Wednesday, November 03, 2010

உண்மையான பக்திக்கு பாபா தந்த பரிசு - 49

செப்டெம்பர் இருபத்தெட்டாம் நாள் திரு பாபா உடல் நலிவுற்றாராம்
ஆயிரத்து தொள்ளயிரத்து பதினெட்டாம் ஆண்டு பதினைந்தாம் தேதி
விஜய தசமி நாளன்று,ஏகாதசி துவங்கியதும்  பூவுலகை நீத்தாராம்.
அதற்கு முன் கோடீஸ்வரரான பூட்டி என்பவர் கனவில் அவர்  தோன்றினாராம்
ஷீரடியில் ஒரு அழகிய கட்டடம் கட்டி அதை ஒரு இறைவன் இருப்பிடமாக நிர்மாணிக்கும்படியும் சொன்னாராம்
அதே நேரம் உன்னத சீடரான ஷாமா கனவிலும் தோன்றி பூட்டிக்கு  உதவும்படி கூறினாராம்
பூட்டி உடனே பாபாவிடம் ஆசி பெற்று வேலையை துவங்கினாராம்
அழகிய ராதா கிருஷ்ணர் சிலையை வைக்க திட்டமிட்டாராம்
ஆனால் பாபாவோ " நான் அங்கு தங்குவேன் ஆடுவேன் பாடுவேன் என்பாராம்.
பாபா உடல் நலிவுற்றபோது வாகே என்பவர் வந்தாராம்
அவரை ராம விஜயம் என்ற நூலை படிக்கும்படி சொன்னாராம்
 தொடர்ந்து சில நாட்கள் படித்த வாகே களைப்புற்றாராம்
பாபா தன்னை பூட்டி கட்டியுள்ள கட்டிடத்திற்கு அழைத்து செல்ல சொன்னாராம்
இவ்வண்ணம் சொல்லியாவாறு பாயாஜி மீது சாய்ந்து பூவுலகை நீத்தாராம்
இந்து முஸ்லிம் மத நல்லிணக்க செல்வரான அவர் உடல் பூட்டி கட்டிய புதிய  ஆலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது
அதுவே நாம் அனைவரும் தொழும் சமாதி மந்திர் ஆயிற்று.
பாபா உடல் நலிவுற்ற நேரம் அவருடன் சிறு வயது முதலே அன்பு பாராட்டி அவர் சேவையிலே வாழ் நாளை கழித்த தாத்யா படேல் உடல் நலம் குன்றி ரத்த வாந்தி எடுத்து உயிர் பிரியும் நிலையில் இருந்தாராம்.
ஆனால் பாபாவோ அவர் வேதனையை தான் வாங்கிக் கொண்டு தாத்யாவின் உயிருக்கு உத்தரவாதம் அளிப்பதுபோல் தன் உயிரைக் கொடுத்தாராம்.
தன் பக்தருக்காக தன் உயிரை ஈந்த மகான் ஸ்ரீ பாபா
என்? அப்படி தன் இன்னுயிரை அளித்து அவரைக் காத்தார் அந்த பெருமான்?
தாத்யாவின் அன்னை பைஜாபாய், பாபா காடு மேடுகளில் திரிந்து கொண்டிருந்த காலங்களில் அவர் மேல் சாலப் பரிந்து  தாயினும் மேலான அன்புடன் அவரைத் தேடி அலைந்து அவருக்கு பசியாற உணவளித்தாராம்.
பாபாவும் பாயஜாவின் மகனை தன் உயிரினும் மேலாகக் காப்பேன் என்று அவருக்கு வாக்களித்தாராம்
பைஜாபாய் செய்த தொண்டுக்கு நன்றிக்கடனாக தன் மேல் கொண்ட  பக்திக்காக  அவர் தந்த பரிசே அவர் இன்னுயிராம்
பாபா இறுதி நெருங்கும்போது யாரையும் தன்னிடம் இருக்க விடாமல் உணவருந்த சொல்லி அனுப்பி விட்டாராம்
லக்ஷ்மி பாய் ஷிண்டே போன்ற சிலரே இருந்தனராம்
லக்ஷ்மி பாய் ஷிண்டே ஒரு செல்வந்தராம்
ஆனால் த்வாரகமாயியை நாள் முழுதும் துப்புரவு செய்யும் பணியில் ஈடுபடுவாராம்
ஒருமுறை பாபா அவரைத் தனக்கு ஏதேனும் உணவு கொண்டு வரும்படி கேட்டாராம்
உடனே லக்ஷ்மி பாய் ரொட்டியும் பாலும் எடுத்து வந்தாராம்
பாபா அதை அங்கிருந்த நாய்க்கு போட்டு விட்டாராம்
இதக் கண்ட லக்ஷ்மி "தாங்கள் பசிக்கு உணவு கேட்டதால் கஷ்டப்பட்டு செய்து வந்தேன்.அதை இப்படி நாய்க்கு போட்டது ஞாயமா"  என்றாராம்
"நீ என்னை ஏன்  பிரித்து பார்க்கிறாய்?நாயுள்ளும் ஒரு ஆத்மம இருக்கிறது." என்றாராம்
அன்றிலிருந்து லக்ஷ்மி மிகவும் உள்ளன்போடு தினமும் பாபாவிற்கு ரொட்டி செய்து எடுத்து வருவாராம்
பாபா உண்ட மீதியை பிரசாதமாய்  ராதா கிருஷ்ண மாயிக்கும் எடுத்து செல்வாராம்
அவருடைய சரத்தை, பொறுமை இவற்றை மெச்சி பாபா அளித்த பரிசு அவர் வாழ் நாளிலேய மிக விலை மதிப்பற்றதாம்
பாபா தன் இறுதியை நெருங்கும்போது ,
லக்ஷ்மி பாயிடம் முதலில் ஐந்து ரூபாயும் பின்னர் நான்கு ரூபாயும் தந்தாராம்
பாபா பக்தர்களிடம் பெரும் ஒன்பது ரூபாய் தக்ஷிணை பற்றி முன்னமே கூறியுள்ளோம்
பாபா லக்ஷ்மி பாய்க்கு அதன் மகத்துவத்தை விளக்கினாராம்
அது பாபா மேல் லக்ஷ்மி பாய் கொண்ட பக்தியை மெச்சி அவர் அளித்த பரிசே.
நவ வித பக்தி என்பதற்கு விளக்கம் சொன்ன பாபா அதற்கு இலக்கணமாகத் திகழும் தன் பக்தர்களுக்கு அளிக்கும் பரிசும் ஆசியும் மிக உன்னதமானது.
தன் சமாதியிலிருந்தே இயங்கி நம்மைக் காக்கும் சாயி ராமனின் பாதம் பணிந்து அவர் நாமம் போற்றுவோம்
சாயிராம் சாயிராம் சாயிராம்

No comments: