Sunday, May 15, 2011

சாய் நாமம் கற்கண்டு நாமம்

கற்கண்டாய் இனிப்பதெது  உந்தன் நாமம் அதுவே
உந்தன் நாமம் சொல்லாத நா என்ன நாவோ
தேனமுதாய் பாய்வதெது உந்தன் நாமம் அதுவே
உந்தன் நாமம் கேளாத செவி என்ன செவியோ
சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம்

கதிரவன்  போல் ஒளிர்வதெது உந்தன் உருவம் அதுவே
உந்தன் உருவம் காணாத விழி என்ன விழியோ
தாய்மை பாசம் பொழிவதெது உந்தன் விழியின் கனிவே
உந்தன் கனிவில் இளகாத மனம் என்ன மனமோ
சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம்

சுகமளிக்கும் கீதமேது உந்தன் ஆசி அருளே
உந்தன்  அருளில் மூழ்காத வாழ்வென்ன வாழ்வோ
மெய்ஞானம் தருவதெது உந்தன் பாத தடமே
உந்தன் பாதம் வீழாத மெய் எனா மெய்யோ
சாய்ராம் சாய்ராம் சாய் ராம் சாய் ராம் சாய்ராம்









No comments: