Thursday, December 16, 2010

ஸ்ரீ சாய் துதி பாடல்கள் - 9


நவக்ரஹ நாயகன் சாய்

அற்றைத்  திங்கள் முழுமதி ஒளி ஒன்று
இத்தரை  சாயியாய் இறங்கியதே !
கொவ்வைச் செவ்வாய் வழி அவர் உதிர்த்தவை
மணிகள் மாணிக்க மொழிகளே !
அதியற் புத நாயகர் விழிகளைத் திறந்ததில்
கிடைத்தவை ஆயிரம் வரங்களே !
ஒவ்வொரு வியாழனும் தரிசனம் செய்திடில்
கிட்டிடும் ஆசிகள் கோடிகளே
விடிவெள்ளியைப் போல வந்தவர் தந்தவை
விதியையும் வெல்லும் பேரருளே!
ஈசநீ  எங்கள் அம்மையும் அப்பரும்
என்றெண்ணி அனுதினம் வணங்குவமே!
ஞாயிறு ஒளி போல் எங்கள் வாழ்வும்
சுடர் விட உன் பதம் பணிவோமே !
தீரா குறைகளை தீர்ப்பவன் நீ என
ஓராயிரம் உன் நாமம் சொல்வோம் !
எமக்கே துணை நீயே என்றும் இருந்திடில்
பயமில்லை பயமில்லை பயம்  என்றுமில்லை

ராஜாதி ராஜா யோகிராஜ குரு நீ !
ரவி சந்திர மங்கல புத
குரு வெள்ளி சனி பாம்பிரெண்டும்
சுபமே செய்திட
நவக்ரஹ பலன்களையும்
நீயே தரும் குரு நீ !

சமஸ்த சத்குரு சாயி நாத பிரபு நீ !
ராஜாதி ராஜா யோகிராஜ குரு நீ !
Monday, December 13, 2010

ஸ்ரீ சாயி துதி பாடல்கள் - 8

ஓடக்காரர் சாய்

மனமென்னும் தோணி ஏறி
சினமென்னும் துடுப்பிட்டு
பேராசைச் சரக்கேற்றி
ஆணவமாய்க் கடலாடும்
வாழ்க்கைப் பயணமதில்
துன்பப் புயல் தாக்கி
துயரப் பாறையிலே
மோதிடும் வேளை

ஏலே ஏலே ஏலேலேலேலோ
ஐலசாஐலசா
வந்திடுவான் சாயீசா சாயீசா

கருணை எனும் தோணியிலே

அன்பென்னும் துடுப்பிட்டு
ஆசி எனும் சரக்கிட்டு
வந்திடுவான் ஓடக்காரன்
காத்திடுவான் சாய் ராமன் .

ஏலே ஏலே ஏலேலேலேலோ
ஐலசா ஐலசா
வந்திடுவான் சாயீசா சாயீசா

வாழ்வெனு மாயச் சுழலிலே சிக்கி
வாழ்வாதாரம் துழாவிக் களைத்து
மாய்வோமோ எனத் திகைத்து விழித்து
ஓய்ந்திடும் வேளை தேடி வருவான்
பாய்மரக் கப்பலில் ஏற்றிட வருவான்

ஏலே ஏலே ஏலேலேலேலோ

ஐலசா ஐலசா
வந்திடுவான் சாயீசா சாயீசா

சாய் சாய் சாய் என்று
 என்றும் செபித்தால்
முன் பல பின் பல
சென்மம் எடுத்தால்
முதலிலும் முடிவிலும்
வாய் மறவாது.

ஏலே ஏலே ஏலேலேலேலோ
ஐலசா ஐலசா
சொல்லிடுவோம் சாயீசா சாயீசா

Tuesday, December 07, 2010

ஸ்ரீ சாயி துதி பாடல்கள் - 7

அன்னபூர்னேஸ்வரி சாய்

இன்னம் வேண்டும் என்றிட வைக்கும் பொருளும் அருளுமே.
இன்னம் வேண்டாம் என்றிட வைக்கும் அறுசுவை அன்னமே.
என்றென்றைக்கும் தேவை நமக்கு அருளும் பொருளுமே.
இன்றைக்காவது போதும் என்றிட அறுசுவை அன்னமே.

