Saturday, April 30, 2011

ரங்கா ரங்கா விட்டலா சாய் ரங்கா விட்டலா




ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம் ஓம் ஹரி ஓம்

ரங்கா ரங்கா விட்டலா பாண்டு ரங்கா விட்டலா
ரங்கா ரங்கா விட்டலா சாய் ரங்கா விட்டலா
ரங்கா ரங்கா பாண்டு ரங்கா
ரங்கா ரங்கா சாய் ரங்கா
பண்டரினாதா பாண்டு ரங்கா
சீரடி நாதா சாய் ரங்கா

செங்கண் மாலவன்   தரிசனம் தருகையில்
ஆங்கே நில்லேன செங்கல்லை எறிந்து
பாங்காய் தந்தை தாய்க்குப் பணி செய்த
ஆங்கோர் பக்தன் புண்டரீகனாம்
ஓங்கி உலகளந்த அச்சுதன் அதனால்
செங்கல் மேல் நின்று விட்டலனானான்.

ரங்கா ரங்கா விட்டலா
பாண்டு ரங்கா விட்டலா

சங்கு சக்ரம் போல் சுழன்றே வந்த
செங்கல்லைத்தன் தவத்தால் நிறுத்தி
பாங்காய் குருவிற்குப் பணிவிடை செய்த
தங்கத் திருமகன் சாய்நாதனை
வேங்குசா குருபரர் காத்தருளியதால்
செங்கல்லே சாய் தலையணை ஆனதாம்

ரங்கா ரங்கா விட்டலா
சாய் ரங்கா விட்டலா


ரங்கா விட்டல னென்றும் ரங்கா சாய் என்றும்
கரங்களைக் கூப்பி நாமம் சொல்லும்போது
பொங்கும் அமைதியதில் ரெண்டும் ஒன்றென
ரங்கா விடலனே ரங்கா சாய் என்றும்
ரங்கா சாய் ரங்கா விட்டல னென்றும்
அங்கம் முழுதையும் வீழ்த்தி பணிவோமே

Thursday, April 21, 2011

ஸ்ரீ சாயியைப் பணிந்தேன்


   ஓம் ஸ்ரீ சாய் ராம் ராம் ராம் jeya  ஸ்ரீ சாய் ராம் ராம்
ஓம் ஸ்ரீ சாய் ராம் ராம் ராம் ஜெய ஸ்ரீ சாய் ராம் ராம்
 ஓம்ஸ்ரீ  சாய் ராம் ராம்  சத்குரு சாய் ராம் ராம்
சாய் ராம் சாயிராம் சாய்ராம் சாய் ராம்

பணிந்தேன் உந்தன் பாத மலரதனை
அடைந்தேன்  எந்தன் பிறவி பயனதை
சாய் ராம் சாய் ராம்
சாய் ராம் சாய் ராம்

துதித்தேன் உந்தன் திரு உருவதை
குவித்தேன் எந்தன் கரங்களாமதை
சாய் ராம் சாய் ராம்
சாய் ராம் சாய் ராம்


பார்த்தேன் உந்தன் கருணை விழியதனை
மறந்தேன் எந்தன் பெரும் துயர்தனை
சாய்ராம் சாய்ராம்
சாய்ராம் சாய்ராம்

கேட்டேன் உந்தன் தூய நாமந்தனை
சிலிர்த்தேன்  எந்தன் எளிய மெய்தனை
சாய்ராம் சாய்ராம்
சாய்ராம் சாய்ராம்

பிடித்தேன் உந்தன் கமல கரந்தனை
அர்ப்பணித்தேன் எந்தன் உடல் பொருள்தனை
சாய்ராம் சாய்ராம்
சாய்ராம் சாய்ராம்

 

Monday, April 11, 2011

ஸ்ரீ சாயிராம நவமி

ராமனை நினை மனமே - ஸ்ரீ
ராமனை நினை மனமே - சாய்
ராமனை நினை மனமே -எந்நேரமும்
ராமனை பணி மனமே.

ராமும் ரஹீமும் ஒன்றென உரைத்து
ஒற்றுமை பெருகிட உயர்வழி காட்டிய

ஒருமையும் பொறுமையும் நன்றென  நவின்று
தக்ஷிணை பெற்று நல்வழி காட்டிய

குரு தாள் பணிந்து குருசேவை செய்தே
முக்தியடையும் நெறி வழி காட்டிய

அன்னையைப் போலே அன்புடன் அனைவர்க்கும்
அன்னம் கலந்து அறவழி காட்டிய

அருமருந்தாகிய திரு உதி அளித்து
நோய்களை நீக்கி செவ்வழி காட்டிய

யாமிருக்கையிலே பயம் எதற்கென்று 
அபயம்  அளித்து  திரு கரம் காட்டிய

இகபர இச்சைகள் இனி நம்மை விட்டிட
கண்கண்ட தெய்வமாய் கலியுகம் காட்டிய

சீரடி மண்ணில் காலடி வைத்தால்
ஓடிடும் துன்பங்கள் என வழி காட்டிய

நவவித பக்தி என்றவர் தொகுத்திட்டு
நவமணி மாலையாய் நல்கிய சத்குரு

ராமனை நினை மனமே - ஸ்ரீ

ராமனை நினை மனமே - சாய்

ராமனை நினை மனமே -எந்நேரமும்
ராமனை பணி மனமே






Saturday, April 02, 2011

அவரருள் கேளுங்கள்

அவரருள் கேளுங்கள்


கேட்டதும் கொடுப்பவன் சாய்ராமன்
கேட்டதைக் கொடுப்பவனே

கேளுங்கள் அவரைக் கேளுங்கள்
கேளுங்கள் அவரருள்கேளுங்கள்

நினைத்ததும் கொடுப்பவன் சாய்ராமன்
நினைத்ததைக் கொடுப்பவனே

கேளுங்கள் அவரைக் கேளுங்கள்
கேளுங்கள் அவரருள் கேளுங்கள்

கேட்டது கிடைத்தால் கேட்டதும் கிடைத்தால்
நினைத்தது கிடைத்தால் நினைத்ததும் கிடைத்தால்

பணியுங்கள் அவரைப் பணியுங்கள்
பணியுங்கள் அவரடி பணியுங்கள்.