Sunday, March 21, 2010

அவனன்றி ஓரணுவும் அசையாது-32

ஒரு முறை கோவாவிலிருந்து இருவர் பாபாவைத் தரிசிக்க வந்தனராம்.
ஒருவரிடமிருந்து தட்சிணையாக பதினைந்து ரூபாய் பெற்றாராம்
மற்றொருவர் முப்பத்தைந்து ரூபாய் தாமாகவே கொடுத்தாராம்
பாபா அதை ஏற்க மறுத்துவிட்டாராம்.
ஆனால் அதைத் தொடர்ந்து பாபா  ஒரு கதை(போல ) சொன்னாராம்
"நான்  எழ்மையிலிருந்தபோது நல்ல வேலை கிடைத்தால் முதல் மாத சம்பளத்தை இறைவனுக்கு அர்ப்பணிப்பதாக சொன்னேன்.பதினைந்து ரூபாய்க்கு வேலை கிடைத்தது.மேலும் மேலும் உயர்வூதியமும் கிடைத்தது.ஆயினும் என் வேண்டுதலை மறந்து விட்டேன்"என்றாராம்.
அடுத்தகதை :(பாபா சொன்னது)
"நான் கடலோரமாக சென்று கொண்டிருந்தேன்.அங்கே ஒரு பெரிய இல்லத்தை பார்த்தேன்.தங்க இடம் கேட்டேன்.ஒரு அலமாரி அருகே இடம் கொடுத்தார் அந்த வீட்டுக்காரர்.ஆனால் இரவு என்னிடமிருந்த முப்பத்தைந்தாயிரத்தை எடுத்து விட்டார் .நான் கதறி அழுதேன்.அவ்வழியே சென்ற பெரியவர்"நான் சொல்வது போல் செய்தால் நீ பணத்தை திரும்ப பெறலாம்.நான் ஒரு பாகீர் இருக்குஇடத்தை சொல்கிறேன். அவரை சென்று பார்.அவர் காலடியில் உன் குறையை சமர்ப்பணம் செய்.அதுவரை .உனக்கு பிடித்த ஒரு விஷயத்தை அந்த பணம் கிடைக்கும்வரை விட்டு விடுவதாக பிறகு பணம் கிடைத்ததும் தொடர்வதாக உறுதி எடுஎன்றார்.நானும் அவ்வாறே விரதம் இருந்தேன். எடுத்தவரே தவறை உணர்ந்து திருப்பி கொடுத்து விட்டார். எனவே அந்த பாகீரை தரிசிக்க முடீவு செய்து பயணம் துவங்கினேன். ஆனால் அந்த படகில் கூட்டம் அதிகம் இருந்ததால் செய்வதறியாமல் நின்றேன். அப்போது ஒருவர் என்னை அழைத்து சென்று படகில் ஏற்றின்னார்" என்றாராம்.
இந்த கதைகளை பாபா வாய் வழி கேட்டதும்  இருவரும் திகைத்தனராம்
ஏனெனில் அந்த கதை அவர்கள் வாழ்வில் நடந்தவையே என்று ஷாமாவிடம் சொன்னாராம்
ஒருவர் சொன்னாராம்
"எனக்கு பதினைந்து ரூபாய்   சம்பளத்தில் வேலை கிடைத்தது.நான்  என் வேண்டுதலை மறந்தேன்.தத்தாவிடம் வேண்டினேன்.அதையே பாபா நினைவூட்டினார்" என்றாராம்.
மற்றொருவரோ பாபா சொன்னபடி அதே முப்பத்தைந்து ஆயிரம்  தொகையை நான் இழந்து கிடைக்கப் பெற்றேன்.ஆனால் பாபாவை தரிசிக்க மறந்தேன். ஒருநாள் பாபா கனவில் தோன்றினார்.அதனால் பாபாவை தரிசிக்வந்தேன்.கூட்டமாக இருந்த  படகில் ஏறவும் எனக்கு ஒருவர் உதவினார் என்றாராம்.
நமது வேண்டுதல்களை செவி சாய்க்கும் தெய்வத்திற்கு நம் நன்றியைக் காட்டவும் மறக்கலாமோ?
அவ்வாறு மறக்கும் போழ்திலும் நாம் பாவச் சுமையை  சுமக்காதிருக்கும் பொருட்டு அவரே நமக்கு நினைவூட்டி காத்திடுவார்.அதுவே அந்த தெய்வத்தின் சிறப்பு
சகுன பர பிரம்மன் ஸ்ரீ பாபாவை வணங்கி அவரருள் பெறுவோம். சாய் ராம்.

