Sunday, May 15, 2011

சாய் நாமம் கற்கண்டு நாமம்

video
கற்கண்டாய் இனிப்பதெது  உந்தன் நாமம் அதுவே
உந்தன் நாமம் சொல்லாத நா என்ன நாவோ
தேனமுதாய் பாய்வதெது உந்தன் நாமம் அதுவே
உந்தன் நாமம் கேளாத செவி என்ன செவியோ
சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம்

கதிரவன்  போல் ஒளிர்வதெது உந்தன் உருவம் அதுவே
உந்தன் உருவம் காணாத விழி என்ன விழியோ
தாய்மை பாசம் பொழிவதெது உந்தன் விழியின் கனிவே
உந்தன் கனிவில் இளகாத மனம் என்ன மனமோ
சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம்

சுகமளிக்கும் கீதமேது உந்தன் ஆசி அருளே
உந்தன்  அருளில் மூழ்காத வாழ்வென்ன வாழ்வோ
மெய்ஞானம் தருவதெது உந்தன் பாத தடமே
உந்தன் பாதம் வீழாத மெய் எனா மெய்யோ
சாய்ராம் சாய்ராம் சாய் ராம் சாய் ராம் சாய்ராம்









Tuesday, May 10, 2011

சாய்க்கு ஆராதனை

video
சமஸ்த சத்குரு ஸ்ரீ சாயி நாதா மகாராஜ் கீ ஜெய்



ஆராதனை செய்வோம்

ஆராதனை செய்வோம் -சாய்க்கு

ஆராதனை செய்வோம்



ஆனந்த கண்ணீரால் அபிஷேகம் செய்து

அன்பென்னும் சந்தனத்தை மேனிக்குப் பூசி

உண்மையையும் நம்பிக்கையையும் மேலங்கி ஆக்கி

எட்டுவித உணர்ச்சிகளால் மலர் மாலை சாத்தி (ஆராதனை)



ஒருமையையும் பொறுமையும் பழத்தட்டில் வைத்து

பக்தி எனும் நறுமண பொடியைத் தலைக்கிட்டு

பற்றென்னும் ஆடையை இடுப்பில் அணிவித்து

அகம்பாவத்தைக் கோர்த்து அணிமணிகளாக்கி (ஆராதனை)



அகங்குளிர அருள்வேண்டி சாமரம் வீசி

ஆன்மா மெய் ரெண்டினையும் நிவேதனமாய் படைத்து

நன்றியையே இசையாக்கி ஆரத்தி எடுத்து

திருப்பாத கமலத்தில் தலையை சாய்ப்போம் (ஆராதனை)


நன்றி: ஸ்ரீ சாய் சத் சரிதத்தில் திரு ஹெமட்பந்த் அவர்கள் இப்படி ஒரு ஆராதனை முறையை கொடுத்துள்ளார்.
எனக்கு திரு சாய் அருள் செய்து என் வேண்டுகோளை நிறைவேற்றியதால்
நன்றியையே இசையாக்கி ஆரத்தி எடுத்து

திருப்பாத கமலத்தில் தலையை சாய்ப்போம் (ஆராதனை)
என்ற வரியை நான் சேர்த்து ஆராதனை செய்திருக்கிறேன்.