காசிமானகரிலுன் சீரடி பதித்தாய் அன்னபூரணியாய்
காசிவிச்வேஷ்வரன் சாபம் தீர்த்தாய்  அன்னபூரனியாய்
சீரடி நகரிலுன் சீரடி பதித்தாய் அன்னபூரனியாய்
சீரடி அன்பர்கள் சாபம் தீர்த்தாய் அன்ன பூரணியாய்

அன்னையே தாயே என்றே தினமும் குவளை ஏந்தினாய் நீ
அன்னமிட்டோரை வாழ்த்தி அவர்தம் சாபம் நீக்கினாய் நீ
அன்னையின் பரிவுடன் உன்னிரு கரங்களால் அன்னம் கலந்தாய்  நீ
அன்பர்கள் இன்றி மன்னுயிர் அனைத்துக்கும்  அன்னம் இட்டாய் நீ

முன்னை கருமம் பின்வந்திடினும் இன்னல்கள்  பல தொடர்ந்திடினும் 
பன்மடங்காய் பரிகாரம் செய்த    நன்மை கோடி பலனிதற்கு
உன்னை நாடி பசியென கேட்டு எதுவோ எவரோ வந்திடினும் 
அன்னம் இட்டிட முன் வந்தால்   சிறந்தது அதுவே என்றாய் நீ.

'மன்னுயிர் யாவிலும் யானே உள்ளேன் என்பதை   உணர்' என்றாய் நீ
'அன்னம் இடுதலில் பேதம் தவறு என்பதை   உணர்' என்றாய் நீ
இன்னுயிர்க்  காத்து துன்பம் தீர்க்கும் சாயி அன்னை  பூரணி நீ
கன்றிடம் பசுவாய் கருணை செய்வாய் சாயி அன்னை  பூரணி நீ

அன்ன பூரணி நீ சாயி பூரணி நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
அன்ன பூரணி நீ சாயி பூரணி நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீWednesday, December 01, 2010

ஸ்ரீ சாயி துதி பாடல்கள் - 6

ஒ அம்மா ! ஒரு துண்டு ரொட்டி தாருங்கள்
 
ஸ்ரீ சாயீஸ்வரா சிவா! பிட்சாடனா சிவா !


பித்தாபிறை சூடிபெரு மானேசிவ பெருமானே
பித்தனென்றுனை அழைத்தோர்பக வானேசாயி பகவானே

பிட்டுக்குமண் சுமந்தோன்பெரு  மானேசிவ பெருமானே
கட்டுக்குகோதி அரைத்தோன் -நோய்
கட்டுக்குகோதி அரைத்தோன்பக வானேசாயி பகவானே

பிட்சாடனரென்றுனை அழைப்போர்பெரு மானேசிவ பெருமானே
பிச்சை பாத்திரம் சுமந்தோன் - தினம்
பிச்சை பாத்திரம் சுமந்தோன்பக  வானேசாய்பகவானே

வில்வத்துக்குயர் வளித்தோன்பெரு மானேசிவ பெருமானே
வேம்புக்குஇனிப் பளித்தோன் - தல
வேம்புக்குஇனிப் பளித்தோன்பக வானேசாய்பகவானே

சிரமதில் கங்கை தரித்தோன்பெரு மானேசிவ பெருமானே
சிரடிக்கு வர  வழைத்தான்பக வானே சாய் பகவானே - அதை
சிரடிக்குவர  வழைத்தான் பக வானே சாய் பகவானே

திருநீரணிந்து இருப்பான்பெரு மானேசிவ பெருமானே
திருநீரளித்து காப்பான் - உதி
திருநீரளித்து காப்பான்பக வானேசாய்பகவானேசிவ சிவ சிவ சிவ சாம்ப சிவ
சிவ சிவ சிவ சிவ சாயி சிவ
சிவ சிவ ஹர ஹர சாயி சிவ
ஹர ஹர சிவ சிவ சாயி சிவ