Tuesday, December 07, 2010

ஸ்ரீ சாயி துதி பாடல்கள் - 7

அன்னபூர்னேஸ்வரி சாய்

இன்னம் வேண்டும் என்றிட வைக்கும் பொருளும் அருளுமே.
இன்னம் வேண்டாம் என்றிட வைக்கும் அறுசுவை அன்னமே.
என்றென்றைக்கும் தேவை நமக்கு அருளும் பொருளுமே.
இன்றைக்காவது போதும் என்றிட அறுசுவை அன்னமே.

காசிமானகரிலுன் சீரடி பதித்தாய் அன்னபூரணியாய்
காசிவிச்வேஷ்வரன் சாபம் தீர்த்தாய்  அன்னபூரனியாய்
சீரடி நகரிலுன் சீரடி பதித்தாய் அன்னபூரனியாய்
சீரடி அன்பர்கள் சாபம் தீர்த்தாய் அன்ன பூரணியாய்

அன்னையே தாயே என்றே தினமும் குவளை ஏந்தினாய் நீ
அன்னமிட்டோரை வாழ்த்தி அவர்தம் சாபம் நீக்கினாய் நீ
அன்னையின் பரிவுடன் உன்னிரு கரங்களால் அன்னம் கலந்தாய்  நீ
அன்பர்கள் இன்றி மன்னுயிர் அனைத்துக்கும்  அன்னம் இட்டாய் நீ

முன்னை கருமம் பின்வந்திடினும் இன்னல்கள்  பல தொடர்ந்திடினும் 
பன்மடங்காய் பரிகாரம் செய்த    நன்மை கோடி பலனிதற்கு
உன்னை நாடி பசியென கேட்டு எதுவோ எவரோ வந்திடினும் 
அன்னம் இட்டிட முன் வந்தால்   சிறந்தது அதுவே என்றாய் நீ.

'மன்னுயிர் யாவிலும் யானே உள்ளேன் என்பதை   உணர்' என்றாய் நீ
'அன்னம் இடுதலில் பேதம் தவறு என்பதை   உணர்' என்றாய் நீ
இன்னுயிர்க்  காத்து துன்பம் தீர்க்கும் சாயி அன்னை  பூரணி நீ
கன்றிடம் பசுவாய் கருணை செய்வாய் சாயி அன்னை  பூரணி நீ

அன்ன பூரணி நீ சாயி பூரணி நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
அன்ன பூரணி நீ சாயி பூரணி நீ ஜகத் காரணி நீ பரிபூரணி நீ



















6 comments:

sury said...

எல்லாக் கடவுளர்களித்தேயும் ஷீரடி சாயி பகவனையே பார்க்கும்
உங்கள் மன நிலை என்னை பிரமிக்க வைக்கிறது.

யதேச்சையாக சற்று நேரம் முன்பு, ஒரு 10 நிமிடம் முன்பாக,
என் தங்கைக்கு கைபேசி மூலம் தொடர்ந்து கொண்டபோது, அவள்
என் தம்பி, மற்றும், அவள் பெண்ணுடன், மயிலையில் உள்ள சாயி பாபா
கோவிலில் இருப்பதாகச் சொன்னாள்.

அதைப்பேசி முடித்தபின், இங்கு என்னுடைய கணினியை திறந்து
பார்த்தால், சாயி அன்ன பூரணியாக ஆசி தருகிறார்.

இது ஒரு ஜஸ்ட் கோஇன்ஸிடன்ஸ் என்று சொல்லிவிட மனம் இடம் தரவில்லை.

ஷீரடி பாபா !! உன் காலடியில் எனக்கு ஒரு அடி இடம் தா பாபா !!

சுப்பு ரத்தினம்.
http://pureaanmeekam.blogspot.com

Siva said...

A very nice one. Pranaams to Saibaba.

Kala BN said...

sury
சாய் பிரத்யட்ச தெய்வம் என்பார்கள்.பகுத்தறிவாளர்கள் தற்செயல் என்பது ஆன்மீக அனுபவம் பெற்றால் தெய்வச் செயல் என்போம்.
சாய் அநுக்ரகம் உங்களுக்கு இருப்பது நீங்கள் சொன்ன நிகழ்வுகள் மூலம் தெரிகிறது.சாய் ராம்.

Kala BN said...

siva
Thank you.Sai ram.

sury said...

Just a few minutes ago, i rang up to my sister as to when she returned from shirdi sai temple in the morning. For my query, she said, actually she had gone there to distribute sadham ( curd bath) for the people there, today being the anniversary day of our father.
I cannot help informing this to you as you have portrayed the Saint as the annapoorani Sai.
Usually, the devotees get the prasadam but I do not know whether the beggars/poor ones sitting on the platforms also get it. Possibly today, Bhagwan Sai shirdi baba thought they should have some .
subbu rathinam

Kala BN said...

Thanks for sharing.When annadhanam is done every one gets sai's prasadam.