Wednesday, June 30, 2010

சன்யாசிக்கு முக்தி தந்த பெருமான் - 43

சென்னையிலிருந்து விஜயானந்த் என்ற சந்நியாசி மானசரோவர் யாத்திரை மேற்கொள்ள விரும்பினாராம்
செல்லும் வழியில் பாபாவின் பெருமைகளை கேள்விப்பட்டு ஷீரடியில் இறங்கினாராம்
சோம்தேவ் சுவாமிஜி என்பவரிடம் மான சரோவர் யாத்திரைக்கான வழிகளை கேட்டாராம்
அவரோ அது மிகவும் குளிர் மிகுந்த,பல மொழிகளை பேசுவோர் நிரந்த கடினமான பயணம் என்று கூறினாராம்
இதனால் விஜயானந்த் பயணத்தை ரத்து செய்து விட்டாராம்
பாபாவை தரிசிக்கச் சென்றாராம்
"இந்த சந்நியாசி இங்கு எதற்கு வந்தார்?" என்று பாபா கடிந்து கொண்டாராம்
(பாபாவின் கோபம்,சாந்தம், இன்மொழிகள், கடிந்துகொள்ளல் யாவையுமே காரணங்கள் அவர் மட்டுமே அறிந்தவையாம்)
மனம் வருந்தினாலும் அந்த சந்நியாசி பாபா தரிசனத்திலே இரண்டு நாட்கள் கழித்தாராம்
பிறகு "தாயார் உடல் நிலை சீர் கேட்டு விட்டது"என்ற ஒரு தகவலுடன் வந்த தந்தியை பாபாவிடம் காட்டி ஊர் திரும்ப சம்மதம் கேட்டாராம்
பாபா அவரிடம்"தாயாரிடம் பாசம் இருப்பவர் எதற்கு சந்நியாசி ஆக வேண்டும்?பந்த பாசங்களை ஒழித்து இறைவனின் அடி பணிவதல்லவோ சன்யாசிக்கு அழகு?என்றாராம்.
பின்னர் " உன் குடிஇருப்பில் சென்று அமைதியாக அமர்.பாகவதம் மூன்று முறை படித்து முடி. ஆசைகளை விட்டொழி.ஹரியை சரணடை" என்றாராம்.
மேலும் அவரது இறுதி நெருங்கி விட்டதை அறிந்த பாபா "ஸ்ரீ ராமா விஜயமும் " படிக்கப் பணித்தாராம்.
லேண்டி தோட்டத்தில் அமர்ந்து பாகவதம் படிக்க ஆரம்பித்தவர் களைப்படைந்து பாப்பாவிடம் வந்தவர் அவர் மடியில் உயிர் நீத்தாராம்.
என்ன ஒரு பேரின்பம்! என்ன ஒரு பாக்கியம்!பெரும் பேறன்றோ !
வேறு பாதையில் செல்ல இருந்தவரிடமும்,தன் திருஷ்டியை செலுத்தி தம்மிடம் வர வைத்து முக்தி அளித்தாரே!பாபாவை சரணடைந்தால் எத்தகைய பேறும் அவரருளால் நமக்கு கிட்டும் என்று உணர்த்தும் இச் சரிதத்தைப் படித்துப் பயனடைவோம்!
சாய் ராம்! சாய் ராம்! சாய்ராம்!

Wednesday, June 23, 2010

சாய் ராம பக்த ஹனுமான் ஸ்ரீ நானாவலி - 42

தர்கத் என்ற குடும்பத்தினரின் அனுபவ பூர்வ விவரிப்பின்படி  :
நானாவலி என்று ஒரு சாய் பக்தர் இருந்தாராம்
அவர் பலவித சேஷ்டைகளும் செய்வாராம்
கோமாளிபோல் தோற்றமும் நடவடிக்கையும் கொண்டவராம்
அவர்  ஹெர்னியா எனும் உடல் உபாதை கொண்டவராம்
எனவே உடலின் பின் புறம் வால் போல் ஆடையை சுத்தி இருப்பாராம்
அதன் பொருட்டு சிறிது கோணல் மாணலாக நடப்பாராம்
வீதியில் அவர் நடந்தால் சிறுவர்கள் அவரை கேலி செய்து துன்புறுத்துவராம்
அவரோ வெகுவேகமாய் சாயிடம் சரண் புகுவாராம்
பணம் பொருள் தேடி ஷீரடிக்கு வரும் பக்தர்களின் நடவடிக்கையை கேலி செய்வாராம்
ஆயினும் ஸ்ரீ சாய் பக்தியில் அனுமனுக்கு நிகராம்
ஒருமுறை பாபாவை இருக்கையை விட்டு எழச் சொன்னாராம்
அதில் தான் அமர்ந்தாராம்
மீண்டும் பாபாவை இருக்கையில் அமரச் சொன்னாராம்
பின்னர் "இந்த இருக்கையில் நீங்கள் ஒருவர் மட்டுமே அமர முடியும்
நான் எப்பவும் உங்கள் காலடியில் அமரவே விரும்புகிறேன் என்றாராம்
திரு பாபாவை இப்படி உரிமையுடன் எவரால் இருக்கையை விட்டு எழச் சொல்லமுடியும்?
பாபாவும் தன் அன்பு பக்தருக்காக அடி பணிந்தாரே!
ஒருமுறை நானாவலி  கவல்யாவை தன்னுடன் வரும்மாறு அழைத்தாராம்
மசூதியின் உள் புகுந்ததும் தன் உருவத்தைச்  சுருக்கி
உத்தரத்திலிருந்து இறங்கும் கண்ணாடி விளக்கைப் பிடித்துக் கொண்டு
தொங்கினாராம்
இவ்வாறு உருவத்தைச் சுருக்க எவரால் இயலும் ஹனுமனை அன்றி?
பாபா மகா சமாதி அடைந்ததும் மிக்க துயரத்தில் ஆழ்ந்த நானாவலி
பதி மூன்றாம் நாள் இவ்வுலக வாழ்வை நீத்தாராம்
ராம பக்தியில் ஸ்ரீ ஹனுமாருக்கு நிகராக ,சாய் ராம பக்தியில் பக்தி செய்தல் என்பதற்கு இலக்கணமாக இருந்த நானாவளியின் வழியை நாம் பின் பற்றுவோம் .சாயி நாதர் அருள் பெற வேண்டின் அறிவுடையவராகவோ, செல்வம் உடையவராகவோ,பெரும் பதவியிலிருப்பவராகவோ, உருவ பொலிவு உடையவராகவோ, ஏன் மனித இனமாக மட்டுமே கூட  இருத்தல் ஒரு தகுதிஆகா.
புழு,பூச்சி,பக்ஷி,மிருகம்,போன்ற எல்லாவற்றையும் நேசிக்க கற்று கொடுத்த ஆசான் அல்லவா அவர்!
ஷீரடியில் லேண்டி தோட்ட முகப்பில் இருக்கும் அந்த நானாவலி என்ற  பக்தரின் சிலையை வணங்குவோம்

சாய் ராம் சாய் ராம் சாய்ராம்

Monday, June 14, 2010

எதையும் அறியும் மாயக்காரர் -41

ஸ்ரீ தாஸ்கனு அவர்கள் கொவ்பினேச்வர கோவிலில் சாய் கீர்த்தனைகள் பாடிகொண்டிருந்தாராம்
அதைக் கேட்டுக் கொண்டிருந்த சொல்கர் என்பவர் இவ்வாறு மனதில் வேண்டினாராம்
"பாபா! நான் ஏழை.என் அலுவலக தேர்வில் வெற்றி பெற்று நல்ல பதவி கிடைத்தால் ஷீரடி வருகிறேன்."
தேர்வில் வெற்றி பெற்று விட்டாராம்
ஆனால் ஷிர்டி செல்ல பணம் இல்லாததால் தினமும் தான் குடிக்கும் தேநீரில் சர்க்கரை போட்டுக்கொள்ளாமல் அந்த பணத்தை சேமித்து பின் ஷிர்டி சென்றாராம்
தரிசனம் முடிந்ததும் பாபா சொல்கர் தங்கியுள்ள இடத்தை சேர்ந்த ஜோக் என்பவரிடம்   "இவருக்கு தேநீரில் நிறைய சர்க்கரை போட்டு இனிப்பாக அளியுங்கள் என்றாராம்"
சொல்கர் திகைத்து மறுபடியும் பாபா காலடியில் விழுந்தாராம்
பிறகு ஜோகிடம் சொல்கர் நடந்ததை சொன்னாராம்
பகவான் நம்மை நாம் எங்கிருந்தாலும் கவனிப்பதோடு நம்முள் புகுந்து நம் எண்ணங்களையும் செயல்களையும் கவனித்து ஆசி அளிக்கிறார் என்பது தெரிகிறதல்லவா?
அற்புத செல்வர் சாய் நாதரை வணங்குவோம்

Thursday, June 03, 2010

சாயிராம் சொன்ன பூர்வ கதை - 40(பாகம் 2)

