Thursday, October 21, 2010

ஸ்ரீ சாயி சத்யா வ்ரத பூஜா - 48

மகாராட்டிரத்தை சேர்ந்தவர்கள் சத்யநாராயண விரதம் இருப்பார்கள்.
பீமாஜி படேல் என்பவர் ஸ்ரீ சாயி சத்யா விரத்தத்தை துவங்கியவர்.
அதன் பின்னணியில் அமைந்த சாயி நாதன் அருளைப் பார்ப்போம்.
பீமாஜி மார் வலியால் துன்புற்றாராம்
அதுவே க்ஷய ரோகமாக உருவாயிற்றாம்
ரத்தமாக வாந்தி எடுத்தாராம்
எனவே நானாசாஹிப் சந்தோகருக்கு விரிவாக எழுதினாராம்
அவரோ பகவான் சாயியின் பாதத்தை சரணடைவதே வழி என்றாராம்
பாபாவோ அவரிடம்"இது உன் பூர்வ கர்ம பலன்' என்று சொல்லி விட்டாராம்
பீமாஜி கதறி அழுத தும் பாபா" இந்த த்வாரகமாயியில் உள்ள பாகீர் கருணை உள்ளவர்.அன்புடனும் கருணையுடனும் வியாதிகளை தீர்ப்பார்.கவலைப் படாதே"என்றாராம்
பின்பு பீமாபாய் என்பவர் வீட்டில் தங்க சொன்னாராம்
அந்த வீட்டில் இருந்த போது இரு கனவுகள் மூலமே வியாதியை தீர்த்தாராம்.
ஒரு கனவில் பீமாஜி தான் ஆசிரியர் முன்பு நிற்பதாகவும் அவர் சுவாமி பாட்டை சரியாக ஒப்பிக்காததால் தன்னை சவுக்கால் விளாசுவது போலவும் கண்டாராம்
மறு கனவில் யாரோ தன் உடலில் மேலும் கீழும் கனத்த உருளை கல்லினால் உருட்டுவது போலவும் கண்டாராம்.
அதன் பின் அவர் பூரண குணம் அடைந்தாராம்
ஒரு மருத்துவரோ ஒரு மந்திர வாதியோ இப்பிறவியில் நமக்கு ஏதோ வைத்தியம் செய்து குணப்படுத்துவார்கள்
ஆனால் சாயி என்னும் மருத்துவர், மாந்த்ரீகரால் மட்டுமே நம் எல்லா பிறவி கர்மங்களுக்கும் விடிவு தர முடியும்.
அவர் குணமாக்கும் முறையோ எவருக்கும் புரியாதது.
சாயியை சரணடைந்தால் எப்பிறவி கர்ம வினைகளுக்கும் பரிகாரம் உண்டு என்பது இதிலிருந்து நாம் அறிவோம்
பீமாஜி இதன் பிறகு சாயிக்கு நன்றி செலுத்தும் விதமாக ஸ்ரீ சாயி சத்யா விரத பூஜையை துவங்கி நமக்கெல்லாம் ஒரு வழி முறையும் காட்டினார்.
சாய்ராம் சாய்ராம் சாய்ராம்

Tuesday, October 19, 2010

பக்தரின் துன்பத்தை ஏற்கும் மகான் -47

கபர்தே என்ற பக்தரின்   மகன் ஒருமுறை கடும் காய்ச்சலால் அவதியுற்றாராம்
கொள்ளை நோய் பரவி இருந்ததாம்
அவரது தாய் மிகவும் பதறி விட்டாராம்
சிரடியை விட்டு கிளம்பி அமராவதி சென்று விட எண்ணினாராம்
மாலையில் பாபாவை அணுகினாராம்
தன் மகனின் நிலையை சொன்னாராம்
பாபா அவரிடம் அன்புடன் "வானத்தை இப்போது கருமேகங்கள் சூழ்ந்துள்ளது.
விரைவில் விலகிவிடும்.கவலைப் படாதே என்றாராம்."
சொல்லியபடி தன் கபினியை முன்பகுதியில் எல்லாரும்  பார்க்கும் வண்ணம் விலக்கினாராம்
அங்கு முட்டை அளவு பெரிய கட்டிகள் இருந்ததாம்
என் பக்தனுக்காக நான் துன்பத்தை ஏற்பேன்.வலியைத்தாங்குவேன். என்றாராம்
அங்கிருந்தவர்கள் அந்த மகானின் செயலைக் கண்டு "பக்தனுக்காக மகான்கள் எப்படி மெழுகாக,வெண்ணையாக மனம் இளகுகிரார்கள் என்று உணர்ந்த்னராம்
நீயே சரணம் என்று தஞ்சம் அடைந்த பக்தனின் துன்பத்தையும் சாயி ஏற்பார்
என்பதை உணர்ந்து அவர் பாதங்களை எந்நேரமும் பற்றுவோம்.
சாயி சரணம் சாயி சரணம்  சாயி சரணம்