Saturday, May 29, 2010

விதைத்ததே அறுவடையாகும் - 40 (பாகம் 1)

சாயிராம் ஒருநாள் சொன்னாராம்
நான் நதி கரை அருகே சென்று கை கால்களை கழுவிக் கொண்டிருந்தேன்
பிறகு குழாயை எடுத்துப் புகைக்கத் துவங்கினேன்
ஒரு தவளை கத்தும் ஒலி கேட்டது
அப்பொழுது அங்கு வந்த வழிப்போக்கன் அது என்னவென்று கேட்டார்
தவளையை பாம்பு விழுங்கப் பார்க்கிறது என்றேன்
தான் நேரில் சென்று பார்த்து வருவதாக சொன்னார்
வந்தவர்"தவளையை பாம்பு விழுங்கிவிடும்" என்றார்
நான் அதை தடுப்பேன் என்றேன்
அங்கு சென்று: ஏய் வீர பத்ரப்பா! இன்னும் உன் பகை தீரவில்லையா?
பசப்பா தவளையாய் பிறந்தது போதாதா?
நீ மாற மாட்டாயா ? என்றேன்
பாம்பு உடனே தவளையை விட்டு விட்டது தவளை ஓடி மறைந்தது
இதை பார்த்த வழி போக்கன் வியந்தார்
அப்போது நான் அவர்களின் பூர்வ கதையை சொன்னேன்
                                                                     

Sunday, May 16, 2010

பாபாவின் உதி சொல்லும் தத்துவம் - 39

பாபா தன் பக்தர்களுக்கு உதி அளிப்பாராம்
அது பல நோய்களைத் தீர்த்தது என்பதை  அறிவோம்
அது வாழ்கைத்தத்துவத்தையும்   போதித்தது என்றே சாயி சரிதம்
எழுதிய பெரியார் சொல்கிறார்
நாம் இப்புவியில்  கண் எதிரே காணும் பொருட்கள் யாவும்
நிலையற்றது .திடமான விறகு கட்டைகள் எவ்வாறு தீயில் சாம்பலாகிறதோ அவ்வாறேஇவ்வுலகில் யாவும்நிலையற்றது. பரப்ரம்மனே நிலையானவர்.அவரை  வணங்கும்
சந்தோஷமே  அன்றி மற்று நாம் அனுபவித்து மகிழும் யாவுமே நிலைக்காது. பஞ்ச பூதங்களாலான நம் உடல் அழியக்கூடியது என்பதை உணர்த்தவே பாபா உதி அளித்ததாக சாய் சரிதம் எழுதிய மகான்கள் சொல்கின்றனர்.

ஜாம்நேரில் சாண்டோர்கருக்கு உதி கிடைத்த அற்புத நிகழ்வு :
ராம்கிர்புவா என்பவர் பாபாவின் பக்தராம்
அவர் பாபாவைத் தரிசித்த பின் தன் ஊர் திரும்ப  விரும்பினாராம்
பாபா அவரை ராமேரில் தங்கி பின் பயணத்தை தொடர சொன்னாராம்
ராம்கிர்புவா தன்னிடம் அவ்வாறு செல்ல போதிய பணம் இல்லை என்றாராம்
ஜல்காவ்ம் வரைதான் செல்ல இயலும் என்றாராம்.
பாபா அவரிடம் "அதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்படும்  நீ செல்.ஜாம்நேரில் என் பக்தன் சாண்டோர்கரின் மகள் மைனாதாய் பிரசவ வலியில் தவிக்கிறார்.ஆபத்தான நிலையில் இருக்கிறார்.இந்த உதியையும் ஆரத்தி பாடலையும் அவரிடம் கொடு"என்றாராம்
ஜல்காவில் இறங்கியபோது இரண்டு அணாக்கள் மட்டுமே வைத்திருந்தாராம்
அவருக்கு ஆறுதல் தரும் வகையில்"இங்கு ராம்கிர்புவா யார்?" என ஒருவர் கேட்டாராம்
உங்களுக்கு நானா அவர்கள் குதிரை பூட்டிய ஜட்கா அனுப்பி அழித்து வர
சொன்னார் என்றாராம்.
வண்டியில் பயணம் செய்தபோது வழியில் சுனை ஒன்றை கண்டதும்
வண்டி ஒட்டி ஜட்காவை நிறுத்தினாராம்
ராம்கிர்புவாவிற்கு உண்ண பழங்களை அளித்தாராம்
வண்டி ஒட்டி முஸ்லிம் போல தோற்றமளிக்கவே அவர் அதை உண்ண தயங்கினாராம்
வண்டி ஒட்டி "நான் இந்துதான்.தயங்காமல் அருந்துங்கள்" என்றாராம்
விடியும் நேரம் வண்டி ஜாம்நேரை நெருகிய போது ராம்கிர் இயற்கை உபாதை கழிக்க
வண்டியை நிறுத்த சொன்னாராம்
முடிந்ததும் திரும்பினால் ஜட்காவையும் வண்டி ஒட்டியையும் காணாமல் ஆச்சர்யம் அடைந்தாராம்
வழி விசாரித்து சாந்தோர்கர் வீட்டை டைந்தாராம்
உதியை அளித்ததும் சாண்ட்தோர்கர் மகளுக்கு அதை  இட்டாராம்
பிரசவம் நான் முறையில் முடிந்ததும் ராம்கிர் வண்டி அனுப்பியதற்கு நன்றி தெரிவித்தாராம்
சாந்தோர்கர் தாம் வண்டி அனுப்பவில்லையே என்று வியந்தாராம்
பாபாவின் மகிமையையும் உதியின் மகிமையையும் அறிந்தவர்க்கு
வண்டி ஒட்டி யார் என்று தெரியாதா?
பக்தருக்காக எதையும் எதையும் செய்வாரே அந்த சித்தர்!

