Wednesday, January 19, 2011

ஸ்ரீ ஷிர்டி சாயி துதிகள் - 13

சாயி ராம நாமம் 

ராம ராம ஜெயா ஸ்ரீ சாயி ராம் 
ராம ராம ஜெயா ஓம் சாய் ராம்

சீரடி மண்ணிலே நிலைத்தவராம்
சீரடியால் நம்மை ஆள்பவராம்
தீரா நோய்களைத் தீர்ப்பவராம் 
நேரா துன்பமென் ரருள்பவராம்

ராம ராம ஜெயா ஸ்ரீ சாயி ராம் 
ராம ராம ஜெயா ஓம் சாய் ராம்

சுமைகளை அவரே சுமப்பாராம் 
அமைதிக்கு அவர் வழி வகுப்பாராம் 
நம் விதியை அருளால் மாற்றுவராம் 
தம்மைத் துதிப்போர்க்கென்றும்  ஜீவிதராம் 

ராம ராம ஜெயா ஸ்ரீ சாய் ராம்
ராம ராம ஜெயா ஓம் சாய் ராம் 

ஜோதிடம் மறுத்ததை நல்குவராம் 
ஜோதியாய் என்றும் ஒளிரபவராம்
வற்றிய  பாலையை நிரப்பினராம்
பற்றிய தீயையும் அணைத்தவராம்

ராம ராம ஜெயா ஸ்ரீ சாய் ராம்
ராம ராம ஜெயா ஓம் சாய் ராம்

தண்ணீரில் தீபம் ஏற்றினாராம்
எண்ணிலா லீலைகள் புரிந்தவராம் 
அல்லா ஹரியே என்றாராம்
பொல்லா த்வேஷம் என்றாராம் 


ராம ராம ஜெயா ஸ்ரீ சாய் ராம்
ராம ராம ஜெயா ஓம் சாய் ராம்

கங்கினுள் கரங்களை இட்டாராம் 
ஆங்கோர் மழலையைக் காத்தாராம் 
தூய்மையாய் பக்தி செய் என்றாராம்
மெய்ஞானம் தரும் என்றாராம் 


ராம ராம ஜெயா ஸ்ரீ சாய் ராம்
ராம ராம ஜெயா ஓம் சாய் ராம்

குரு சேவை செய் என்றாராம்
தருமது விநயம் என்றாராம்
குல தெய்வம் தொழு  என்றாராம்
பலமது அகத்திற் கென்றாராம்


ராம ராம ஜெயா ஸ்ரீ சாய் ராம்
ராம ராம ஜெயா ஓம் சாய் ராம்

த்யானம் செய்திடு என்றவராம்
ஞானத்தால் கர்மத்தை பொடிப்பாராம்
யாமிருக்க  பயமில்லை என்றாராம்
ஓயாதென் நாமம் சொல் என்றாராம் 

ராம ராம ஜெயா ஸ்ரீ சாய் ராம்
ராம ராம ஜெயா ஓம் சாய் ராம்

ஆசை அஹங்காரம் அழித்தாராம் 
நேசமாய்  பக்தியை தூவினாராம்
பக்தர்கள் மனதில் உறைபவராம்
முக்திக்கு வழியை காட்டுவாராம் 

ராம ராம ஜெயா ஸ்ரீ சாய் ராம்
ராம ராம ஜெயா ஓம் சாய் ராம்

செல்வம் காமம் தீதேன்றாராம் 
எல்லாம் மாயைதான் என்றாராம்
தானம் கருணை நன் றேன்றாராம்
மௌனம் பொறுமை நலமென்றாராம்

ராம ராம ஜெயா ஸ்ரீ சாய் ராம்
ராம ராம ஜெயா ஓம் சாய் ராம்

குரு தட்சணை ரெண்டு கேட்பாராம் 
ஷ்ரத்தா சபூரி என்பாராம்
பரிபூரணமாய் வாழ்வீராம்
பாதங்களை சரணடை வீராம் 

ராம ராம ஜெயா ஸ்ரீ சாய் ராம்
ராம ராம ஜெயா ஓம் சாய் ராம்
ஸ்ரீ சாயி ராம் ஜெயா சாய் ராம் 

Wednesday, January 12, 2011

ஸ்ரீ சாயி துதிகள் - 12

குருவருள் திருவருள்

நிலையானது அந்த  குருவின் அருள் - என்றும்
நிலையானது அந்த குருவின் அருள் 
நிலையற்றதென்றும கை  மாறும் பொருள்

தொழுதல் செய்யா  சிந்தை  பயனில்லைதான்  - அவனை
 தொழுதல் செய்யா  சிந்தை  பயனில்லைதான்
உழுதல் செய்யா விதைத்தால்  பயனில்லைதான்

புடமிட்ட தங்கமென ஜ்வலிக்க வைப்பார் -நமை
புடமிட்ட தங்கமென ஜ்வலிக்க வைப்பார்
தடங்கல் தந்தவனடியை சேர வைப்பார்

மலை போல துன்பங்கள் மலைக்க  வைக்கும் - மா
 மலை போல துன்பங்கள் மலைக்க  வைக்கும்
மலையையே குடையாக்கி நமைக் காப்பார்.

மனம் வாக்கு காயமுமே பழுதடையும் - நம்
மனம் வாக்கு காயமுமே பழுதடையும்
ஞான குரு அதனை  சீராக்கி  வணங்க வைப்பார்.

மனம் பதறாதே நிலை குலையாதே - என்றும்
மனம் பதறாதே நிலை குலையாதே
சாய் நாமம் துதித்தாலே போதுமப்பா.

சாயி ராமன் தாள் பணிவோம் 
சாய் நாதன் நாமம் சொல்வோம்
கரம் கூப்பி தொழுதிடுவோம்
சிரம் தாழ்த்தி வணங்கிடுவோம் 
Saturday, January 01, 2011

ஸ்ரீ சாயி துதிகள் - 11

தா என்று கேளேன் இனி

குருவெனும் அருளுலை ஒளிக்கங்கு பட்டறையில் 
செருக்கெனும் இரும்பாகிய எனையிட்டு
குருஉரைஎனும் செம்மட்டியால்  தகடாகி
இறுதியில் நான் இளகில் ஆன்ம ஞானமே.

என்னை வெளியகற்றி உன்னை உள்ளிறுத்தி
நான் நீயாகிடில் எனக்கென்று கேட்கும்
தன்னாசை இச்சைகள் வெளிப்போந்து
உன்நாமம் சொல்லுதல் எளிதன்றோ?

சொல்லின் நீ மனமுவந்து செய்வாய்
அல்லல் படும் இப்பிறவி  துயர்அறுத்து
வல்வினை நான் செய்த முன்பிறவியும் சேர்த்து
எல்லா வல்லமையும் கொடுத்து அணைப்பாய்

நானாக நானில்லை எனும்போது
தேனான உன் நாமம்  சொலும்போது
நானெந்த தீவினையும் எஞ்ஞனம் செய்திடுவேன்?
ஆனந்த பேரின்ப பேரருள் வெள்ளந்தான்.

எல்லோருக்கும் ஒரீசன் அவனே நமக்கு எஜமானன் 
என்றே சொன்னார் குருபரனாம் 
சாய் ராமெனும் சத்குருவாம்
எல்லாம் நீயே சர்வேசா
 எல்லாருக்கும் நீஈசா 
ஒன்றாய் சொல்வோம் சாய் நாமம் 
சாய் ராம் சாய் ராம் சாய் ராம