Saturday, March 13, 2010

மாம்பழலீலை - 31

தாமு அண்ணா பாபாவின் சீடருள் ஒருவராம்
அவரும் ஒரு உண்மைச் சம்பவத்தினாலே மன பக்குவம் அடைந்தாராம்
நண்பர் ஒருவர் வியாபாரத்திற்கு துணை சேர அழைத்தாராம்
அது பெருத்த லாபம் கொடுக்கும் என்றாராம்
தாமு அண்ணா சாமா அவர்களுக்கு எழுதி பாபாவின் அனுமதி கேட்டாராம்
பிறகு நேரிலும் வந்தாராம்
அதற்கு பாபா "அவனுக்கு வானத்தை பிடிக்கும் எண்ணமா
அரை துண்டு ரொட்டி போதாதாமா? பேராசை வேண்டாம் .
இருப்பதில் நிறைவு கொள்ள சொல்" என்றாராம்
தாமு அண்ணாவுக்கு பாபாவை கேட்டிருக்க கூடாதோ என்று தோன்றியதாம்
மீண்டும் நெல் கொள்முதல் வியாபாரம் செய்ய எண்ணி பாபாவை கேட்டாராம்
"ஒரு ரூபாய்க்கு ஐந்து படி வாங்கி ஏழு படி ஒரு ரூபாய் என விற்பாய்" என்றாராம்
தாமு அண்ணா அதையும் வருத்தத்துடன் கை விட்டாராம்
பிறகு அந்த முறை பெரு மழை பெய்ததால் விலை குறைந்திற்றாம்
நெல்லை சேமித்து வைத்தவர்கள் வியாபாரத்தில் நட்டம் அடைந்தனராம்
தாமு அண்ணா தன் தவறை உணர்ந்தாராம்
அது முதல் தாமு அண்ணாவின் பக்தி பாபாவின் மேல் பெருகிற்றாம்
அவருக்கு மனைவிகள் இருந்தும் மழலை இன்றி தவித்தாராம்
ஜாதகத்தில் பாவி கிரகம் உளதென்று சோதிடர் சொன்னாராம்
ஆயினும் பாபாவின் மேல் நம்பிக்கை வைத்து அவர் காத்திருந்தாராம்
ஒரு நாள்  மாம்பழக் கூடை பாபாவிற்கு ராலே என்பவர் அனுப்பினாராம்
அதில் நான்கு பழங்களை பாபா தம்மிடம் வைத்துக் கொண்டாராம்
"இது என் தாமுவிற்கு"  என்றாராம்
தாமு அண்ணா பாபாவைத் தரிசிக்க வந்தாராம்.
பாபா "இதை பலர் விரும்பினாலும் இது யாரைச் சேர வேண்டுமோ அவர்கள் உண்ணட்டும் மரிக்கட்டும்"என்றாராம்.
இதைக்கேட்ட தாமு அண்ணன் திடுக்கிட்டாராம்
மனம் வருந்தினாராம்
மகால்சாபதி அவரிடம்"பாபா மரிக்கச் சொன்னது மமதை , இறுமாப்பு, கர்வம் "இவற்றைத்தாம் "என்றாராம்
தாமு அவர்கள் வந்ததும் பாபா  "இதை உன் இளைய மனைவிக்கு கொடு என்றாராம்
நான்கு பெண் நான்கு  ஆண் என மழலைகள் பிறக்கும் என்றாராம்
அவ்வண்ணமே நடந்ததெனச் சொல்லவும் வேண்டுமோ?
மாம்பழ லீலை புரிந்து ஜோதிடரை பாபா  பொய்யராக்ககினாராம்
இந்த அற்புத லீலை புரிந்த ஸ்ரீ சாயியை , பக்தர்களின் வேண்டுகோளை நிறை வேற்றும விருக்ஷத்தை ,என்றென்றும் அவன் பாதம் பற்றி சம்சாரம் என்ற கடலை கடக்க உதவும் தோணியை வணங்கி போற்றுவோம்.சாயி ராம்.

Sunday, March 07, 2010

நம் நடத்தை பற்றி பாபாவின் அறிவுரை - 30

உனை நாடி வரும் மனிதரையோ உயிரினத்தையோ வரவேற்று உபசரியுங்கள் என்பாராம்.

ஏதோ ஒரு தொடர்பு இருப்பதால்தான் அவர்கள் வருகிறார்கள் என்றுரைப்பாராம்

தாகத்திற்கு நீரும்,பசித்தோருக்கு  ரொட்டியும், உடுத்த ஆடையும் அளியுங்கள்
கடவுள் மனமகிழ்ந்து உங்களை வாழ்த்துவார் என்பாராம்.

உங்களிடம் அவதூறு பேசுபவர்களிடம் வெறுப்பைக்காட்டாதீர்கள்
பொறுத்துக்கொண்டால் உங்களுக்கு மகிழ்ச்சியே கிட்டும் என்பாராம்

உலகமே தலை கீழ சுழன்றாலும் நீங்கள் இருக்கும் இடத்தில் இருங்கள் என்பாராம்

உங்களைச் சுற்றி நடப்பதை அமைதியுடன் கவனியுங்கள் என்பாராம்.

எனக்கும் உங்களுக்கும் இடையே இருக்கும் சுவரை உடையுங்கள்
அப்போது பாதை தெளிவாகும் என்று சொல்வாராம்

எல்லார்க்கும் இறைவன் ஒருவனே எசமானன்
அவர் செயலே அற்புதமானது, அலாதியானது
இறைவனை பணிந்து  வேண்டினால் எல்லா நலமும் கிட்டும் என்பாராம்

அவர் நமக்கு எது நல்லதோ அதையே செய்வார் என்று நம்புங்கள் என்பாராம்.

நாம் எந்த செயலை செய்தாலும் குருவிற்கு அர்ப்பணம் செய்ய வேண்டும்
குருவும் இறைவனும் ஒன்றே.
நினைப்பு, நடப்பு யாவிலும் பாபாவை எண்ணியே  செய்தால்
கனவிலும் நனவிலும் பாபாவின் உருவமே தோன்றும்.
இச்சைகள் மறைந்து அவரிடம் ஒன்றிவிடுவோம்
மனம் நிம்மதி அடைந்து சுகமாக வாழலாம்
சகுன பர பிரமன் சாயினாதனை பணிந்து வணங்குவோம்.
சாய் ராம்