Saturday, November 27, 2010

ஸ்ரீ சாயி துதி பாடல்கள் - 5

ஸ்ரீ சாய் ரங்கன்

ரங்க ரங்க ரங்கனென்று
பாண்டு ரங்க ரங்கனை
ஷிர்டி சாய் ரங்கனாய்
ஷிர்டி சாய் ரங்கனை
பாண்டு ரங்க ரங்கனாய்
அங்கமெல்லாம்  மண்ணிலிட்டு
பங்கமின்றி பவ்யமாய்
வணங்கி  தினமும் சேவித்தால்
பொங்கும் அவன் அருளுமே
மங்கும் நமது துயருமே

ரங்க ரங்க ரங்கனென்று
திருவரங்க ரங்கனை
 ஷிர்டி சாய் ரங்கனாய்
ஷிர்டி சாய் ரங்கனை
திருவரங்க ரங்கனாய்
அங்கமெல்லாம் மண்ணிலிட்டு

பங்கமின்றி பவ்யமாய்
வணங்கி தினமும் சேவித்தால்
பொங்கும் அவன் அருளுமே
மங்கும் நமது துயருமே.

ரங்க ரங்க ரங்க ரங்கா
பாண்டு ரங்க ரங்க ரங்க ரங்கா
திருவரங்க  ரங்க ரங்கா
ஷிர்டி சாய் ரங்க ரங்கா .

2 comments:

sury said...

மேடம் கவினயா அவர்களின் பதிவு மூலம் வந்தேன்.
ஷிர்டி சாயி ரங்கனின் அருள் கிடைத்தது.
தங்கள் மூலமாக ஷிர்டி சாயி பகவானின்
அருள் எனக்கு கிடைத்தது. மிக்க நன்றி.

நான் ஒரு முதியவன். வலையில் எழுதும் கவிதைகளை எனக்குத் தெரிந்த கர்னாடக இசை
மெட்டுக்களை இட்டு பாடி அதை யூ ட்யூபில் பதிவு செய்வது எனது ஹாபி. கமர்ஷியல் நோக்கு
எதுவும் இல்லை. நான் ஒரு பாடகன் அல்ல. இருப்பினும் இறை முன்னே இசையின் நுணுக்கங்களை
விட இதய சுத்தி முக்கியம்.

உங்கள் பாடல் என்னை பெரிதும் ஈர்த்ததால் பாடி விட்டேன். இன்னும் சற்று நேரத்தின் யூ ட்யூபிலும்
எனது பதிவிலும் வரும். உங்கள் அனுமதி இல்லையென்றால், சொல்லுங்கள். இரேஸ் செய்துவிடுகிறேன்.

பாண்டு ரங்க ரங்க ரங்கா !!
பணிவேன் என் நினைவிலிரு மங்கா மங்கா.

சுப்பு ரத்தினம்.
http://menakasury.blogspot.com

Kala BN said...

நமஸ்காரம்.உங்கள் வலைப் பதிவு என்னை திணறச் செய்து விட்டது.அருமை.
நான் நீங்கள் பாடியதைக்இன்னும் கேட்கவில்லை.ஆனால் என் பதிவைப் பொறுத்த வரை மற்றவர்களுக்கு ஆனந்ந்தம் கிட்டினால் அது என் பாக்கியம்.தாராளமாகப் பாடுங்கள். ஷிர்டி சாய் எல்லோருக்கும் உரியவர்.நான் நானாக எழுதவில்லையே.நீங்கள் பாடி இருப்பதும் அவர் பாட்டுக்குத்தான்.
மேலும் 'ரங்க ரங்க ' பாடலும் நான் வேறெங்கோ கேட்டதிலிருந்து சிறிது மாற்றம் செய்யப் பட்டுள்ளது. அவ்வளவே.
நன்றி.