Sunday, May 09, 2010

எளிய முறையில் உபநிஷத விளக்கம் சொன்னவர் -38

தாஸ்கனு என்ற பக்தர்  பல நூலகளையும் கற்றுத் தேர்ந்தவராம்

ஆயினும் ஈஷா உபநிஷத்தை மராத்தியில் மொழி பெயர்க்கும்போது

பல ஐயங்கள் கொண்டாராம்

பாபாவைச் சரணடைந்தபோது அவர் " காகாசாஹிப் த்ஹ்க்ஷித்

வீட்டு வேலைக்காரி உனக்கு விடை அளிப்பாள்"என்றாராம்

அதைக் கேட்ட அனைவரும் பாபா குறும்பு செய்வதாக நினைத்தனராம்

ஆனால் தாச்கனு அவ்வாறு எண்ணாமல் தீட்சித் வீட்டிற்கு சென்றாராம்

அங்கு சென்றதும் அந்த வீட்டு வேலைக்காரச் சிறுமி அழகாக பாடுவதை கேட்டாராம்

"கருஞ்சிவப்பு வண்ண புடவை....அழகான பூக்கள் பின்ன வண்ணக் கரைகள் மின்ன கண்ணைக் கவர்கிறதே" என்பது அந்த பாடல் பொருளாம்

பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தாலும் மகிழ்வுடன் பாடிக்கொண்டிருந்த

அந்த சிறுமி அணிந்திருந்ததோ ஒரு கந்தல் ஆடையாம்

மறுநாள் ராவ் பகதூர் தாச்கனுவிற்கு வேஷ்டி வாங்கி கொடுத்தாராம்

அந்த சிறுமிக்கும் ஒரு புடவை வாங்க வேண்டுமென தாச்கனு வேண்டினாராம்

மறுநாள் அந்த புடவையில் வந்த சிறுமி அழகாக பாடி ஆடினாளாம்

அதற்கு அடுத்த நாள் மீண்டும் பழைய கந்தல் ஆடையில் வந்தாளாம்

அப்பொழுதும் அதே மகிழ்ச்சியுடம் பாடினாளாம்

தாஸ்கனு உடனே ஈஷா உபநிஷத தத்துவத்தை உணர்ந்தாராம்

"ஒருவரது மன நிலையைப் பொறுத்தே அவரவரது இன்ப துன்பம் அமைகிறது" என்று உணர்ந்தாராம்.புற நிலைகள் வேறானாலும் மனமோ மகிழ்வுடன் இருத்தல் வேண்டும் என்பதை அறிந்தாராம்மிகப் பெரிய தத்துவத்தையும் எளிதாக உணர்த்த அந்த சாய் சமர்த்தரைத் தவிர யாரால் இயலும் என்பதை நாம் அறிந்து சாய் ராமை வணங்குவோம்

