Wednesday, October 05, 2011

sri sai navamani maalaa -navarathri bhajan -9

 
தெவிட்டாத தேனமுதாய் அருளமுதம் தந்தாய்


செவிக்கினிது இறை நாமம் நிறை என்று சொன்னாய்



மணமுள்ள மலர்களே கீர்த்தனைகள் என்றாய்

வணங்கித் தினம் துதித்தே பாடிடவும் சொன்னாய்



மணிமாலை கோர்த்திடல் போல் இறை நாமம் என்றாய்

எண்ணிடுக சிதறாமல் அவன் நாமம் என்றாய்



 தடுத்து ஆளும்  வல்லோன்அவனென்று சொன்னாய்

உடும்பெனவே பற்றிடுக பாதங்களை என்றாய்



பலமுறைதான் அர்ச்சிக்க அவன் நாமம் என்றாய்

பலம் தந்து காத்திடுவான் அவனென்று சொன்னாய்



தரை மீது உடல் பதித்தே வணங்கிடவே சொன்னாய்

வரை இல்லை அவன் கருணை நிச்சயம்தான் என்றாய்



கண்ணனிடம் கோபியர் போல் நட்பாகு என்றாய்

எண்ணங்களே புனிதமாகும் அறிவாய் நீ என்றாய்



சேவை செய் சேவகனாய் மனம் குளிரும் என்றாய்

தேவை ஏதுமில்லை என உணர்வாய் நீ என்றாய்



ஆத்மா நிவேதனமே முக்தி என்று சொன்னாய்

உத்தமர்கள் செல்லும் வழி இதுவென்று சொன்னாய்



No comments: