.
ஒருமுறை சாந்தோகரை அசைவ உணவு பண்டம்  வாங்கி வர சொன்னாராம்
பிராமண குலத்தவராயினும் பாபாவின் கட்டளையை சிரமேர்கொண்டாராம்
கடைக்குச்செல்ல தயாரானாராம்
பாபா உடனே அவரை நிறுத்தி வேறு ஒருவரை அனுப்பினாராம்
பின்னர் அதையும்தடுத்து விட்டாராம்.
இதுவும் பாபாவின் திரு விளையாடல்தானே?
பக்தர்களை தன் குறும்புத்தனத்தால் குரு பக்தியின் ஆழத்தை உணர்த்திய
திரு சாயி ராமனை வணங்குவோம்.

Sunday, February 07, 2010

ரகு ராமனும் சாயிராமனும்- 25 (இரண்டாம் பகுதி )

சென்னையிலிருந்து சிலர்  காசி யாத்திரை செல்ல முடிவெடுத்தனராம்
அவர்கள் அற்புதமாக பக்தி பாடல்கள் பாடுவாராம்.
அக்குழுவில் ஒரு கணவன்,மனைவியும் அவர் தமக்கையும்  இருந்தனராம்
ஸ்ரீ சாயியைபற்றி செவிஉற்றனராம்
அவரைத் தரிசிக்க ஆவலுற்றனராம்
கணவனுக்கு சாயி  அளிக்கும் தட்சிணையில் ஆசை உண்டாயிற்றாம்
மனைவியோ பெரும் பக்தி கொண்டிருந்தாராம்.
எனவே சாயி அந்த மனைவிக்கு   அவர் இஷ்ட தெய்வமான
சீதா ராமனைப்போல் காட்சி அளித்தாராம்
மற்ற்வற்கோ சாயினாதனாகவே காட்சி அளித்தாராம்
அப்பெண்மணி பரவச பேரானந்தத்தில் திளைத்தாராம்
தன் கணவனிடம் இதை மகிழ்வுடன் சொன்னாராம்
கணவர் அதை அப்பெண்மணியின்  கற்பனை என்று கேலி செய்தாராம்
ஆனால் அப்பெண்மணி அதை பொருட்படுத்தாமல் விட்டாராம்.
உண்மையான பக்திக்கு விளம்பரமோ ஆடம்பரமோ தேவையில்லை.
வெளிச்சம் போடவும் அவசியம் இல்லை
பிறர் மெச்சவோ, புகழவோ பக்தி செய்ய தேவை இல்லை.
மெய்யான பக்திக்கு ஸ்ரீ சாயி தந்த பரிசும் ஆசியும் அது என அறிந்து
ஸ்ரீ சாயியின் பொற் பாதங்களை வணங்குவோம்.