Friday, July 15, 2011

உந்திருமுகம் கண்டேன்..




உதித்தெழுந்த சூரியனில் உந்திருமுகம் கண்டேன்
கதிநீயே எனக்கரங்கள் கூப்பி உனைத் தொழுதேன்
ஜோதி ஒன்று அகலில் இட்டுன் சன்னதியில் வைத்தேன்
சாயி எங்கும் எதிலும் உன் அருளே அப்பா
குதித்தோடும் அருவியிலே உந்திருமுகம் கண்டேன்
அதிகாலை பொழுதினிலே கலத்தில் அதை பிடித்தேன்
வார்த்ததனை உன்மீது அபிஷேகம் செய்தேன்
சாயி எங்கும் எதிலும் உன் அருளே அப்பா
பூத்திருந்த மலர்களிலே உந்திருமுகம் கண்டேன்
எத்திசையும் மணம் பரப்பும் மலர்களை நான் பறித்தேன்
கோர்த்ததனைச் சரமாக்கி உன் கழுத்தில் இட்டேன்
சாயி எங்கும் எதிலும் உன் அருளே அப்பா
பக்தி கான கோஷ்டயிடை உந்திருமுகம் கண்டேன்
முக்தி தரும் உன் நாம சப்தமும் நான் செய்தேன்
சத்குரு உனைப் பாடி மகிழ சக்தி எனக்கு தந்தால்
இத்தரையில் வேறெந்த சுகமும் நானும் வேண்டேன்
ஓம் சாயி ஸ்ரீ சாய் ஷிர்டி சாயி நாதா
ஓம் சாயி ஸ்ரீ சாயி சத்குரு சாயி நாதா