பாம்பு தவளை இரண்டின் பூர்வோத்திரத்தை சாய் சொன்னது:
ஒரு சிவன் கோயில் பாழடைந்த நிலையில் இருந்திற்றாம்
ஊர் மக்கள் ஒன்று கூடி பணம் திரட்டினாராம்
கருமியும் பணக்காரருமான  ஒருவரிடம் அதைக் கட்டும் பொறுப்பை ஒப்படைத்தனராம்
அவரோ பெரும் பணத்தை தாம் வைத்துக்கொண்டாராம்
ஒரு நாள் சிவன்  அந்த கருமியின் கனவில் வந்தாராம்
உன் கணவரின் செயலில் உனக்கு பொறுப்பு இருக்கிறதாகையால்
நீ உன் பங்காக பணத்தை கொடு என்றாராம்
 அந்த பெண் தன் நகையை விற்று அளிக்க நினைத்தாராம்
அந்த கருமி அந்த நகைக்குரிய பணத்தை தான் கொடுப்பதாக சொல்லி
குறைந்த விலை மதிப்பீடு செய்தாராம்
மேலும் அந்த பணத்திற்கு ஈடாக நிலம் அளிப்பதாக சொன்னாராம்
அந்த  நிலமும் துபாக்கி என்ற பெண்மணி அடமானம் வைத்ததாம்
மேலும் விளைச்சல் இல்லா நிலத்தை அதிக விலைக்கி பூசாரியிடம் அளித்தாராம்
இவ்வாறு மனைவியை, டுபாக்கியை, பூசாரியை, கடவுளையும் ஏமாற்றினாராம்
பின்னர் ஒருநாள் இடி தாக்கி இவர்கள் இறந்தனராம்

மறுபிறவியில் அந்த கருமி பிராமன குளத்தில் பிறந்து வீர பத்ரப்ப என்று அழைக்கப்  பட்டாராம்
அவரது மனைவியோ கோவில் பூசாரிக்குப் பிறந்து கௌரி என
அழைக்கப் பட்டாராம்
துபாக்கி ஒரு கோவில் பணியாளரின் வீட்டில் மகனாகப்  பிறந்து சென்னபச்ப்பா என்று அழைக்கப் பட்டாராம்
பாபா அந்த பூசாரியின் நண்பரானதால் பிக்ஷை கேட்டு அந்த ஊருக்கு வந்த வீரபட்ரப்பாவை கௌரிக்கு மணமுடிக்க சொன்னாராம்
ஆனால் இந்த பிறவியிலும் அவன் பணத்தாசை விடவில்லை
திடீரென, தானமாக அளிக்கப்பட அந்த நிலம் விலை ஏற்றம் கண்டது
முன்  பிறவியில் கௌரி கருமியின் மனைவியாக தன் நகைகளை விற்று அடைந்த நிலம் அது.
அந்த நிலம் விஷயமாக வீரபத்ரப்பாவும் சென்ன பசப்பாவும் சண்டை இட்டனர்.
பாபாவோ கௌரிக்குத்தான் சொந்தம்  என்றும் எவருக்கும் அளிக்க வேண்டாம் என்றும் சொன்னாராம்
அதைக் கேட்ட வீரபத்ரப்பா  சென்ன  பசப்பாவை அடிக்க சென்றாராம்
பாபாவின் காலில் விழுந்து தன்னை விரோதியிடமிருந்து காக்கும்படி அவர் சொன்னாராம்
பாபாவும் தான் அவரை எப்போதும் விரோதியிடமிருந்து காப்பதாக சொன்னாராம்
அடுத்த பிறவியில் பாம்பாக பிறந்த வீரபட்ரப்பாவிடமிருந்து தவளையாக பிறந்த சென்னபச்ப்ப்பாவை காத்தாராம்
என்ன அற்புதமான கருணை செயல் இது

எத்தனை பிறவிகள் எடுத்தாலும் எத்தகைய உரு எடுத்தாலும் பாபாவின் அருள் நம்மைக் காக்கும்.எடுத்த பிறவி யாவிலும் அந்த மகானின் ஆசி பெரும் தகுதியை பெறுமாறு பக்தியும் தூய உள்ளமும் ,கொண்டு பேராசை,பொறாமை,அகங்காரம் அற்ற நல வாழ்வே நாம் வாழ்தல் வேண்டும்.
எப்பிறவியிலும் நம்மை காக்கும் சாயி அடி பணிதல் நமது பெரும் பேறன்றோ?
சாய்ராம் சாய்ராம் சாய்ராம்