Thursday, November 18, 2010

ஸ்ரீ சாய் துதி பாடல்கள் - 1

ஸ்ரீ சாய் கணேசா

போற்றுவோம் போற்றுவோம் கணபதியைப் போற்றுவோம்

போற்றுவோம் போற்றுவோம் சாய் கணபதியைப் போற்றுவோம்

போற்றி போற்றி போற்றி போற்றி சித்திவிநாயகா


போற்றி போற்றி போற்றி போற்றி ஷீரடியின் நாயகா



பரமசிவன் பார்வதியின் மைந்தனையே போற்றுவோம்

பாமரனாய் உலகிலவத ரித்தவனை போற்றுவோம்

கரிமுகனாய் உருவெடுத்து வந்தவனை போற்றுவோம்

பரிவுடந்தரு நிழலில் அமர்ந்தவனை போற்றுவோம்


அப்பமுடன் அவல் பொரி தந்தவனை போற்றுவோம்

ஷ்ரத்தை சபூரி என்ற தக்ஷிணை தந்து போற்றுவோம்

முருகன் குமரன் வேலவனின் முன்னவனை போற்றுவோம்

குருபரனாய்உலகில் அவதரித்தவனை போற்றுவோம்


வினைகள் தீர இடர்கள் நீங்க செய்பவனை போற்றுவோம்

செல்வ ஞான வளமும் தந்து அருள்பவனை போற்றுவோம்

நினைத்த எண்ணம் செயல்படுத்த செய்பவனை போற்றுவோம்

நலமும் பெற வெற்றி கிட்ட நம்பி அவனை போற்றுவோம்



ஓம் சாயி நமோ நமோ ஸ்ரீ சாய் நமோ நமோ


ஜெய் ஜெய் சாய் நமோ நமோ சத்குரு சாய் நமோ நமோ

2 comments:

Siva said...

Very nice. Sairam!!

Kala BN said...

Thank you Siva