Sunday, May 02, 2010

சரிகை துணியும் கந்தல் ஆடையும் - 37

தியோ என்ற பக்தர் "ஞானேஸ்வரி" என்ற பக்தி நூலை படிக்க விரும்பினாராம்
பல பக்தி நூல்களையும் படிப்பாராம்
ஆயினும் இந்த நூலை எடுத்தால் படிக்க இயலாமல் தடை வந்து  தவித்தாராம்
சாயினாதரை தரிசித்து இதற்கு வழி தேட விரும்பினாராம்
ஷிர்டி வந்ததும் ஜோக் என்பவரிடம் இதை சொன்னாராம்
ஜோக் அவரிடம் "ஒரு புத்தகத்தை வாங்கி பாபாவிடம் கொடுத்து ஆசி பெற்று
பின்னர் படிக்க ஆரம்பியுங்கள்" என்றாராம்
"ஏன் என் மனதில்  இருப்பதை  பாபாவே அறிந்து கொள்ளட்டும் என்றாராம்
பாபாவை தரிசித்த போது அவரிடம் பாபா  இருபது ரூபாய் தட்சிணை கேட்டாராம்
அன்று இரவு தியோ  பல்க்ராம் என்பவரை சந்தித்தாராம்
அவர் "மதிய ஆரத்தி முடிந்ததும் நான் பாபாவிடம் என் மன குறையை சொல்வது
வழக்கம்" என்றாராம்
மறு நாள் பாபா மீண்டும்  தியோவிடம் தட்சிணை கேட்டாராம்
கூட்டம் அதிகம் இருந்ததால் தியோ தனியே அமர்ந்து விட்டாராம்
அங்கே வந்த பால்க்ராமிடம் "பாபா உங்களுக்கு என்னவெல்லாம் சொல்லிக்கொடுத்தார் .... த்யானம் சொல்லிக்கொடுத்தாரா என்றெல்லாம் வினவினாராம்
சிறிது நேரம் கழித்து பாபா தியோவை கூப்பிட்டனுப்பினாராம்
"தங்க சரிகையில் நெய்த பட்டாடை இருக்கையில் கந்தலாடை எதற்கு என்று கேட்டாராம்
 பிறகு மிகவும் கடிந்து கொண்டாராம்.
அப்போதுதான் தியோ பாபா சொன்னதை புரிந்து கொண்டாராம்.
சரிகை ஆடை போல் சாயி இருக்கும் போது மற்றவரிடம் ஏன் கேட்கிறாய் என்று பகவான் சொன்னதின் பொருள் என்று அறிந்தாராம்
பாபா அவரிடம் "தினமும் ஞாநேஸ்வரியிலிருந்து ஒரு பக்கம் படி.படித்ததை மற்றவர்க்கும் விரித்துச் சொல்" என்றாராம்
தியோ மிகவும் மகிழ்ந்தாராம்.
மறு வருடம் கனவில் பாபா தோன்றி "இப்போது புரிகிறதா? "என்றாராம்
"இப்பொழுதும் புரியவில்லை" என்று தியோ சொன்னாராம்
நிதானமாக கவனமாக படி.இப்போது என் முன் படி ஞான மார்க்க அத்தியாயத்தை படி என்றாராம்.
புத்தகத்தை எடுத்து வர செல்கையில் கனவு கலைந்ததாம்
தியோ அடைந்த பரவசத்திற்கு எல்லை எது?
ஞானமற்றோற்கு ஞானம் அளிப்பதும்,படிப்படியாக பாமரனும் புரிந்து கொள்ளும்வண்ணம் அருள் புரிந்து தெளிவிப்பதும் ஸ்ரீ சாயியின் கருணைதானே!மேலும் குருவிடம் நேரடியாக சரணாகதி அடைவது ஒன்றே சிறந்த வழி என்ற நெறியையும் இது விளக்குகிறது.
சாயி இருக்க பயமேன்?
மனக்குறையை அவரிடம் நேரே சொன்னாலே போதுமே.
பக்தருக்காக உடனே வருவாரே?
சாயி ராம்.